Friday, August 12, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (401-444) - பாகம் 5


இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (401-444) - பாகம் 5

(301-400) பாகம் 4 ஐப் படிக்க    http://ambedhan.blogspot.com/2011/08/301-400-4.html
(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க ..  http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html


அ.வெற்றிவிழா மற்றும் மறுப்பு

401. எல்...ஈ. இன் அழிவுக்கு வழிகோலும் வியூகங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகத்தவர்களை உள்ளிட்ட அரசாங்கம் இலங்கையின் பிரஜைகள் பலரும் முப்பது ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் இராணுவ தியாக எல்...ஈ.

தோற்கடிக்கப்பட்டதையிட்டு நிம்மதியடைந்தனர் என்பது கண்கூடாகும்.

ஆயினும், அரசாங்கம் அதன் இராணுவ வெற்றியை வெற்றிக் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்காகப் பிரயோகித்து அதன்மூலம் "பயங்கரவாதத்தை' ஒழிப்பதற்கான வழியையும் மனவுறுதியையும் தான் அபிவிருத்தி செய்துள்ளதாக மார்தட்டுகிறது. எல்...ஈ. இன் தோல்வி நியாயமான சகல தமிழ் அரசியல் அபிலாஷைகளின் தோல்வியென்பதாகவே அத்தகைய சிங்களப் பெரும்பான்மை என்ற சொற்றொடர்கள் எடுத்துக் காட்டுவதாகவுள்ளன.

402. மேலும், வன்னியில் "பூஜ்ய மனித சேதம்' என்ற கோட்பாடொன்றினல் வழிநடாத்தப்பட்டு "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' ஒன்றினை அது மேற்கொண்டதாகக் கூறும் அரசாங்கம் அதன் இராணுவ வியூகத்தின் மனித இழப்பை மறுக்கிறது. அத்தோடு, யுத்தம் டிவடைந்த பின்னர், வேறொரு பகுப்பாய்வினைக் கொண்டிருப்போர் மற்றும் பாரிய சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் நேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டுபவர்கள் எல்...ஈ. ஆதரவாளர்களின் செல்வாக்கினால் தவறான வழியில் செலுத்தப்பட்டு தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர் என அரசாங்கம் உறுதியாகக் கூறி வருகிறது.

403. எல்...ஈ. இன் தோல்விக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் மற்றும் அதனை உடன் தொடர்ந்த நிலைமை அரசாங்கம் கூறுவதை விட மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்பதை இவ்வறிக்கை தெளிவு படுத்துகிறது என்பது குழுவின் கருத்தாகும்.

வன்னியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன என்பதை மறுப்பதன் மூலம், அநேகமாக அங்கு கொல்லப்பட்ட தமிழர்களாகிய இலங்கையரின் உயிர்கள் சமூகத்துக்குப் பெறுமதியற்றது என்ற செய்தியை அரசாங்கம் விடுப்பதாக அமைகிறது. தனது இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறுப்பதன்மூலம் அக்கருத்துக்குச் சவால் விடுபவர்களை அச்சுறுத்தி மிரட்டுவதன் லம், அண்மிய கடந்த காலத்தைப் பற்றி மற்றும் எதிர்காலத் தேவைகள் பற்றி பாரிய தொரு தேசிய கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் அப்படியே இழப்பதாக அமைகிறது. தீவிரவாதம் வெற்றிக் கொண்டாட்டங்களும் நிலைத்தகவுள்ள தடைகள் என்பதை இனங்காணும் அதே வேளையில், எதிர்காலத்தில் இலங்கையர் இத்தடைகளைக் களைந்து கடந்த காலம் பற்றிய ஒளிவுமறைவற்ற பரிசீலனை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்து குழுவுக்குத் தெளிவாகிறது.

(137) ஆ.இனத்துவத்தின் அடிப்படையிலான விலக்கி வைக்கும் கொள்கைகள் 404. நிஜ அல்லது உணர்வினாலான அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் புறந்தள்ளல் இலங்கையின் மோதலின் மையமாக உள்ளது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளிட்ட சகல சமூகங்களினதும், அவர்கள் முழுமையான பிரஜைகள் என்ற அடிப்படையில், உரிமைகளை இனங்கண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதை இலங்கையின் மீளிணக்கப்பாடு தேவைப்படுத்துகிறது.

ஆதங்கங்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழியாக நிலைச்சக்தியைக் கொண்ட வன்முறை மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு எதிர்காலக் கொள்கைகள் சகலரையும் உள்ளிட்டதாக இருத்தல் வேண்டும்.

405.
காணி மற்றும் மொழி தொடர்பான, அவற்றுள் காணிக்கச்சே அத்துடன் இலங்கையின் மும்மொழிக் கொள்கைக்கேற்ப மொழி உரிமையை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி.யின் இடைக்கால பரிந்துரைகள் சில முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குகிறது என்பது அரசாங்கத்தின் கருத்தாகும். ஆயினும், முஸ்லிம்களை உள்ளிட்ட தமிழர்கள் மற்றும் ஏனையோரை மேலும் மனமுறிவுக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் ஏனைய கொள்கைகள் இதற்கு மாற்றமாக இருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக, அதன் உத்தியோகபூர்வ நிலைக்கு மாற்றமாக, தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என்ற கொள்கை தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களைப் புறந்தள்ளும் ஒரு செய்தியை விடுப்பதால் அது முற்றிலும் மாற்றப்பட வேண்டும். இது போன்ற பாரபட்சம், சகல பிரஜைகளினதும் உரிமைகள் மற்றும் கௌரவத்தை உதாசீனப்படுத்துவதாக உள்ளதோடு, புறந்தள்ளும் மனநிலையின் தொடர்ச்சியை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நிலைச்சக்தியுள்ள பாரபட்சத் தன்மை கொண்ட அத்தகைய அண்மைக்கால தீர்மானங்களை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

406.
துரிதமாக உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மற்றும் நியாயமான அடிப்படையில் காணி அத்துடன் வீடமைப்பினை ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை உள்ளிட்டவை விரும்பத்தக்க மேலும் உள்ளடங்கலான கொள்கைகளுக்கான நடவடிக்கைககளா கும் பாதுகாப்புத் துறையை உள்ளிட்ட சகல துறைகளையும் சார்ந்த அரசாங்கச் சேவைக்கு தமிழ் பேசுபவர்கள் இலகுவாக நுழையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கப் படவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் சமூக அங்கத்தவர்கள் காவல்துறைச் சேவையில் அண்மையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது காத்திரமானதொரு செயலாக இருக்கும் அதே வேளையில், யுத்தத்தின் போது துணைப்படைக் குழுக்களாக பாரிய மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஆயுதப் படைத்தரப்புக்கு தமிழர்களைச் சேர்த்துக் கொள்வதும் அதே போன்று முக்கியமானதாகும். நீண்ட கால இனத்துவ மோதலில் வெற்றிபெற்ற தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் நாட்டின் நிருவாகத்தில் இரு வருடங்கள் கழிந்த பின்பும் தொடர்ந்து தெளிவாய்த் தெரிகிற அத்துடன் அதன் பாத்திரத்தை வலியுறுத்தும் ஒரே இனத்தைச் சார்ந்த இராணுவம் எதிர்கால முரண்பாட்டுக்கு வழிகோலுவதாயிருக்கும்.

407. வடக்கிலும் கிழக்கிலும் பொரு ளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற் கான அரசாங்கத்தின் நோக்கம் முக்கியமானதாகும் என்பதோடு, முழு நாட்டுக்கும் பொருளாதார அபிவிருத்தி ஒரு முன்னுரிமையாகும். ஆயினும், யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களின் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பு பொருள் உதவி அவசியமென்ற போதிலும், அத்தகைய நடவடிக்கைகள் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கு ஈடாகாது.

(138) இ.யுத்தகால நடவடிக்கைகள் தொடர்தல்

408.
எல்...ஈ. இனைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் ஓர் அங்கமாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமலில் இருக்கின்றன. இலங்கையின் சகல மக்களும், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் முழுமையான பிரஜைகள் என்ற வகையில் தம் வாழ்வினை மேற்கொள்வதற்கு அவை தடையாக இருப்பதோடு அவர்களின் உரிமைகள் மீறலாகவும் அவை உள்ளன. .

409.
அவசரகால ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் (பி. .ஏ.) தொடர்வதால் ஏற்படும் தீங்கான பாதிப்புக்கள் பற்றி மற்றும் அசாதாரணமான சிவில் சூழல் ஒன்றைத் தொடர வைக்கும் இராணுவ மயமானதொரு அமைப்பினுள் இருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு உண்மையிலேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குறுகிய காலப்பகுதிகளுக்கே அவற்றை நியாயப்படுத்த முடியும் என்பதோடு அவை நீதி மன்ற மற்றும் பாராளுமன்ற மீளாய்வினை உள்ளிட்ட ஜனநாயக மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீண்ட கால நடவடிக்கையாக அவை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தி சட்டத்தின் நல்லாட்சி சரியாகச் செயற்படுவதைத் தடுக்கும். மேற்பார்வை இல்லாதவிடத்தில் அவை தண்டனை விலக்களிப்பைத் தோற்றுவிக்கும்.

410.
குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், படைவீரர் குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் இராணுவத்தின் சொந்தத்தில் அல்லது கட்டுப்பாட்டில் தனியார் வர்த்தக தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திகள் செறிவாக இராணுவம் நிலைகொள்ளும் நீண்ட கால சுபாவத்தைக் கொண்டதாகத் தென்படுகிறது.

இப்போக்கு தொடரும் கிளர்ச்சிக்கெதிரான வியூகத்தின் ஒரு பகுதி என மக்களால் கருதப்படுகிறது. அச்சுறுத்தல் இன்றி சிவில் அமைப்புக்கள் அபிவிருத்தியடைவதற்கு முன்னால் யுத்த வலயங்களை கணிசமான அளவு இராணுவ சூன்யமாக்குவது அவசியமாகும். உள்நாட்டு அரசாங்கம் பொதுமக்களால் சட்டபூர்வமானது எனக் கருதக்கூடிய வகையில் சிவில் நிருவாகத்திடம் இருக்க வேண்டும்.

411.
மேலும், அரசாங்கம் காவல்துறை விசேட அதிரடிப் படையின் "சிறப்பு அலகுகளை' துணை இராணுவத்தினராகக் தொடர்ந்தும் பயன்படுத்துவது குறிப்பாகக் கவலையளிப்பதாகவுள்ளது.

பிரஜைகளைப் பயறுத்தி வன்செயல்களைத் தொடரும் அரசின் அடிவருடிகளுக்கு சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகம் ஒன்றில் இடமில்லை.

அத்துடன், தமிழ் இராணுவத் துணைப்படைகளைப் பிரயோகிப்பது இனத்துவ விசல்களை வளர்ந்து ஆழமாக்கவே உதவும். அத்தகைய குழுக்களைக் கலைத்து அவர்கள் புரிந்த குற்றங்களுக்கு அவர்கள் மீது வழக்குத் தொடரும் தெளிவானதொரு கொள்கையை அரசாங்கம் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பாதுகாப்பு கவர்களும் நேரடியாகவோ மறைகமாகவோ அச்சுறுத்தும் அல்லது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதோடு, அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

412.
இறுதியாக, இலங்கையின் மாற்றத்துக்கும் பொறுப்புக்கூறல் பற்றிய பயனுறு செயற்பாட்டுக்கும் துடிப்புள்ளதொரு சிவில் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது முக்கியமாகும். அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவு செய்வதை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வைப்பது போன்ற கொள்கைகள் ஒவ்வாதவையாகும். மேலும், மனித உரிமைகள் அமைப்புக்களை இரகசியப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்துகிறது என்ற அறிக்கைகள் மனதைக் குழப்புவதாக உள்ளன. மனித உரிமைகள் ஆர்வலர்கள் மீதான அழுத்தங்களும் கவலைக்குரியவையே. மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கண்காணித்து அறிக்கை விடுப்பதற்காக நாடு முழுவதிலும் தடையின்றிச் செல்லும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

(139) ஈ. ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள்
413.
மனித உரிமைகளை மதிக்கும் சமூகம் ஒன்றின் அத்தியாவசிய அம்சமாக சுயாதீன ஊடகம் இருப்பதோடு, நிலைத்தகவுள்ள சமாதானத்துக்கு அது தேவையானதொரு நிபந்தனையாகும்.

இலங்கை பெருமிதமிக்க ஊடகப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அதே வேளையில், யுத்தத்தின் போது குறிப்பாக அதன் இறுதிக் கட்டங்களின் போது பத்திகைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சுதந்திர ஊடகங்கள் தொடர்ந்தும் செயற்பட்ட போதிலும் அவை கட்டுப்பாடுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குகின்றன.

யுத்தத்தின் போது வன்செயல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பல ஊடகவியலாளர்கள் இன்னும் அச்சத்துடனே இருப்பதோடு நாட்டுக்குத் திரும்ப அஞ்சுகின்றனர்.

நாட்டினுள் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு அல்லது தமிழ் மக்களின் ஆதங்கங்கள் பற்றிய கருத்துக்களுக்கு மிகக் குறைவான சகிப்புத்தன்மையே காணப்படுகிறது.

414.
2009 ஜனவயில், பிரசித்தி பெற்ற ஊடகவியலாளரும் அரசாங்கத்தின் விமர்சகருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். 2009 ஆகஸ்ட் மாதத்தில், பி..ஏ. சட்டத்தின் கீழ் முதற்தடவையாக வழங்கப்பட்ட தண்டனையின் கீழ், அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கையினை விமர்சித்து எழுதிய ஊடகவியலாளர் ஜே. எஸ். திசாநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்னுமொரு பிரசித்தி பெற்ற ஊடகவியலாளரும் கேலிச் சித்திர கலைஞரும் அரசாங்கத்தை விமர்சிப்பவருமான, பிரகீத் எகனெலிகொட 2010 ஜனவ மாதம் காணாமற் போனதோடு இதுவரை அவரைப் பற்றிய எவ்வித தகவலும் இல்லை. இம்மூன்று உதாரணங்களும், துரதிர்க்ஷ்டவசமாக, மேலும் பாரிய தொரு பிரச்சினையைப் பிரதிபலிப்பதாகவுள்ளன.

415.
எல்லைகள் அற்ற செய்தி நிருபர்கள், அதன் 2010 பத்திகை சுதந்திர சுட்டியில் 175 நாடுகளுக்கிடையே இலங்கைக்கு 158ஆவது இடத்தை வழங்கினர், இந்நிலை 2009 இனை விட நான்கு இடங்கள் முன்னேற்றமுடையதாகும். 2010 டிசம்பர் 30ஆம் திகதி, அது பின்வருமாறு கண்டனம் தெவித்தது..இலங்கையின் நிலவரம் பற்றிய பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சுயாதீன ஊடக அறிக்கை விடுப்பதைத் தடுக்க அரசாங்கம் புதிய வடிவத்திலான பத்திரிகைத் தணிக்கை மற்றும் தடைகளைப் பிரயோகிக்கிறது. உடல் மீதான தாக்குதல்கள். அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை வைத்தல் போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்ற போதிலும், நிஜ செய்தி ஆசியர் சுதந்திரம் மீள ஏற்படுவதை அதிகாரிகள் தடுப்பது கவலைக்குரியதாகும்..

416.
இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் இரு அளவு கோல்களைக் கொண்டு அளக்கப்படுகிறது. முதலாவது, ஊடகவியலாளர்கள் இலங்கையில் சுதந்திரமாகப் பிரசுக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு அதற்காக அவசரகால ஒழுங்குவிதிகளை அகற்றுவது தேவைப்படும் அத்துடன் பி..ஏ. சட்டம் சர்வதேச தரங்களுடன் ஒத்திருப்பதற்காக அதற்கான திருத்தங்களைக் கொண்டுவருவது.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் திரும்பி வருவதற்கு போதியளவு பாதுகாப்பு உண்டென்பதாகக் கருதி தம் நாட்டில் அவர்களது தொழிலை நடாத்துவதற்கு டியும் போது இரண்டாவது அளவு கோலின் தேவை நிறைவு பெறும்.

(140) உ. புலம்பெயர்ந்த தமிழர்
417.
பல தசாப்தங்களாக எல்...ஈ.க்கு உள மற்றும் பொருள் ரீதியில் ஆதரவை வழங்கி வந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பாரிய பகுதியினர் தமிழர்களின் நிலை பற்றித் தொடர்ந்தும் ஆதங்கம் கொண்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி எதிர்ப்புத் தெவிப்பது எதிர்பார்க்கக் கூடியதொன்றேயாகும். ஆயினும், எல்...ஈ. புரிந்த உரிமைகள் மீறல்கள் மற்றும் வன்னியில் நேர்ந்த மனிதாபிமான அனர்த்தத்துக்கான அதன் பங்களிப்பைப் பற்றி அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது புலம்பெயர்ந்தோரிடையே கணிசமானவர்கள் நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்கு மேலும் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

418.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தது, அவர்கள் தப்பிப்போவதைத் தடுப்பதற்காக வன்முறையைப் பிரயோகித்தது அத்துடன் தம் அணிகளுக்கு வலுக்கட்டடாயமாகச் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டது ஆகியவற்றை உள்ளிட்ட எல்...ஈ. இன் பல்வேறு மீறல்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்தவர்களுள் பலர் மௌனம் சாதித்தனர். இறுதியில், போரில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினடையே சிக்குண்டு தவிக்கும் பொதுமக்களின் துயரத்தை விட "தமிழ் ஈழ' அரசியலாய் அமைந்த அரசினைப் பாதுகாப்பதில் புலம்பெயர்ந்தோரின் பகுதியினர் அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

419.
தமது நோக்கத்துக்காகப் பணம் சேர்ப்பதற்காக, வெளிநாடுகளில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களிடையே எல்...ஈ. மாபியா அணுகுறையைக் கடைப்பிடித்தது.

எல்...ஈ. இனருக்கு ஆதரவாயிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் கணிசமானவர்கள் இவ்வாறாக யுத்தத்திற்குத் துாபம் போடுவதில் ஒரு பங்களிப்பைச் செய்தனர். எல்...ஈ. இன் முன்னாள் முகப்பு அமைப்புக்கள் தனியார் வர்த்தகங்கள்மூலம் தொடர்ந்து செயற்படுவதோடு சில கோயில் வருமானங்களையும் கட்டுப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து மற்றும் வேறு இடங்களில் எல்...ஈ. சேகரித்து வைத்துள்ள நிதிகள் இலங்கை தமிழ் சமூகத்தினடையே யுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பெறப்பட வேண்டும்.

420.
புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்கள், அவர்கள் எல்...ஈ.
அளித்த நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் அவர்களது தீவிர தமிழ் தேசியவாதம் காரணமாக, உண்மையிலேயே இலங்கை தமிழ் சமூகத்திடையே பிளவை ஏற்படுத்தியுள்ளதோடு, விநோதமாக, சிங்கள தேசியவாதத்தை வலுப்படுத்தியுள்ளனர். ஒரு பொதுவான தாய்நாட்டைக் கொண்டுள்ள ஏனையவர்களுடன் வெளிநாடுகளில் வாழ்பவர்களை உள்ளிட்ட அதன் சகல இனத்துவச் சமூகங்களும் ஒவ்வொருவனதும் உரிமைகளையும் ஈடுபாடுகளையும் மதிக்க வேண்டும் என்பதை இலங்கையின் உறுதியான எதிர்காலம் வேண்டி நிற்கிறது.

விசாலமான, கல்வி மேம்பாடுள்ள மற்றும் பாரிய வளங்களைக் கொண்ட புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கையின் எதிர்காலத்தில் இதைவிட மிக ஆக்கபூர்வமானதொரு பாத்திரத்தை வகிப்பதற்கான நிலைச்சக்தியைக் கொண்டுள்ளது.

ஐ.நா. அமைப்புக்களும் பொதுமக்களை பாதுகாக்க தவறியுள்ளன: (பாகம்) - 24

 தீர்மானங்கள் 1. குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை
421.
இலங்கையின் யுத்தத்தின் இரு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பு, உரிமைகள், நலன் மற்றும் உயிர்கள் பற்றிய எவ்வித அக்கறையுமின்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையும் அனுசரிக்கத் தவறினர். இரு தரப்பினரும் பாரிய அளவில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்களில் ஈடுபட்டதை நம்புவதற்கான நியாயமான அடிப்படை உள்ளது.

இதன் நேரடி விளைவாக, பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் இலங்கையில் கொல்லப்பட்டதோடு, உறவினர்களின் இழப்பு, பாரிய காயங்கள், இடம்பெயர்வு மற்றும் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழத்தல் ஆகியவற்றை உள்ளிட்டவாறு மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாரிய துன்பங்களுக்கு உள்ளாகினர். யுத்தத்தைத் தொடர்ந்து பலர் மேலும் கஷ்டங்களையும் அவமதிப்பையும் அனுபவிக்க நேர்ந்தது.

422.
இலங்கை அரசாங்கத்தின் நடத்தை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் நிலைத்தகவுள்ள பாரிய மீறல்களைக் கொண்ட ஐந்து முக்கிய வகுதிகளுக்குள் அடங்குகின்றன: (டி) வகைதொகையின்றி செல் தாக்குதல்மூலம் பொதுமக்களை கொலை செய்தல்; (டிடி) ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான இடங்களை ஷெல் வெடியினால் தாக்குதல்; (டிடிடி) மனிதாபிமான உதவியை வழங்க மறுத்தல்; (டிதி) உள்நாட்டில் இடம்பெயர்ந் தோரை மற்றும் சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. உறுப்பினர்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் மற்றும் யுத்தத்தில் உயிர் பிழைத்தவர்களின் மனித உரிமைகள் மீறல்கள்; மற்றும் (தி) ஊடகங்கள் மற்றும் ஏனைய அரசாங்கத்தை விமர்சிப்பவர் களுக்கு எதிரானவற்றை உள்ளிட்ட யுத்த வலயத்துக்கு வெளியே மனித உரிமைகள் மீறல்கள்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புபட்ட எல்...ஈ. இன் நடத்தை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் நிலைத்தகவுள்ள ஐந்து முக்கிய மீறல்கள் வகுதிகளை உள்ளடக்குகின்றன: (டி) தாக்குதலைத் தடுப்பதற்காக பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்தல்; (டிடி) எல்...ஈ. இன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோட முனைந்தவர்களைக் கொலை செய்தல்; (டிடிடி) பொதுமக்களுக்கு அருகே இருந்து இராணுவத் தளபாடங் களைப் பிரயோகித்தல்; (டிதி) வலுக்கட்டாய மாக சிறுவர்களை அணிதிரட்டல்; (தி) தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தல்.

423.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் என்ன நேர்ந்தது என்ற குழுவின் மதிப்பீடு மற்றும் அதனைத் தொடரும் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கக் கடப்பாடுகள், தான் "சூன்ய பொதுமக்கள் சேதம்' என்ற கொள்கையுடன் "மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகை' ஒன்றை மேற்கொண்ட தாகவும் அதனால் எந்தத் தவறுக்கும் அது பொறுப்பில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

2. குற்றச்சாட்டுக்கள் சட்ட மதிப்பீடு
424.
நிரூபிக்கப்பட்டால், இரு தரப்பினரினதும் இந்த நம்பகமான குற்றச்சாட்டுகள், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்களாக அமையும். அவற்றுள் பல போர்க் குற்றங் களாகவும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கும். செயல்களில் ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் அத்துடன் சிவிலியன் மேற்பார்வையாளர்கள் ஆகிய இரு சாராரையும் குற்றத்துக்கான பொறுப்பு மேவும். நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் சட்டத்தின் கீழான பல குற்றங்களையும் கொண்டுள்ளன.

425.
சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பது தெரிவு அல்லது கொள்கை சார்ந்த விடயமல்ல; உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அது ஒரு கடப்பாடாகும். நம்பகமான குற்றச்சாட்டுக் கள் உள்நாட்டு ஆயுதந்தத்த போராட்டத் துக்கு ஏற்புடைத்தான சர்வதேச மனிதாபி மான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், உடனடியாக மற்றும் நேர்மையான புலனாய்வுகளை மேற்கொண்டு, சாட்சியங்கள்மூலம் நியாயப்படுத்தப் பட்டால், ஆகக் கூடிய பொறுப்பைக் கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்தின் கீழான கடமையை அரசாங்கத் துக்குத் தோற்றுவிக்கிறது.

3. சமநிலையற்ற போர் நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு
426.
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்ப தற்கான வெற்றிகரமானதொரு வழி என இலங்கை அரசாங்கம் அதன் இராணுவ வியூகத்தை மேம்படுத்த விளைகிறதோடு, யுத்தத்தின் "சமநிலையற்ற' சுபாவம் சில சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிகளை ஏற்புடைத்தாகாததாக அல்லது குறைந்த பட்சம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதாக்கியுள்ளதென்ற கருத்தைத் தெவித்துள்ளது. யுத்தத்தின் போது எல்...ஈ.யும் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு அப்பாற்பட்டது எனக் கூறிவந்துள்ளது. சர்வதேசச் சட்டத் தின் கீழ் தேசிய பாதுகாப்புக்காகவும் அதனை ஆயுதத் தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமான ஒரு தேசத்தின் உரிமையை இனங்காணும் அதே வேளையில், அத்தகைய நியாயமான தேவைகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கை களும் சர்வதேச சட்டத்துக்கு இயைவாக இருக்க வேண்டும் என்பதை குழு வலியுறுத்துகிறது. இலங்கையில் பிரயோகிக்கப்பட்டவை உள்ளிட்ட சில தற்கால யுத்த நடவடிக்கை அமைப்புக் களுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டம் ஏற்றதாக இல்லை என்ற கருத்தை குழு உறுதியாக நிராகக்கிறது. உண்மை யிலேயே, யுத்த நிலைமைகளில் பொது மக்களின் பாதுகாப்புக்கான காப்பீடுகளை அதிகப்பதற்கான கலந்துரையாடல் தேவைப்படுகிறது.

427.
இது தொடர்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்புக்களும் நிறுவனங்களும் பொதுமக்களைப் பாதுகாத்திருக்கக் கூடிய நடவடிக்கைளை மேற்கொள்ளத் தவறியுள்ளன. மேலும், சிரேஷ்ட சர்வதேச அதிகாரிகள் பகிரங்க மாகவும் தனியாகவும் பொதுமக்களை அது பாதுகாக்க வேண்டும் எனவும் ஆஸ்பத்திரி கள் மற்றும் ஐ.நா. அல்லது ஐ.சி.ஆர்.சி. அமைவிடங்களை ஷெல் தாக்குதலுக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட போதிலும், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பகிரங்கமாகப் பிரயோகித்தல் வன்னி நிகழ்வுகளின் போது பொதுமக்கள் பாதுகாப்புக்கான வேண்டுகோள்களை வலுப்படுத்தியிருக்கும்.

4. தொடரும் அரசாங்கத்தின் மீறல்கள்
428.
யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழிந்த பின்பும், இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே இனத்துவதேசியவாத மோதல்களுக்குக் காரணமாயிருந்த காரண காரியங்கள் அப்படியே தீர்க்கப்படாமல் இருப்பதோடு மனித உரிமைகள் மீறல்களும் தொடர்கின்றன. அவற்றுள் சில அரசாங்கத்தின் ஆட்களால் அல்லது அரச அனுசரணையுடனான துணை இராணுவக் குழுக்களால் மேற்கொள்ளப்படுவதான அத்தகைய நடவடிக்கைகள் பற்றி முரண்பாடற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விசாரணையின்றித் தடுத்து வைத்தல், ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல்கள், கொலைகள், ஊடகங்கள் மீதான தாக்குதல் கள் அத்துடன் பயமுறுத்தும் வகையிலான ஏனைய நடவடிக்கைகள் ஆகியவற்றை இவை உள்ளடக்குகின்றன. இச்சூழ்நிலைப் பொருத்தத்தில் நோக்கும் போது, வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களும் உயிர் பிழைத்தவர்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமலிருக்கிறது. பொறுப்புக்கூறலுக்குத் தோதானதொரு சுற்றாடலை ஏற்படுத்து வதற்கு வன்முறை மற்றும் அதனைத் தொடரும் அச்சுறுத்தும் சூழல் அகற்றப்பட வேண்டும். பல தசாப்தங்களாக, மற்றும் இன்றும் கூடத் தொடரும், வலுக்கட்டாய மாகக் காணாமல்போதல்கள் பற்றிய இலங்கையின் தரக்குறைவான கடந்தகால நடத்தை பற்றி சர்வதேச நிறுவனங்கள் ஆழ்ந்த கவலையைத் தெவித்துள்ள தோடு, அது தொடர்பாக உடனடி மற்றும் பாரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

5. சர்வதேச தரங்களின் அடிப்படையிலான பொறுப்புக்கூறல்
429.
சர்வதேச தரங்களுக்கேற்ப, பொறுப்புக்கூறல் பாரிய குற்றச் செயல்களைப் புலனாய்வு செய்வது மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்குவதோடு அதற்கு அப்பாலும் செல்கிறது. மனித உரிமைகள் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் மீறல்களுக்காக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப் பொறுப்பை உறுதிப்படுத்துவதற்கான பரந்ததொரு செயற்பாடாக அது உள்ளது. சகல மனித உரிமைகளையும் மதித்தல் மற்றும் சமூகத்தின் சகல உறுப்பினர்களினதும் முழுமையான பிரஜைதுவத்தை திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு நிலைத்தகவுள்ள சமாதானத்தைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்ட மேலும் பாரிய தொரு பேராற்றல் மிக்கவொன்றுக்கு இன்றியமை யாததாக பொறுப்புக்கூறல் உள்ளது.

சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களுக்கு இயைவாக, உண்மை, நீதி மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு ஆகியவற்றை அடைவதை பொறுப்புக் கூறல் கொண்டுள்ளது. அதன் பிரஜை களின் உரிமைகள் மீறப்பட்டிருந்தால், அதற்காக உத்தியோகபூர்வமான அதன் பாத்திரத்தையும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதையும் பொறுப்புக்கூறல் தேவைப்படுத்துகிறது. ஐ.நா. கொள்கைக் கேற்ப, "எல்லோருக்கு ஒரே அளவே சயானது' என்ற வாய்ப்பாட்டை அல்லது பொறுப்புக்கூறலுக்கு வெளிநாட்டு மாதிரிகளை இறக்குமதி செய்வதை குழு பரிந்துரைக்காது; மாறாக பரந்த மக்கள் பங்கேற்பு, தேவைகள் மற்றும் அபிலாசைகள் ஆகியவற்றைக் கொண்ட தேசிய மதிப்பீடுகளின் அடிப்படையில் விளக்கப் படும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை அது இனங்காண்கிறது. இருந்த போதிலும், ஏதும் தேசிய செயற்பாடு சர்வதேச தரங் களுக்கு ஏற்றதாகவே இருக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச அணுகு முறை இன்றியமையாதது: (பாகம்)-25

(144)
430.
பொறுப்புக்கூறல் பற்றிய அதன் ஆலோசனையைத் தொகுப்பதில், இலங்கையின் நீண்ட கால யுத்தத்தின் போது இரு தரப்பினடம் சிக்கி துன்பத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு குழு முன்னுரிமை வழங்கியுள்ளது. யுத்தங்களின் போது பொதுவாக அதிக துன்பத்தினையும் இழப்புகளையும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களே அனுபவிக்க நேர்கிறது என்பதோடு குறிப்பாக இறுதிக் கட்டங்களின் போது இலங்கை அதற்கு விதிவிலக்கல்ல.

6. பொறுப்புக்கூறல் பற்றிய அரசாங்கத்தின் மனவுரு
431.
மீளளிக்கும் நீதிக்கு அழுத்தம் கொடுத்து, மீளிணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலுக்கிடையே ஒரு சமநிலையை எய்த அது நாடுகிறது என அரசாங்கம் கூறியுள்ளது. மீளளிக்கும் மற்றும் தண்டனை வழங்கும் நீதி ஆகியவற்றுக்கிடையிலான தெரிவை வலியுறுத்துவது தவறான இரு பிரிவுகளை முன்வைப்பதாகவுள்ளது. இரண்டுமே தேவையானவையாகும். மேலும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு மீது கவனம் செலுத்தும் பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொண்ட உண்மையான பொறுப்புக்கூறலுக்கு மாறாக தெளிவற்ற முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகள் காரணமான அரசியல் பொறுப்பு மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து தம் பிரஜைகளைப் பாதுகாக்கத் தவறியமை என்ற கருத்தை அது முன்வைப்பதால் அரசாங்கத்தின் மீளளிக்கும் நீதி பற்றிய கருத்து குறைபாடுள்ளதாகவே இருக்கிறது என்பது குழுவின் கருத்தாகும்.

432.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை செயற்படுத்தல் அல்லது அதன் பின்னரான அதன் தீர்மானங்கள் மற்றும் நடத்தை பற்றியதொரு மற்றும் அதன் விளைவாக நேர்ந்திருக்கக் கூடிய சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய பரிசீலனையை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான அணுகுமுறை கருதவில்லை. தவறுக்குப் பொறுப்பானவர்களை இனங்காண்பதையோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையோ அது எதிர்பார்க்கவில்லை.

இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அளவு கடந்த நடவடிக்கைகள் நேர்ந்திருக்கலாம் என்பதையும் சில வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இவ்வாறான எந்தவொரு விடயம் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் பற்றி இவ்வறிக்கையில் உள்ள பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு அவை நேரிடையாக உள்ளனவா என்பது தெளிவற்றதாக உள்ளது. மாறாக, எல்...ஈ.
உறுப்பினர்களின் பொறுப்புப் பற்றி குறுகிய அளவில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அவர்களில் அநேகமானவர்களுக்கு புனர்வாழ்வைத் தேர்ந்தெடுத்து "கடும் போக்குடையவர்களுக்கு "மீளளிப்பு நீதியின்' மாதிரியாக இலேசான தண்டனையை விதிக்கிறது. எனவே, பொறுப்புக் கூறல் பற்றிய அரசாங்கத்தின் கருத்து சர்வதேச தரங்களுக்கு ஒத்ததாக இல்லை எனக் குழு தீர்மானித்துள்ளது. இரு தரப்பினரும் புரிந்த குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை மற்றும் மரியாதையை அதன் பொறுப்புக்கூறல் அணுகுமுறையின் மையமாகக் கொள்ளாத வரை, அதன் நடவடிக்கைகள் சர்வதேச எதிர்பார்ப்புக்களை விட மிகத் தாழ்வாகவே இருக்கும்.

(145)
433.
மக்கள் தம் வாழ்வினை மீளக்கட்டியெழுப்ப உதவி வழங்குவது என்பது பொருளினாலான நன்மைகளை மாத்திரம் வழங்குவது என்பதாகாதோடு, அவை தேவையாக இருந்த போதிலும், உரிமைகள் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருபவர்களின் நிலைமை பற்றி கட்டாயமாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கம் உண்மையான நடவடிக்கைகளை எடுப்பதையும் அது தேவைப்படுத்துகிறது.

7. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு
434.
2002ஆம் ஆண்டின் போர்நிறுத்த உடன்படிக்கை தல் 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த காலம் வரையிலான கடந்த காலம் மீது கவனம் செலுத்துவதற்காக அதன் இன்றியமையாத கொள்கையாக அரசாங்கம் கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவினை அமைத்துள்ளது. எல்.எல்.ஆர்.சி. இலங்கையின் போர் விட்டுச் சென்றது பற்றிய தேசிய கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பிரயோசனமான சந்தர்ப்பத்துக்கான நிலைச்சக்தியை எல்.எல்.ஆர்.சி. பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆணைக்குழு முன்னிலையில் தாமாகவே வந்து கதைப்பதற்காக, அதிக எண்ணிக்கையினர் குறிப்பாகப் பாதிக்கப்பட்டோர் முன்வந்தது அத்தகையதொரு கலந்துரையாடலுக்கான தேவையை எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.

435. ஆயினும், ஆணைக்குழுவின் அமைப்பு மற்றும் அதன் சில அங்கத்தவர்களின் ஆழமான அக்கறை முரண்பாடு காரணமாக எல்.எல்.ஆர்.சி. முக்கிய சர்வதேச தரங்களான சுயாதீனம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகிவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளது, எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை மற்றும் இன்றுவரையிலான அதன் நடவடிக்கைகள் மற்றும் முறைமை அது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கு அல்லது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த இனத்துவ மோதலின் அடிப்படைக் காரண காயங்களை புலனாய்வு செய்வ தற்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக அவை மேலே குறிப்பிட்ட அரசியல் பொறுப்புப் பற்றிய பரந்ததொரு கருத்தில் கவனம் செலுத்துவதோடு, அது அரசாங்கத்தின் தவறான மற்றும் அரைவாசி மனுவுருவான பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாக இருக்கிறது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையான உண்மையைக் கண்டறியும் முயற்சியை அல்லது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினதும் பாரிய குற்றச்சாட்டுக்களை ஒழுங்காகவும் பக்கச்சார்பின்றியும் புலனா ய்வு செய்ய அது நடவடிக்கை எடுக்க வில்லை என்பதையும், பாதிக்கப்பட்டவர் களை அவர்கள் கௌரவம் மற்றும் அனுபவித்த துன்பத்துக்காக முழு மரியாதை யுடன் அவர்களை நடாத்தும் அணுகுமுறை ஒன்றை மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் தமக்கு உண்மையான அச்சுறுத்தலை எதிர்நோக்கிய போதிலும் சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவில்லை. இதுவரையிலான எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கைகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.

(146)
436.
மேலும், பல பாரிய மனித உரிமைகள் விடயங்கள் பற்றி பரிசீலனை செய்வதற்காக ன்று தசாப்தங்களாக பல விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக உண்மையைக் கண்டறிவனவாக அவற்றுள் சில செயற்பட்டுள்ள போதிலும், அநேகமாக இனங்காணப்பட்ட மீறல்கள் தொடர்பாக முழுமையான பொறுப்புக்கூறல் பயன்களைப் பெற்றுக் கொடுப்பதில் அவை தோல்வியடைந்துள்ளன. பல ஆணைக்குழுக்கள் பகிரங்க அறிக்கையை வெளியிடத் தவறியுள்ளதோடு அவற்றின் பரிந்துரைகள் அமல் செயப்படுவது அபூர்வமாகவுள்ளது.

437.
எல்.எல்.ஆர்.சி. இலங்கையருக்குத் தமது ஆதங்கங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவதற்கானதொரு சந்தர்ப்பத்தை அளித்துள்ளது என்பதோடு, அதன் இடைக்கால மற்றும் எதிர்வரும் இறுதிப் பரிந்துரைகள் திரட்டாக எடுத்துக் கொள்ளப்படும் போது, அவை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் வாழ்க்கை நிலைமைகளை சீராக்கக் கூடும். ஆயினும், எல்.எல்.ஆர்.சி. பெரும் குறைபாட்டைக் கொண்டதாகவும் பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிக்கான சர்வதேச தரங்களை நிறைவு செய்யவில்லை என்பதாலும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பான இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்தின் இணைந்த உறுதிப்பாட்டை நிறைவு செய்ய அதனால் முடியாதிருக்கிறது.

எல்...ஈ. மற்றும் அரசாங்கம் ஈடுபட்ட மீறல்கள் பற்றிய குறிப்பான குற்றச்சாட்டுக்களை உண்மையாகப் புலனாய்வு செய்வதை உறுதிப்படுத்துவதற்காகவும் மோதலின் முக்கிய காரண காரியங்கள் மீது கவனத்தைச் செலுத்தி கடந்த காலம் பற்றிய பரந்த ஒரு பரிசீலனையை மேற்கொள்வதற்காகவும் புதியதொரு அணுகுறை தேவைப்படுகிறது.

8. இலங்கையின் நீதித்துறைத் திட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு 438.
எல்.எல்.ஆர்.சி.யின் செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும், பொறுப்புக்கூறலை தொடர்வதில் நீதித் திட்டம் முன்னணிப் பாத்திரமொன்றை வகிக்க வேண்டும்.

ஆயினும், இத்திட்டத்தின் கடந்தகால நடைமுறை மற்றும் தற்போதைய அதன் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான மீளாய்வொன்றின் படி, தற்போதுள்ள அரசியல் சூழலில் அது நீதிக்கான அதன் பங்களிப்பை வழங்குமா என்பதில் குழுவுக்கு நம்பிக்கையில்லை. சட்ட மா அதிபர் குற்றவியல் நீதித் திட்டத்தின் மையமானதொரு பதவியை வகித்து, புலனாய்வு மற்றும் வழக்குத் தொடரல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் அதே வேளையில் அண்மைய ஆண்டுகளில் சட்ட மா அதிபரின் சுயாதீனத் தன்மை நலிவுறச் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுகள் மற்றும் வழக்கு தொடரும் நடவடிக்கைகள் விதிகட்குக் கட்டுப்படாததாகவும் காலதாமதத்தைக் கொண்டதாகவும் அநேகமாக இருப்பதோடு, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் அரசாங்க நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களையும் அலைக்கழிப்பதற்காகவும் அச்சுறுத்துவதற்காக குற்றவியல் விசாரணைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

தற்போது, தண்டனை விலக்களிப்புக் கலாசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு குற்றவியல் நீதித் திட்டம் திராணியற்றதாகவுள்ளது. அரசியல் மனவுறுதிப்பாடின்மையே அன்றி திறமையின் குறைவு இந்நிலைக்குக் காரணமல்ல. நன்கு நிறுவப்பட்ட சட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் நீதியைத் தாங்கி நிற்கக் கூடிய திறனுள்ள கற்றுத்தேறிய தொழில்சார்ந்தவர்களை இலங்கை கொண்டுள்ள போதிலும், அதற்குத் தேவைப்படும் இயலுமாக்கும் சூழல் தற்போது இல்லாதிருக்கிறது.

அவசரகால ஒழுங்குவிதிகள் தொடர்ந்திருப்பது மற்றும் தற்போதுள்ளவாறான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தவறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து மனித உரிமைகள் உத்தரவாதங்களை நிலைநிறுத்துவதற்காக சட்டத்துறை எதிர்நோக்கும் முக்கியமான தடைகளாகவுள்ளன.

(147)
439.
அதே போன்று, அது இனங்கண்டுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்கள் அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது புரியப்பட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்ற அமைப்பு பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியாகச் செயற்பட்டுள்ளதற்கான சான்றுகள் எதனையும் குழு காணவில்லை.

440.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைத்தகவுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்றபோதிலும், அது பற்றி குழு பாரிய ஐயப்பாட்டினைக் கொண்டிருப்பதோடு, காணாமற் போனவர்கள் விடயம் தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை எடுத்தல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலனைக் கண்காணித்தல் ஆகியவற்றின்மூலம் அதன் அரசியல் மனவுறுதியையும் ஆற்றலையும் ஆணைக்குழு நிரூபித்துக் காட்ட வேண்டும் என குழு நம்புகிறது.

9. முன்னேறிச் செல்வதற்கான பாதை
441.
யுத்தம் டிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர், இலங்கையின் முன்னெடுப்புக்கள் பொறுப்புக்கூறல் பற்றிய சர்வதேச தரங்களை விட மிகக் குறைவானதாகவேயுள்ளதோடு, இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரின் கூட்டு உறுதிப்பாடு அல்லது இலங்கையின் சட்டத்திலான கடப்பாடுகள் ஆகிய இரண்டையும் நிறைவு செய்ய அவை தவறியுள்ளன. உண்மையானதொரு புலனாய்வினை மேற்கொள்வதற்கான அதன் பொறுப்புக்களை நிறைவு செய்யவோ அல்லது அவ்வாறு செய்வதற்கானதொரு நோக்கத்தைக் குறிப்பிடுவதற்கோ இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. "பொறுப்புக்கூறல் தேவையற்றவிதத்தில் தாமதமாகும் அல்லது வேறு விதத்தில் வினைத்திறனற்ற தேசிய முயற்சிகள் காரணமாக பணயக்கைதியாக இருக்காமலிருப்பதை உறுதிப்படுத்து வதற்காக சர்வதேசம் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகும்' எனக் குறிப்பிடும் யுத்தத்தின் போது பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் அறிக்கை அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு மிகவும் பொருத்தமாகும். இவ்வாறாக, இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் பற்றிய உண்மையான புலனாய்வொன்றினை உடனடியாக இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, அதற்கான சுயாதீன மற்றும் குறை நிரப்புக்கான சர்வதேச அணுகுறை இன்றியமையாததாகும் என குழு கருதுகிறது.

442.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் அடிப்படைச் சர்வதேச தரங்களுக்கு பொறுப்புக்கூறல் பற்றிய அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை ஒத்திசைவாக இல்லை.

அத்தோடு, எல்...ஈ. இனைத் தோற்கடித்ததன் பின், அதன் பிரஜைகளுக்கு, எல்...ஈ. மாத்திரமல்லாது அதன் ஆயுதப் படையினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை பாரிய துன்பம் நேர்ந்ததை அரசாங்கம தொடர்ந்தும் மறுத்துரைப்பது பொறுப்புக்கூறலுக்கான அடிப்படைத் தடையாக உள்ளது. பல காலமாக இருந்து வரும் இனத்துவதேசியவாத முரண்பாட்டுக்கான காரண காரியங்கள் உள்ளிட்ட கடந்த கால பரந்த உருமாதிரிகள் பற்றிய ஒளிவு மறைவற்ற மதிப்பீட்டினை அனுமதிக்கும் தோதானதொரு சூழல் தற்போது இல்லாமலிருக்கிறது. மனித உரிமைகள் மதிக்கப்படும் திறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையை முற்றாகத் தவிர்ப்பதும், நாட்டின் எதிர்கால அத்திபாரகமாக இலங்கையின் இனப் பன்முகத்தன்மை அத்துடன் அதன் சகல மக்களினதும் முழுமையான பிரஜை உரிமைகளை இனங்காணும் அரசியல் தீர்வொன்றுக்கான உண்மையான உறுதிப்பாடு ஆகியவற்றுக்கான காத்திரமான நடவடிக்கைகளை அது தேவைப்படுத்தும்.

(148)
ஏஐஐஐ. பரிந்துரைகள்
443.
அதன் தீர்மானங்களைக் கருத்திற் கொண்டு, பொறுப்புக்கூறல் பற்றிய கூட்டு உறுதிப்பாட்டினை அமல் செய்வதற்கான பின்வரும் பரிந்துரைகளை குழு சமர்ப்பிக்கிறது: இவ்விடயத்தில் செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டுக்கு அது ஒரு சட்டகமாக அமையும் என குழு எதிர்பார்க்கிறது. இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய தரப்பினரின் குறைநிரப்பு நடவடிக்கையினை இப்பரிந்துரைகள் தேவைப்படுத்தும்.

அத்தியாவசியம் என குழு கருதும் மீறல்கள் பற்றி உடனடியாக உண்மையான புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்...

ஆ. ஒரே சமயத்தில் பின்வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டதான ஆணையைக் கொண்ட சுயாதீன சர்வதேச பொறித்தொகுதியொன்றை அமைப்பதற்காக செயலாளர் நாயகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: (டி) குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான உண்மையான புலனாய்வுகளை உள்ளிட்ட பயனுறு உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயற்பாட்டை எவ்வளவு தூரத்துக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்கிறது என்பதைக் கண்காணித்து மதிப்பீடு செய்து அதன் தீர்மானங்கள் பற்றி இடைக்கிடையே செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கல் (டிடி) உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் உண்மையான மற்றும் வினைத்திறன் கொண்ட புலனாய்வுகளைக் கருத்திற்கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பாக சுயாதீன புலனாய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் (டிடிடி) குழு மற்றும் ஐ.நா. அமைப்பின் ஏனைய நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட தகவலை உள்ளிட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட அதற்கு வழங்கப்பட்ட தகவலை பொருத்தமான எதிர் காலப் பாவனைக்காக சேகரித்துப் பாதுகாத்தல்.

(149)
பரிந்துரை 2: பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான ஏனைய உடனடி நடவடிக்கைகள் உரிமைகள் மீறப்பட்டு மற்றும் தொடர்ந்தும் மீறப்படுபவர்களின் உடனடித் தேவை பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக அத்துடன் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதற்காக, பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்: அ. பாதிப்படைந்த சகலரினதும் மற்றும் வன்னியில் உயிர் பிழைத்தவர்களினதும் உரிமைகள் மற்றும் கௌவரம் ஆகிய வற்றை ஏற்றுக் கொள்வதை மையமாகக் கொண்டதாக இலங்கை அரசாங்கம் பின்வரும் குறுகிய கால நடவடிக்கைகளை அமல் செய்ய வேண்டும்: (டி) அரசாங்கம், அதனை உறுப்புகள், அரசாங்கத்தின் பதிலாளாக அல்லது அது அனுமதிப்பதாக செயற்படும் சகல துணை இராணுவ மற்றும் ஏனைய குழுக்களின் சகல வன்முறைகளையும் நிறுத்துவது (டிடி) இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது (டிடிடி) உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கும் போது, மேலும் புலனாய்வுகள் மற்றும் சிவில் நஷ்டஈடுகளை விட்டுக்கொடுக்காத விதத்தில், இறந்த வர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பில் துரிதமாகவும் மதிப்பைப் பேணியும் இலவசமாக மரண சான்றிதழ்களை வழங்குவது (டிதி) உயிர் பிழைத்த சகலருக்கும், அவர்களின் கலாசார பாரம்பரியங்களை மதித்து உளசமூக ஆதரவை வழங்கல் அல்லது அதற்கான வசதியளித்தல் (தி) இடம்பெயர்ந்தோர் அனைவரையும் விடுவித்து அவர்கள் விருப்பத்தைப் பொறுத்து முன்பிருந்த வீடுகளுக்குச் செல்வதற்கான வசதியை வழங்கல் அல்லது மீள்குடியேற்றல் மற்றும் (திடி) உயிர் பிழைத்த அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக அவர்களுக்குத் தொடர்ந்தும் இடைக்கால பொறுப்புக்கூறலின் பல்வேறு பிரமாணங்கள் மீது இப்பரிந்துரைகள் நடவடிக்கை எடுக்கின்றன. பின்வரும் பரிந்துரைகள் ஒன்றிணைந்த மற்றும் முழுமொத்தம் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை குழு வலியுறுத்துகிறது.

அவற்றைத் தொனிப்பொருளுக்கேற்ப குழு வகைப்படுத்தியுள்ளதோடு, ஒவ்வொரு பரிந்துரையும் பொறுப்புக்கூறலுக்கு அவசியம் என அது காண்கிறது.

444.
இப்பரிந்துரைகளில் பொதியப்பட்டுள்ளவாறான பரிந்துரைகள் குழுவின் அறிக்கை மற்றும் செயலாளர் நாயகத்துக்கான அதன் ஆலோசனை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இலங்கையின் சிவில் சமூகத்தின் தைரியம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றினால் உணர்வூட்டப்பட்டவையாகும்.

பின்பற்றப்பட்டால், இப்பரிந்துரைகள் கூட்டு உறுதிப்பாட்டினை திருப்திப் படுத்தி இலங்கையை நீதி, கௌரவம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் உண்மையான பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றை உள்ளடக்குவதாயிருக்கும்.

பரிந்துரை1: புலனாய்வுகள் அ. நம்பகமானவை எனக் குழு கருதும் குற்றச்சாட்டுக்களைக் கருத்திற் கொண்டு, இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச கடப்பாடுகளுக்கு இயைவாக மற்றும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றை மேற்கொள்ளும் நோக்குடன், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஈடுபட்ட இவை மற்றும் ஏனைய குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நிவாரணத்தை வழங்கல்.

ஆ. வலுக்கட்டாயமாகக் காணாமற்போனதாக அறிவிக்கப்படுவோரின் கதி மற்றும் அவர்கள் இருக்கும் இடம் பற்றி இலங்கை அரசாங்கம் புலனாய்வு செய்து அதனை வெளியிட வேண்டும். இது தொடர்பாக இலங்கையில் கட்டாயமான மற்றும் விருப்புக்கெதிரான காணாமற்போதல்கள் பற்றிய செயற்குழுவினை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டும்.

இ. நாட்டில் உள்ள அரசியல் நிலைமையக் கருத்திற் கொண்டு, அவசரகால ஒழுங்குவிதிகளை உடனடியாக அகற்றுவதற்கு, இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு ஒவ்வாத பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சகல ஏற்பாடுகளையும் திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து சந்தேகிக்கப்படும் எல்...ஈ. உறுப்பினர்கள் மற்றும் இந்த அல்லது வேறு ஏதும் ஏற்பாடுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய சகலர் தொடர்பாகவும் பின்வரும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.: (டி) அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைவிடம் எதுவாக இருப்பினும், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் பெயர்களைப் பிரசுரித்து அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான சட்ட அடிப்படையை அவர்களுக்குத் தெரிவித்தல் (150)

(டிடி) தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களைக் கிரமமாகச் சந்திப்பதற்கு அனுமதித்தல் (டிடிடி) தம்மைத் தடுத்து வைத்திருப்பதற்கான நியாயம் பற்றி நீதி மன்றத்தில் வாதிடுவதற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் அனுமதித்தல் (டிதி) பாரிய குற்றம் பற்றிப் போதிய சான்றுகள் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர்தல் மற்றும் ஏனைய அனைவரையும் விடுவித்து மேலும் தடையின்றி அவர்கள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அவர்களை அனுமதித்தல்.

ஈ. அரச வன்முறையை மற்றும் போக்குவரத்துக்கான, ஒன்று கூடுவதற்கான மற்றும் கருத்தைத் தெவிப்பதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலுக்கான பங்களிப்பை வழங்கும் ஏனையவற்றைக் கொண்ட நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

பரிந்துரை 3 : நீண்ட கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் தற்போதுள்ள வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் மறுப்பு நிலை கடந்த காலத்தைப் பற்றிய உண்மையானதொரு பரிசீலனைக்கு ஏற்றதாக இல்லை என்பதோடு நீண்ட காலத்தில் அரசியல் வாய்ப்புக்கள் திறக்கப்படுவது அனுமதிக்கப்பட்ட பின், யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்களின் முழுமையானதொரு பொறுப்புக்கூறலுக்குச் செல்வதற்காக பின்வரும் நடவடிக்கைககள் தேவைப்படுகின்றன: அ. பொறுப்புக்கு எடுத்து, ஆனால் எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கைக்கு ற்றிலும் மாறுபட்டதாக, சிவில் சமூகத்தின் உறுதியான பங்கேற்றலுடன், பின்வருவனவற்றை நுணுக்கமாக ஆராய்வதற்கான செயற்பாடொன்றை இலங்கை ஆரம்பிக்க வேண்டும்: இரு தரப்பினரதும் இனத்துவதேசியவாத தீவிரத்தன்மை ஆகியவற்றை உள்ளிட்ட மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் யுத்தத்தை நடாத்திய முறை மற்றும் மீறல்களின் உருமாதிரிகள் அத்துடன் நேரொத்த நிறுவகப் பொறுப்புக்கள்.

ஆ. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நேர்ந்த பாரிய அளவிலான பொதுமக்கள் காயம் மற்றும் மரணம் ஆகியவற்றுக்கான அதன் பாத்திரம் மற்றும் பொறுப்புப் பற்றி இலங்கை அரசாங்கம் பகிரங்க, முறைசார்ந்த ஒப்புக்கொள்ளுதலை விடுக்க வேண்டும்.

இ. பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக எளிதில் தாக்கமடையக்கூடிய குழுக்கள் ஆகியவர்களுக்கு விசேட கவனம் செலுத்தி, போரின் இறுதிக் கட்டங்களின் போது நடைபெற்ற பாரிய மீறல்களினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் சர்வதேச தரங்களுக்கேற்ப இழப்பீட்டுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரைகள் 4: ஐக்கிய நாடுகள் இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும் வன்னி மக்களின் அவல நிலைக்கு ஐக்கிய நாடுகளின் பதிலைக் கவனத்திற்கொண்டு: அ. இவ்வறிக்கையினைக் கருத்திற் கொண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கை பற்றிய அதன் 2009 மே விசேட அமர்வின் தீர்மானத்தை (அ/ஏகீஇ/கு11/ஃ.ஐ/கீஞுதி.2) மீளக்கவனத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட வேண்டும்.

ஆ. இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து அதன் மனிதாபிமான மற்றும் காப்பீட்டு ஆணைகளின் அமலாக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய முழுமையானதொரு மீளாய்வினை செயலாளர் நாயகம் மேற்கொள்ள வேண்டும்.

(301-400) பாகம் 4 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/301-400-4.html

(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளம்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.