Monday, September 24, 2018

பிள்ளையார் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் எப்போது வந்தார்?


கீழே உள்ள பதிவு இந்துத்துவா வெறியர்களால் பதிவிடப் பட்டு இணையத்தில் வலம் வருகிறது.
########################## 
#புழுத்தறிவு நாய் ;-,விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு. அவர் தமிழர் கடவுளே இல்லை..

#தமிழன்;- சரிடா, 'விநாயகர் அகவல்' னு ஔவையார் ஏன் நூல் இயற்றினார்.?

அவரும் ஆரிய பார்பண கைக்கூலி , அவர் தமிழரே இல்லை..

#சரிடா,திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஏன் முதல் பாடலாக விநாயகர் துதி பாடினார்?

அவரும் ஆரிய பார்பண கைக்கூலி ,
அவர் தமிழரே இல்லை..

#சரிடா,திருமுறுகாற்றுப்படை தந்த சங்கத்தமிழ் புலவர்கள்

"#முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்"
னு ஏன் பாடினாங்க??

அவர்களும் ஆரிய பார்பண கைக்கூலிகள் , அவர்கள் தமிழர்களே இல்லை..

#சரிடா, பிள்ளையார்பட்டி ல 1600 ஆண்டுகள் முன்னரே பாண்டிய மன்னர் ஏன் கற்பக விநாயகர் கோவில் கட்டினார்?

அவரும் ஆரிய பார்பண கைக்கூலி ,
அவர் தமிழரே இல்லை..

#சரிடா, திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலை சோழர்கள் பல்லவர்கள் நாயக்க மன்னர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் உருவாக்கினாங்க?

அட அவர்களும் ஆரிய பார்பண கைக்கூலிகள் தான் . அவர்களும் தமிழர்களே இல்லை..

#சரிடா கொங்கு வேளாளக் கவுண்டர்கள் திருமணங்களில் பாடப்படும் கொங்கு மங்கல வாழ்த்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கி பாடியிருக்கிறாரே?

அவர் ஆரிய கைக்கூலி. . அவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை தோழரே.

#சரிடா #தஞ்சை_பெரியகோவில் கட்டிய #ராஜ_ராஜ_சோழன் முதற் கடவுளாக விநாயகரை வைத்துள்ளாரே?

#அவர் ஆரிய கைக்கூலி. . அவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை தோழரே.

#ஆக,சங்கத்தமிழ் புலவர்களும் தமிழர் இல்ல,சங்க கால மன்னர்களும் தமிழர் இல்ல,சங்கத்தமிழ் வரலாற்றுல யாருமே தமிழர்கள் இல்ல.. ஆனா நீ தான் தமிழன்.
ஆமா உன் பெயர் என்ன ராசா?
.தமிழன்...

!!அடி செருப்பால நாயே ஓடிப்போய்டு தூ
##############################
மேற்கண்ட பதிவின் வரலாற்று திரிபுகளை யும் மதவெறி கக்கும் நஞ்சு வாரத்தைகளையும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள விளக்கம் தேவைப்படுகிறது.

அதில் ஒன்று கீழே..
பிள்ளையார் பற்றி வந்த ஒரு இந்துத்துவா கட்டுரை ச்சீத்தூ...ச்சீத்தூ என்று வெறுப்பு அனல் கக்குகிறது. ஆனால் வரலாற்று உண்மை என்ன ?

1. கிபி 609-642 வடக்கில் ஆட்சி புரிந்த இரண்டாம் புலிகேசியை நரசிம்ம வர்ம பல்லவன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.சாளுக்கிய தலைநகரமான வாதபியை வென்று தீக்கிரையாக்கினான். அந்த போரின் வெற்றியை நினைவு கூறும் வண்ணம் வாதாபி கோவிலில் இருந்த வித்தியாசமான யானைத் தலை மனித உடல் சிலையை உடைத்து வந்து தனது கோட்டை வாசல் கதவில் பொறுத்தினான். அது தான் வாதாபி விநாயகர் என்று இப்போதும் பிரசித்தம். தமிழகத்திற்குள் விநாயகர் இப்படித் தான் நுழைந்தார்...

விநாயகர் எப்படித் தோன்றினார் என்பதற்கு 32 வகையான கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் பெரும்பாலான கதைகளில் மனிதத் தலை வெட்டப்பட்டு ஒரு யானைத் தலையை சேர்த்ததாகவே இருக்கின்றன. அதாவது விநாயகர் என்பவர் போர் முனையில் கொல்லப்பட்ட ஒரு இனக்குழுவின் முக்கிய தலைவர் என்கிற காரணத்தால் அந்தக் குழு மக்களால் வழிபடப் பட்டவர்.

விநாயகர் தமிழ்நாட்டில் நுழைந்தது கிபி 6 ஆம் நுற்றாண்டில்.

1) சங்க காலம் என்பது கிபி 4 ஆம் நூற்றாண்டு முன்பு வரை மட்டுமே. எந்த சங்க இலக்கியத்திலும் பிள்ளையார் பற்றி குறிப்பிடப்படவில்லை.

2) ஔவையார் என்பவர் ஒரு குறிப்பிட்ட ஒரு நபர் அல்ல... சங்க காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக ஔவையார் என்கிற பெயரில் பல பெண் புலவர்களால் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது..  குறிப்பிட்ட ஒளவை எழுதிய விநாயகர் அகவல் 10 ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது.

3. பாண்டிய மன்னர் கட்டிய பிள்ளையார் பட்டி கோவில் தான் தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பழமையான பிள்ளையார் கோவில். ஆனால் அங்கு அவர் சிலை பூணுல் அணிந்திருப்பதில்லை.

4. கம்பர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. ஆரியர்கள் தங்களது வைதீக மதத்தை இங்குள்ள மக்களின் வழிபாட்டு முறைகளோடு கலக்க முயற்சி செய்த காலங்களில் முக்கியமானது கம்பர் காலம்.

இந்த எளிமையான கடவுள் பிள்ளையாரை ஆர்எஸ்எஸ் சங்கிகள் ஆரம்பகாலத்தில் ஏற்கவில்லை. விக்னேஷ்வரன் என்கிற விநாயகர் பெயர் பிள்ளையாருக்கு வந்ததன் காரணம் இது தான். விக்கினம் என்றால் பிரச்சினை, வில்லங்கம். அப்படி வெறுத்த பிராமணர்கள் பிற்காலத்தில் தமது வைதீகக மதத்தை விரிவு படுத்த அவருக்கும் பூநூலை மாட்டிவிட்டு தங்களது அடையாளமாக மாற்றிக் கொண்டனர்.

இன்று விநாயகர் ஆர்எஸ்எஸ் ஸின்.மதவெறி அரசியலின் குறியீடாக மாறி நிற்கிறார்.

இப்போது இந்த fwd க்கு வருவோம்...
மேற்கூறிய எல்லாமே ஆரியர்கள் , திராவிடர் கலாச்சாரத்தை ஆக்கிரமித்து,  தங்களது கலாசாரத்தை அதில் கலந்து ஒன்றிணைக்க ஆரம்பித்த நெடும் வரலாற்று முயற்சியின் பின்னால் வரும் காலங்கள்...

அந்தந்த காலங்களில் அந்த மன்னர்களோ, புலவர்களோ கடவுளை நாம் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று நல்ல எண்ணம் கொண்டே கலவையான இந்து மதத்தை பரப்பினர்.

ஆனால் அதுவே மதவெறி அரசியலாக வெளிப்படும் காலம் இன்றைய இந்துத்துவா வெறியர்கள் காலம்.

"ஔவை""சங்க காலம்" என்று சொற்களை பயன்படுத்தி காலங்களை குழப்பி அந்தப் பதிவில் உண்மைக்கு மாறாக தகவல் தரப்பட்டுள்ளது..

பொய்யான தகவல்கள் தருவதும்,மரியாதையின்றி பேசுவதன் மூலமும் உண்மை போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகின்றனர் இந்துத்துவா வெறியர்கள்...

தமிழகத்தில் ஆரியர்களின் சைவ, வைணவ சமயங்கள் வளர்ந்ததில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் சோழர்களே...
குறிப்பாக ராஜ ராஜ சோழன்...
காரணம் ஆரியர்கள் இங்கு வந்த காலம் தொட்டே அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமாகவே எப்போதும் இருந்து கொண்டனர்.

ஆகவே வந்தேறி ஆரியர்கள் கடவுளேயானாலும் கூட விநாயகரை இங்கு யாரும் எதிர்ப்பதில்லை, வெறுப்பதில்லை. பிள்ளையார் ஊர்வலத்தில் வெறித்தனமாக ஊளையிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் காலிகளைக் கண்டு தான் சாதாரண பிள்ளையார் பக்தன் கூட வெறுப்பை அடைகிறான்.

http://maattru.com/birth-and-murder-of-pillaiyar/