Friday, August 12, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (301-400) - பாகம் 4

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (301-400) - பாகம் 4

(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

301.
"தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டன என்பதை உள்ளிட்ட ஐக்கிய இராஜதானியின் ஈடுபாட்டை மற்றும் என்ன நேர்ந்தது என்பதை சரியாகவும் நம்பகமான முறையிலும் இனங்காண்பதற்காக மற்றும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்களை இனங்காண்பதற்காகவும்' 2001 - 2009 வரையிலான எட்டு வருடக் காலப்பகுதியொன்றை மறு புறத்தில் ஈராக் பற்றிய விசாரணை பரிசீலிக்கிறது. அதன் ஆணை, எல்.எல்.ஆர்.சி.யுடன் நெருக்கமான சமாந்திரத்தைக் கொண்டதாகக் கூறப்பட்ட போதிலும், தனியார் அல்லது நிறுவக பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக அது தெளிவாகவே வடிவமைக்கப்படவில்லை என்றாலும் அது ஆணைக்குட்பட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான அரசியல் பொறுப்புக்களை ஆராய்ந்து எதிர்காலத்துக்கு அதிலிருந்து பாடங்களைப் பெறுவதைக் குறிப்பதாகவுள்ளது.

தனது விளக்கத்தில் இது பற்றிய புரிந்துணர்வை உறுதிப்படுத்திய சட்ட மா அதிபர், நாட்டின் இடப்பரப்பில் உள்ளவர்களைத் தோதானவாறு பாதுகாப்பதற்காக நீண்ட காலமாக ஒன்றன் பின் ஒன்றாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கிறது என்றார். இது முக்கியமானதொரு உத்தரவாதம் என்ற போதிலும், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்களுக் கான பொறுப்புக்கூறலுக்கான கடமையை நிறை வேற்றுவது போன்றதாக அது இல்லை மற்றும் இருக்க டியாது என்பதோடு, பாதிக்கப்பட் டோன் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான உரிமைகளை மதிப்பதென்றுமாகாது.

302.
பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பான எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை பற்றி ஒன்றுக்கு ஒன்று மாற்றமானதாக அரசாங்கத்தின் பகிரங்க நிலை காணப்படுகிறது. ஒரு புறத்தில், சிரேஷ்ட இலங்கை அதிகாரிகள் கடந்த கால மீறல்கள் தொடர்பில் தண்டனை அளிக்கும் பொறுப்புக்கூறல் அமைப்பாக இல்லாது மீளிணக்கப்பாட்டை நோக்காகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கியதாக எல்.எல்.ஆர்.சி. உள்ளது என்பதை வலியுறுத்துகின்றனர். அதே நேரம் அரசாங்க அதிகாரிகள் விடுக்கும் ஏனைய அறிக்கைகள், சில குறிப்பிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமை கள் மீறல்கள் சம்பவங்களை புலனாய்வு செய்வ தற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர், ஜி. எல். பீஸ், சர்வதேச சட்டத்தின் குற்றஞ்சாட்டப்பட்ட தனியான மீறல்களை ஆராய் வதற்கு "போதியளவாக' எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை இருப்பதாக பகிரங்கமாகத் தெவித்துள் ளார். பின்பொரு சந்தர்ப்பத்தில், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, குறிப்பிட்ட குற்றஞ் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கான உகந்த இடம் எல்.எல். ஆர்.சி.யே என அவர்கள் அழுத்தமாகத் தெவித்தனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அங்கத்துவம் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: (பாகம்) - 17

303. இறுதியாக, எல்.எல்.ஆர்.சி.யின் காலஞ்சார்ந்த ஆணை தெளிவாக 2009, மே 19ஆம் திகதி முடிவுக்கு வருகிறது, என்பதோடு அம்முடிவுத் தேதியில் இருந்து அதற்குப் பின் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னால் நிகழ்ந்த நம்பகமான மீறல்களை எல்.எல்.ஆர்.சி. கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது அதற்குத் தடையாக இருக்கும்.

304.
அது எவ்வாறு இருப்பினும், அரசாங்கம் அல்லது அதன் முகவர்களை உள்ளிட்ட யுத்தத்தின் எந்தவொரு தரப்பினராலும் புரியப்பட்ட சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கான தெளிவான அதிகாரத்தைக் கொண்ட பொறுப்புக்கூறும் பொறியியல் தொகுதியொன்றுக்கான தெளிவான சர்வதேச தரங்களை எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை திருப்திப்படுத்தவில்லை.

2. ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற தன்மை

305.
குற்றஞ்சாட்டப்பட்ட மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை புலனாய்வு செய்யும் அமைப்பொன்று சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைச் சர்வதேச சட்டம் தேவைப்படுத்துகிறது. சுயாதீனம் என்பது நிஜ சுயாதீனம் மற்றும் அதுபற்றிப் பகிரங்கமாகக் கருதப்படுவதுமாகும்.


306.
எல்.எல்.ஆர்.சி.யைப் பொறுத்த வரையில், சுயாதீனமாகச் செயற்படுவதற்கான அவர்களது திறன் மற்றும் பக்கசார்பற்ற தன்மை ஆகியவற்றை விட்டுக்கொடுக்கக் கூடிய பாரிய அக்கறை முரண்பாடுகளை குறைந்த பட்சம் அதன் மூன்று உறுப்பினர்கள் கொண்டுள்ளார்கள் என்பதோடு, அவர்கள் சுயாதீனமானவர்கள் என்ற பொதுமக்கள் கருத்துணர்வைப் பாதிப்பதுமாகவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்கள் ஏப்பிரல் 2007 தல் டிசம்பர் 2008 வரை சட்ட மா அதிபராக இருந்துள்ளார் என்பதன் படி, எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் நேரடியாக இருக்கும் பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பிரதான சட்ட அலுவலராக கடமைகளைப் புரிந்துள்ளார்.

மேலும், முன்பிருந்த விசாரணை ஆணைக் குழுவொன்றில் ( இலங்கையில் 2005 ஆகஸ்ட் முதல் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு) அவரது செல்வாக்கு பாரியதொரு அக்கறை முரண்பாட்டைக் குறிப்பதோடு, ஆணைக் குழுவின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச சுயாதீன புத்திஜீவிகள் குழுவின் பாரிய பகிரங்க விமர்சனத்துக்கான காரணமாகவும் அது இருந்தது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி மாற்றமடைந்து வரும் இராணுவ மற்றும் மனிதாபிமான நிலமைகள் பற்றிய அதன் கருத்துக்களுக்குச் சாதகமாக வாதாடிய ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதுவர் இரண்டாவது உறுப்பினராவர், மூன்றாவது உறுப்பினர் முதலில் வெளிநாட்டமைச்சின் சட்ட ஆலோசகராக இருந்து பின் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்பட காலப்பகுதி யில் அமைச்சின் சர்வதேச சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றினார்.

307.
அவர்களின் ஏனைய தகைமைகள் எதுவாக இருந்தாலும், அத்தகைய அக்கறை முரண்பாடுகளுக்கு ஆளாகியுள்ளவர்கள் தாம் அரசாங்கத்தின் உயர் நிலை அதிகாரிகளாகக் கடமை புரிந்த காலகட்டத்தில் நிகழ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை பாரபட்சம் இன்றிப் புலனாய்வு செய்து அவற்றுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பான பங்களிப்பை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஒரு அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பது முற்றிலும் பொருத்தமற்றதாகும். எக்கோணத்தில் இருந்து பார்த்தாலும், தாம் உயர் பதவிகளை வகித்த ஒரு அரசாங்கத்தின் அல்லது அவர்களைத் தானாகவே நியமித்த ஜனாதிபதியின் செயற்பாடுகளை அவர்கள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யமுடியும் என எதிர்பார்ப்பது உண்மையிலேயே முடியாத தொன்றாகும். ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் எல்.எல்.ஆர்.சி.க்கு வெளியே ஆனால் அதன் செயற்பாட்டுக் காலப்பகுதியில் பகிரங்கமாக சொன்னவைகள் இது தொடர்பான அச்சங்களை மேலும் வலுப்படுத்துவதாயிருக்கின்றன.

308.
மேலும், விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப் படுத்துவதற்கான பாத்திரத்தைக் கொண்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களைப் போன்ற ஒப்பிடக்கூடிய அமைப்புக்கள் பங்காளர்களின் கலந்துரையாடும் செயற்பாடொன்றினூடாக அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்களின் நியதியாகும்: "உறுப்பினர்களிடையே மனித உரிமைகள் துறையில் மற்றும் தோதானவிடத்து, மனிதாபிமான சட்டத்தில் நிபுணத்துவம் உடையவர்களை உள்ளிட்ட அவற்றின் உறுப்பினர்களின் தகமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை பொதுமக்களுக்கு தெளிவாக்குவதற்கான அடிப்படைத் தத்துவத் தின்படி, குறிப்பாக அவர்கள் "மனித உரிமைகள் மீறல்களுக்கு இலக்காகிய பெண்கள் மற்றும் ஏனைய தோதான குழுக்களின் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.'

309.
எல்.எல்.ஆர்.சி. பற்றிய குழுவின் கேள்விகளுக்கு அதன் எழுத்து மூலமான பதிலில் "எல்.எல்.ஆர்.சி.யின் தொகுப்பு இலங்கையின் பல்லின மற்றும் பன்முக அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தமது துறையில் சிறந்து விளங்கிய பல சமூகங்களைச் சேர்ந்த மாண்புமிக்கவர்களை அது உள்ளடக்கு கிறது' என அரசாங்கம் அழுத்தமாகத் தெவித்துள்ளது. ஆயினும், குழுவின் கருத்துப்படி, எல்.எல்.ஆர்.சி.இன் அங்கத்துவம் இலங்கைச் சமூகத்தின் பன்முகத் தன்மையைப் போதியளவு பிரதிநிதித்துவம் பிரதிபலிக்கவில்லை என்பதோடு, சகல ஆணையாளர்களினதும் பின்னணி மற்றும் நிபுணத்துவம் ஆணைக்குத் தெளிவாகவே சம்பந்தப்பட்டதாயில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒவ்வாத அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருந்த போதிலும் அவர்கள் எப்படித் தாக்கமுற்றார்கள் என்பதற்குக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், எட்டு ஆணையாளர்களுள் ஒரு பெண் மாத்திரமே இருக்கிறார்.

அதே போன்று, ஒரேயொரு ஆணையாளர் மாத்திரமே, அவரே ஒரேயொரு பெண் ஆணையாளருமாவார் . தமிழராக இருப்பதோடு, ஒரேயொரு ஆணையாளரே முஸ்லிம் பின்னணியைக் கொண்டவராக இருக்கிறார்.

310.
ஆயினும், மிக முக்கியமாக, அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட முன்னாள் அதிகாரிகளுடன் எல்.எல்.ஆர்.சி. அவர்கள் சார்பில் கனமாக வுள்ள, ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்ட சுயாதீனம் மற்றும் பாரபட்சம் அற்ற தன்மை போன்ற விடயங்களுக்குப் புறம்பாக இக் காரணி எல்.எல்.ஆர்.சி. பற்றிய பொதுமக்கள் உணர்வைப் பாதித்து, அதனுடன் ஒன்றோடொன்று சேந்து செயற்படவோ அல்லது அதன் பெறுபேறுகளுக்கு நம்பகத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கவோ என்பது பற்றிய மக்களின் தீர்மானத்தை எடுக்கும் மனநிலையிலும் ஒரு தன்மையை ஏற்படுத்தும்.

311.
இவ்வாறாக, பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிகளின் சுயாதீனம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச தரங்களுக்கெதிரே நிறுத்திப் பார்க்கும் போது எல்.எல்.ஆர்.சி.

அதன் அமைப்புத் தொடர்பாக பாரிய அளவில் குறைபாட்டினைக் கொண்டி ருந்தது. அதன் அமைப்பு அதன் சுயாதீனத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும், குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குற்றவகையில் சம்பந்தப் படுத்துவதைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கானதொரு அமைப்பு அது என்ற நியாயத்தை பலவீனப் படுத்துகிறது.

3. எல்.எல்.ஆர்.சி. இன் ஏனைய வடிவமைப்பு அம்சங்கள் (அ) பகிரங்க அறிக்கை விடுத்தல்

312.
எல்.எல்.ஆர்.சி. போன்றதொரு ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், மேற்கொண்டு புலனாய்வுகளை அல்லது வழக்காடலை நடத்தல், மனிதப் புதை குழிகளில் இருந்து எச்சங்களைப் பரிசோதித்தல், இழப்பீடு, பல்வேறு நிறுவகச் சீர்திருத்தங்கள் மற்றும் மீண்டும் நேராதிருப்பதற்கான உத்தரவாதங்கள் போன்ற இன்னோரன்ன சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய அதன் தீர்மானங்களை மற்றும் அதன் பரிந்துரைகளைக் கொண்டதொரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் முடிவுற வேண்டும் என சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் குறிப்பிடுகின்றன.

வெளியிடுவதனால் குறிப்பிட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அதன் விளைவாக அவரது உயிருக்கோ அல்லது பௌதிக பாதுகாப்புக்கோ ஆபத்து நேரக் கூடும் என்பதற்காக மாத்திரம் சிலவற்றைத் தடுத்து மற்றும் சுருக்கி அவை பகிரங்கப்படுத் தப்பட வேண்டும் என்பதையும் சிறந்த பழக்க வழக்கங்கள் தேவைப்படுத்து கின்றன. எல்.எல்.ஆர்.சி.யின் ஆணையோ அல்லது விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டமோ இறுதி அறிக்கை ஒன்றை விடுப்பதைத் தேவைப்படுத்தவில்லை. மக்கள் நம்பிக்கையை பாதித்து, மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் செயற்பாட்டுத் தாக்கத்தை மற்றும் பின்தொடர் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவ்வாணைக்குழு அதன் ஆணைக்குப் பதிலளித்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இலங்கையின் முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் வரலாறு ஒரு உருமாதிரியை எடுத்துக் காட்டுகிறது. எல்.எல்.ஆர்.சி.யின் இறுதி அறிக்கையின் பிரதியொன்று ஐக்கிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றிருந்த போதிலும் அதனை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதே மிக முக்கியமானதாகும். எல்.எல்.ஆர்.சி. அதன் சகல தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அதிக அளவில் பகிரங்கமாக விநியோகிப் பதை நல்ல பழக்க வழக்கங்கள் தேவைப் படுத்துவதாயிருக்கும்.

(ஆ) பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்குப் போதிய நடவடிக்கைகள் இன்மை

313.
எந்த ஒருவனதும் பௌதிகப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தை நியாயமான மற்றும் எதிர்பார்க்கக் கூடிய மூன்றாம் நபர்களிடம் இருந்து அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்பதை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தேவைப்படுத்துகிறது. சூழ்நிலைப் பொருத்த மனித உரிமைகளை மையமாகக் கொண்ட ஆணைக்குழுக்களின் அமைப்பு விடயத்தில் இத்தரம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது: "ஆணைக்குழுவுக்குத் தகவலை வழங்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு, பௌதிக மற்றும் மனோதத்துவ நல்வாழ்வு மற்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அவர்களின் அந்தரங்கம் ஆகியவற்றை உறுதி செய்ய பயனுறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படல் வேண்டும்.' இது தொடர்பாக எல்.எல்.ஆர்.சி.க்கு சாட்சியமளிப்பதா இல்லை எனச் சிந்திப்பவர்களுக்கு நிச்சயத் தன்மை, வருவதுரைக்கக் கூடிய மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக இது தொடர்பில் அதன் ஆற்றல் மற்றும் அதிகாரத்துக்கான ஒரு தெளிவான சட்ட அடிப்படை இருத்தல் வேண்டும். பாதிக்கப் பட்டவர்களின் தேவைக்காகவே பெரும்பாலும் பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிகள் உள்ளன என்பதால் இச்செயற்பாட்டின் மையத்தில் அவர்களை வைத்தல் வேண்டும். இதற்காக, பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் "கண்டிப்பாகச் சுய விருப்பத் தின்' அடிப்படையிலேயே பொதுவாகச் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாட்டை சர்வதேச தரங்கள் வழங்குகின்றன. சாட்சி பகர்வதற்கு முன்பும் அதன் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்ப தற்காக சமூக மற்றும் மனோதத்துவ சேவையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

மற்றும் சாட்சியம் அளிப்போரின் செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உதாரணமாக கௌத்தமாலாவிலும் சியர்ரா லியோனிலும், இரகசியத் தன்மைக்கான உத்தரவாதத்தையும் பேருவிலும் தென் ஆபிரிக்காவிலும் மனோதத்துவ உதவியையும் அத்துடன் தென் ஆப்பிரிக்காவைப் போன்று சாட்சி களுக்கான முழுமையான பாதுகாப்பு ஆகியவை போன்ற பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கை வரிசையினை ஏனைய நாடுகளின் ஆணைக்குழுக்கள் பாதிக்கப் பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் வழங்குகின்றன.

314.
எல்.எல்.ஆர்.சி.க்கு வழங்கப்பட்ட ஆணையோ விசாரணை ஆணைக்குழுச் சட்டமோ சாட்சியம் வழங்க முன்வரும் ஆட்களுக்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக் கைகளையும் குறிப்பிடவில்லை. மாறாக விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 13ஆம் பிரிவு "சாட்சி வழங்கும் எவருக்கும் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் சாட்சி வழங்கும் ஒருவருக்கு அத்தகைய நீதி மன்றத்துக்குச் சாட்சி வழங்குவது தொடர்பாக உரித்தாகும் சகல வரப்பிரசாதங்களுக்கும் உரித்தாகும்' எனக் குறிப்பிடுகிறது.

"ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க முன்வரும் எவருக்கும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என எல்.எல்.ஆர்.சி.யின் தலைவர் உறுதியளித் துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த உறுதிப்பாட்டை குழுவினால் உறுதி செய்ய முடியாமலிருக்கிறது என்பதோடு. சாட்சிகளைப் பாதுகாக்கும் எல்.எல்.ஆர்.சி.யின் நடைமுறை பற்றி அதன் எழுத்துமூலமான கேள்விகளுக்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

315.
அதற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவலின் அடிப்படையில், சாட்சிகளுக்கு குறிப்பான பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குவது தொடர்பான சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குழுவினால் தீர்மானிக்க முடியாதிருக்கிறது. இலங்கையில் மேலோங்கி இருந்த அச்ச சூழல் மற்றும் பயனுறு சாட்சியங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை இன்மையினால் பாதிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களின் அனுபவம் ஆகியவற்றை நோக்கும் போது இது குறிப்பாகக் கவலைக்குரிய விடயமாகும். பாரிய மீறல்கள் பற்றிய ஆணைக்குழு தொடர்பாக போதிய சாட்சி களுக்கான பாதுகாப்பு இன்மை பற்றி உள்ளார்வமிக்க விமர்சனத்தை ன்வைத்த 2008 ஆம் ஆண்டின் ஐ.ஐ.ஜி.ஈ.பி. யின் கருத்து இங்கு விசேடமாக ஏற்புடைத்தாகிறது.

316.
சாட்சிகளுக்கு மேலும் அதிக பாதுகாப்பை வழங்குவதற்கான 2008இன் உத்தேச சட்டவாக்கத்தை நிறைவேற்ற முடியாமற் போனதைத் தொடர்ந்து, தோதான விடயத்தில் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான மிகக் குறைவான சட்ட அடிப்படையே இலங்கையில் உள்ளது.

4. எல்.எல்.ஆர்.சி.யின் நடைமுறை (அ) சாதகமான நடவடிக்கைகள்

317.
தனது ஆணையை நிறைவேற்று வதில், எல்.எல்.ஆர்.சி.கொழும்புக்கு வெளியே குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயங்களை மேற் கொண்டது. ஏனைய இடங்களுக்குப் புறம்பாக, வவுனியா (மெனிக் பாம் உள்ளிட்ட), கிளிநொச்சி, ல்லைத்தீவு, ஓமந்தை (தடுப்புக்காவல் காம் உள்ளிட்ட), மட்டக்களப்பு, திருகோண மலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அது அமர்வுகளை நடத்தியது.

கொழும்புக்கு வெளியே அது நடத்திய அமர்வுகளின் போது, குறிப்பாகப் பாதிக்கப் பட்டோரையும் உள்ளடக்கிய கணிசமான எண்ணிக்கையிலான சாட்சிகளிடம் இருந்தும் அவர்களின் அனுபவம் பற்றி நேரடியாக எல்.எல்.ஆர்.சி. சாட்சியங்களைப் பதிவு செய்தது. வடக்கிலும் கிழக்கிலும், குறிப்பாகப் பெண்களை உள்ளிட்ட கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் சாட்சியம் அளிக்க சுயமாகவே முன்வந்தது, இலங்கையில் உண்மையைக் கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மெய்யானதொரு செயற்பாட்டின் அவசரத் தேவையை உணர்த்துவதாகவுள்ளது.

318.
அவற்றின் செயற்பாட்டின் முடிவில் ஏனைய அத்தகைய ஆணைக்குழுக்கள் பொதுவாக பரிந்துரைகளைச் செய்யும் அதே வேளையில், தடுத்து வைத்தல், நீதியும் அமைதியும், பொது நிருவாகம் மற்றும் மொழி, காணி மற்றும் ஏனைய சமூகபொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார விடயங்களை உள்ளிட்ட. அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என அது கருதும் விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எல்.எல்.ஆர்.சி. ஏற்கனவே இடைக்கால பரிந்துரைகளைச் செய்துள்ளது. இப்பரிந்துரைகளின் வடிவமைக்கப்பட்ட, அமைச்சுக்களுக்கிடையிலான அமலாக்கத் தொடர் நடவடிக்கை என விளக்கப்பட்டுள்ள வசதியளிப்பை வழங்குவதற்காக முகவர்களிடையிலான ஆலோசனைக் குழு என்றதொரு அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட பொறித்தொகுதியொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

(ஆ) உண்மையைக் கண்டறிவதில் அல்லது புலனாய்வில் தெளிவானதொரு அணுகுறை இல்லாத நிலை

319.
உண்மையைக் கண்டறிவது பொறுப்புக்கூறலின் அடிப்படை அம்ச மொன்றாகும். கொள்கையளவில், எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை, அது விடயத்தில் தெளிவற்றதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் அத்துடன் பாதிக்கப்பட்டவர் களின் அனுபவம் தொடர்பானவற்றை உள்ளிட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய உண்மையைக் கண்டறிவதில் அதன் பங்களிப்பை செய்வதை விட்டும் அதனைத் தடுக்கவில்லை. ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அப்பால், எல்.எல்.ஆர்.சி.யின் உண்மையைக் கண்டறியும் நிலைச்சக்திக்கான பங்களிப்பு அதன் முறைமை மற்றும் அதன் அன்றாட நடைமுறை ஆகியவற்றினால் உருவாக்கப்படுவதாகும். அதன் தீர்மானங் களின் நம்பகத்தன்மை, ஓரளவு அந்த முறைமையின் ஒளிவு மறைவற்ற தன்மையில் தங்கியிருக்கும்.

வடக்கு, கிழக்கில் சாட்சியமளிக்க முன்வந்தோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை: (பாகம்) - 18

320.
கிடைக்கக் கூடிய தகவலை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, உண்மையைக் கண்ட றிவதற்காக அல்லது மீறல்களைப் புலனாய்வு செய்வதற்காக எல்எல்ஆர்சி பிரயோகித்த சகலது மடங்கிய முறைமையினை குழுவுக்குத் தெளிவாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.

ஏனைய நாடுகளில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் குறிப்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் துஷ்பிரயோகத்தின் உருமாதிரிகள் தொடர்பான இராணுவ நடவடிக்கை பற்றிய உத்தியோகபூர்வ பதிவுகளை, காவல்துறைப் பதிவுகளை மற்றும் நீதிமன்றப் பதிவுகளைப் பெற்று மீளாய்வு செய்வதை உள்ளிட்ட ஏனைய புலனாய்வு முறைகளுடன் சாட்சியங்களைப் பதிவு செய்வது ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன. சட்ட விரோதமாகத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது அல்லது பாதிக்கப்பட்டோர் மீதான மோதலின் விளைவுகள் ஆகிய விடயங்கள் தொடர்பான குறிப்பான புலனாய்வுகள் நடத்துதல் மற்றும் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நம்பகமாக அறிவதற்கான முறைமைகளை அமல்படுத்தல். அறிக்கைகள் பிரதி செய்வோர், ஆய்வாளர்கள், புலனாய்வாளர்கள், தொடர்பாடல் துறைசார்ந்த நிபுணர்கள், பாலியல் வித்தியாசம் பற்றிய நிபுணர்கள் மனநோய் மருத்துவர்கள் ஆகியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணியாட்டொகுதியினரை அவை தொழிலில் அமர்த்தியுள்ளன. எல்எல்ஆர்சியைப் பொறுத்த மட்டில், அவர்களது சாட்சியம் பதியும் வேலை முக்கியமாக எழுத்து மூலமான சாட்சியங்களைப் பெற்று அவை தோதானவையா என மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் சாட்சியத்தைப் பெறுவதா என்பதை ஆணைக்குழு தீர்மானிக்கும்.

ஐக்கிய நாடுகளுடன் நடத்திய சந்திப்பின்போது, சட்ட மா அதிபர், எல்.எல்.ஆர்.சி.யிடம் 4 ஆராய்ச்சியாளர்கள், 4 காவல்துறை உத்தியோ கத்தர்கள், 4 மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சில துணை பணியாட்கள் அடங்கிய மொத்தம் 20 பேர்களைக் கொண்ட பணியாட்டொகுதி ஒன்று இருப்பதாக கூறியதோடு, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் மிகவும் இயல்புக்கு மாறான நிலைமை தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்குத் தேவையான மூலங்களை விட அது மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், எல்.எல்.ஆர்.சி. அதன் நடைமுறையில், யுத்தம் மற்றும் மீளிணக்கப்பாட்டின் சர்ச்சைக்குள்ளாகும் மற்றும் அவதானம் குறைவான வரலாற்று அம்சங்களின் பகுப்பாய்வில் இலேசாக ஈடுபடுவதோடு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது புரியப்பட்ட மீறல்கள் மீதான அதன் பாத்திரம் தொடர்பாக இருமனப் போக்கையும் நிச்சயமற்ற நிலையையும் பிரதிபலிக்கிறது.

321.
குறிப்பிட்டது போன்று, நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் சாட்சியங்களை எல்.எல்.ஆர்.சி. பெற்று வந்துள்ளது. சாட்சியங்களை வழங்குமாறு அழைப்பு விடுத்தல் மற்றும் சாட்சிகளைத் தெரிவு செய்தலுக்கான அதன் முறைமை தெளிவற்றதாகவுள்ளதோடு, அது ஒழுங்கானதொன்றல்ல என்ற கருத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது. பாதிக்கப்பட்டோரைப் பொறுத்த வரை, உண்மையைக் கண்டறியும் முயற்சியில் சாட்சியங்கள் சுயமானதாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச தரங்களுடன் அது ஒத்திருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தகவலை உடையவர்கள் அல்லது பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் அதன் முன் வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

322.
எல்.எல்.ஆர்.சி.யின் இணையத்தளத்தின்படி, 2011 ஜனவ இறுதியில் இருந்தவாறாக, கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளின் போது சுமார் 148 தனி நபர்கள் மற்றும் / அல்லது அமைப்புக்கள் சாட்சியமளித்துள்ளனர். இத்தனி நபர்கள் அரசாங்கத் துறையில் மற்றும் வர்த்தகம், சமூகம் அத்துடன் சிவில் தலைமைத்துவம், உயர்தொழில்சார் அமைப்புக்கள், உயர்கல்வி மற்றும் சிவில் சமூகத்தைச் சார்ந்த சேவையில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்றவர்களை மேவுவதாக இருந்தது. கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளின் போது, குறிப்பாக ஒரு சாட்சி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நீண்டதொரு அறிக்கையை வாசிப்பதைத் தொடர்ந்து பல மணித்தியாலங்களுக்கு ஆணையாளர்களுடன் சுகமான கலந்துரையாடல் நடைபெறும். குறிப்பாக ஏன் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிவடைந்தது என்ற தர்க்கத்துடன் கூடிய எதிர்கால மீளிணக் கப்பாடு மற்றும் வரலாற்று ரீதியிலான பிரச்சினைகள் பற்றிய கேள்விகள் இவ்வமர்வுகளின் முக்கிய தொனிப்பொருளாக அமைந்தன. பரவலான பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக இவ்வமர்வுகள் முக்கியமாக மற்றும் எல்.எல்.ஆர்.சி.யின் அதிக நேரத்தைக் குறிப்பதாகவும் இருந்த போதிலும், ஆயுதந்தாங்கிய மோதலின் இறுதிக்கட்டங்களின் போது, குறிப்பாக அரசாங்கம் அல்லது எல்...ஈ. ஈடுபட்டிருக்கலாம் என்ற மீறல்கள் பற்றி அவை மிகக் குறுகிய விளக்கத்தையே வழங்குகின்றன.

323.
சர்வதேச சட்டத்தின் மீறல்கள் பற்றி, பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் உள்ளாக, நேரடியாக நடவடிக்கை எடுக்கும் போது, எதிர்த்து நிற்காத போக்கே பின்பற்றப்படுகிறது. அவர்களது மிக முக்கிய கடமைகள் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நேர்ந்தவை பற்றி அவர்கள அறிந்திருந்தனர் என்ற போதிலும், பாதுகாப்புச் செயலாளரும் ஐந்து மிக உயர் பதவி வகிக்கும் இராணுவ அதிகாரிகளும் ஒவ்வொருவராக குறுகிய நேரத்துக்கு மாத்திரமே ஆணைக் குழுவின் ஆரம்ப அமர்வுகளின் போது அதன் முன்னிலையில் சமூகமளித்தனர். இந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதும், மீறல்கள் பற்றிய பொதுவான குற்றச் சாட்டுக்கள் அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான சகலதுமடங்கிய வியூகம் பற்றியே அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சர்வதேச ஊடகங்களில் பொதுவாக அறிவிக்கப்பட்ட மீறல்கள் பற்றி குறிப்பான விடயங்களை அபூர்வமாக ஆணையாளர்கள் அணுகினர். "பொதுமக்கள் காயமடைவது மற்றும் கொல்லப்படுவது தொடர்பில் பூஜ்ய சகிப்பு தன்மை' என்ற உறுதிப்பாடுகள் போன்ற குழுவினால் தொகுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக முரண்பாடான நிலையிலான சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

புலனாய்வு முறைமையின் நலிவையும், பாரிய குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதில் ஆணைக்குழு வின் திறனை அதிகமாக மட்டுப்படுத்தும் விதத்தில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதையை வழங்குவதையும் இது குறிக்கிறது. சிரேஷ்ட அதிகாரிகளின் மற்றும் சிவிலியன் அதிகாரிகளின் சாட்சியம் தொடர்பான இத்தகைய விமர்சனம் அற்ற மற்றும் மரியாதை நிறைந்த அணுகுறை, யுத்தத்தின் இந்த முக்கிய கட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்து, இலங்கையின் சிவிலியன் மற்றும் இராணுவ தலைமைத்துவதற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அரசியல் அவதானமிக்க விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான எல்.எல்.ஆர்.சி.யின் மனவுறுதியைப் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை குழுவுக்கு எழுப்புகின்றன.

324.
யுத்தத்தினால் பாதிப்படைந்த பெரும்பாலான சாட்சிகள் உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கான எல்.எல்.ஆர்.சி.யின் கள விஜயங்களின் போது, அதன் அணுகு முறை பிரதேசங்களிலான சாட்சி முக்கியமாக இருந்த போதிலும், 2011 ஜனவ இறுதியில் இருந்தவாறாக எல்.எல்.ஆர்.சி.யின் இணையத்தளம் 2010 மே மாதம் ஆணைக்குழுவுக்கான ஆணை வழங்கப்பட்ட திகதியில் இருந்து 14 கள விஜயங்களையே குறிப்பிடுகிறது. வடக்கிலும் கிழக்கி லும் சாட்சியம் பதிவு செய்வதற்காக தோதான சாட்சியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் மிகக் குறைவாகவே இருந்ததோடு சாட்சியம் வழங்க முன்வந்த அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களுக்குக் சாட்சியம் அளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் பெண்களாவர்.

இப்பாரிய எண்ணிக்கை மற்றும் அது பற்றி ஆணைக்குழுவின் கவனத்துக்குச் சிவில் சமூகத்தால் கொண்டு வரப்பட்ட போதிலும், இவ்வெண்ணிக்கையிலான சாட்சிகளுக்கு வசதியளிப்பதற்காக அதன் சாட்சிகள் பதிவு செய்யும் அட்ட வணையை எல்.எல்.ஆர்.சி. மறுசீரமைத்ததாகக் தெரியவில்லை. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பாகம் 18 325. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதிக் கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் வழங்கக் கூடிய நேரடிச் சாட்சியம் யுத்தத்தின் இறுதிக்கட்டங் களின் போது நடந்தவை பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்காக முக்கியமாக இருந்த போதிலும், இச்சாட்சியத்தைப் பதிவு செய்வதற் காக எல்.எல்.ஆர்.சி.யின் மிகக் குறுகிய நேரமே ஓதுக்கப்பட்டுள்ளது. மேலும், மீறல்கள் பற்றி மிகச் செறிவான தகவலைக் கொண்ட சாட்சிகளுக்கு அநேகமாக 15 முதல் 20 நிமிடங்கள் அல்லது சில நேரங்களில் அதற்குக் குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், உண்மைகள் மற்றும் சிக்கல்கள் பற்றி சாட்சிகள் அறிந்திருப்பதைக் கண்டு பிடிப்பதற்கு இது போதியளவாக இல்லை என்பதோடு அப்படிச் செய்வது அவர்களுக்கு மரியாதை குறைவாகவும் இருக்கும்.

326.
காணாமல்போதல்கள் அல்லது தேடிக் கொள்ள முடியாத சொந்தக்காரர்களைப் பற்றிய குறிப்பான மீறல்களை வடக்கிலும் கிழக்கிலுமான இவ்வமர்வுகளின் போது பாதிக்கப்பட்டோர் அறிவித்த போதிலும், அவை பற்றித் தொடர்வதற்கு ஆணைக்குழு அவ்வளவாக அக்கறை காட்டவில்லை எனத் தெரிகிறது. தீமைக்குட்பட்டவர்கள் தாமாகவே வழங்கிய சாட்சியத்தின் பகிரங்க எழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்ததில், 2011 ஜனவரி நடுப்பகுதியில் இருந்தவாறாக, 80 சதவீதத்துக்கு மேலான பாதிக்கப்பட்டோர் காணமால்போதல்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத சொந்தக்காரர்கள் அல்லது எந்தெந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய சிக்கல்கள் தொடர்பாகவே கேள்விகளை எழுப்பியுள்ளனர். அநேகமாக இவ்விடயங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமைகள் மீறல்களைவிட ஆணையாளர்கள் மனிதாபிமான கவலைகளுக்கு ஆறுதல் அளிக்கவே முனைந்தனர். பல சந்தர்ப்பங்களில், சாட்சிகளிடம் தமது பிரச்சினைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் அவை மேலதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஆணையாளர்கள் கூறினார்கள்.

இப்படியாக எழுத்துமூலம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சாட்சிகளிடம் கேட்கப்பட்ட போது, அதற்காக எல்.எல்.ஆர்.சி.யின் படிவங்கள் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ மாத்திரமே வழங்கப்பட்டு இருந்தன.

327.
பல மட்டங்களில், ஏனைய இடங்களிலும் உண்மையைக் கண்டறியும் முயற்சியின் சிறந்த பழக்கங்களுக்கு இப்பழக்கங்கள் முற்றி லும் மாறுபட்டுள்ளன. இலங்கையில் இருப்பதைப் போன்ற சூழல்களில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் மோதலுக்கு வழிகோலிய வரலாற்று ரீதியிலான காரண காரியங்கள் மற்றும் அரசியல் குறைபாடுகள் பற்றிய பகுப்பாய்வினை உள்ளடக்கியிருந்த போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைக் சட்டத்தின் மீறல்களை ஆவணப்படுத்தி அவற்றைப் புலனாய்வு செய்வதற்கான அதிக முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போதியளவு புலனாய்வு முறைமை மாத்திரமன்றி இன்னும் உரிமைக்காக நேரத்தையும் ஏனைய வளங்களையும் ஒதுக்க வேண்டியுள்ளது. பாரிய அளவிலான மீறல்கள் நேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இடங்களில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களுக்கு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆளணி வழங்கப்பட்டிருந்தது, தேவையான விடத்து, பாதிக்கப்பட்டவர்கள் பல மணி நேரம் ஒதுக்குப்புறமாக தம் சாட்சியத்தை வழங்குவதற்கான வசதிகளை பாதிக்கப்பட்டோருக்கு அவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. கௌத்தமாலாவில், பாதிக்கப்பட்டோர் மற்றும் ஏனைய சாட்சிகளிடம் இருந்து வாய்மூலங்களைப் பெறுவதற்காக, குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக மற்றும் பாதிக்கப்பட்டோர் தமக்கு நேர்ந்ததை வாய்விட்டுச் சொல்வதை உறுதிப்படுத்துவதற்காக ஊழி யர்கள் தூர இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

எல்.எல்.ஆர்.சி. யின் செயற்பாட்டு முறைமை பாரதூரமாக உண்மையைக் கண்டறிவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என்பதோடு, மீறல்கள் பற்றிய பயனுறு புலனாய்வும் அதனால் நடைபெறவில்லை.


(இ) பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொள்ளாததொரு அணுகுமுறை

328.
வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப் பட்ட அமர்வுகளும் எல்.எல்.ஆர்.சி. பாதிக்கப்பட் டோரை மையமாகக் கொண்டதொரு அணுகு முறையைக் கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் சுகமாக நடைபெற்ற அமர்வுகளுக்கு மாறாக, காணாமல் போதல்கள் மற்றும் கண்டுபிடிக்க முடியாத அல்லது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆட்கள் பற்றி கேள்விகளை எழுப்பும் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஆணையாளர்கள் ஒரு கடுகடுத்த போக்கையே கடைப்பிடித்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்பது தொடர்பற்றதாக இருந்தது. ஏனைய சந்தர்ப்பங்களில், பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டபோது ஆணையாளர்கள் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் என்பதை மறுக்க முயற்சி எடுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அதில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டினர்.

ஏனைய சந்தர்ப்பங்களில், மனித உரிமைகள் தொடர்பான கேள்விகள் பற்றிய சட்டம் பற்றி ஆணையாளர்களே தவறிழைத்தனர். எல்.எல்.ஆர். சி. பாதிக்கப்பட்டோரை போதியளவு அவர்களது மரியாதைக்கு கண்ணியமளித்து நடத்தவில்லை என்பதோடு, மீறல்கள் மற்றும் தாம் அனுபவித்த அசாதாரணமான துன்பம் தொடர்பான சாட்சியத்தை எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கு நியாயமானதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வழக்கப்படவில்லை.

329.
கள விஜயங்களின் போது தம் கணவன்மார், சசோதார்கள் மற்றும் பிள்ளைகள் காணாமற் போனது அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளது பற்றி எல்.எல்.ஆர்.சி.க்கு கிடைத்த அதிக அளவிலான சாட்சியங்களைப் பெண்களே வழங்கி கண்ணீர் மல்க அவர்கள் எல்.எல்.ஆர்.சி.யின் உதவியை நாடினர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான ஆண்கள், போராளிகளும் பொதுமக்களும், கொல்லப்பட்டதால் மிகுதமான பெண்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சுமார் முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்டிருந்த எல்.எல்.ஆர்.சி. இப்பெண்கள் சாட்சியமளிப்பதற்காக ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதே போன்று தாமாகவே சாட்சி வழங்க மிக தூரம் பணத்தைச் செலவிட்டு வந்தவர்களுக்கும் ஏதும் உதவியைச் செய்யவும் ஆணைக்குழு முனையவில்லை.

330.
சாட்சியம் அளிக்க குறிப்பாக வடக்கி லும் கிழக்கிலும் ன்வந்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை எல்.எல்.ஆர்.சி. வழங்கவில்லை என்ற அறிக்கைகள், சகல பாதிக்கப்பட்டவர் களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் களுக்கு இச்செயற்பாட்டின் முக்கியத்தை அது மெச்சத் தவறியுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. தாம் ஆபத்தை எதிர்நோக்கலாம் எனக் கருதி பாதிக்கப்பட்டோர் கதைக்க முன் வராத ஒரு சூழலில் தமது உரிமை மற்றும் தம் குடும்பத்தவர்களின் உரிமை மீறல்கள் பற்றி தாமாகவே பகிரங்கமாக எல்.எல்.ஆர்.சி. முன் னிலையில் அதிக எண்ணிக்கையிலான பெண் கள் கதைக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பல பெண்களுக்குப் பகிரங்கமாக சாட்சியமளிக்க எல்.எல்.ஆர்.சி. மறுத்தது பெண்களுக்கு எதிரான அதுவும் பொறுப்புக்கூறல் பொறித்தொகுதி யொன்றினால் துயர் களையப்பட வேண்டிய யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டும் பொதுவானதொரு போக்கை உறுதிப்படுத்துகிறது.

331.
வேறு சூழ்நிலைப்பொருத்தங்களில், பாதிக்கப்பட்டோரின் மைய நிலையை மதிக்கும் விசேட முறைமைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பலர் ஒருவருக் கொருவர் என்றவாறு வசதியான சூழல்களில் தம் சாட்சியத்தை அளிக்க டிந்துள்ளது. உண்மை யைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் பொது வாக மனோதத்துவ ஆதாரத்தைப் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதுண்டு.

332.
இறுதியாக, அவர்கள் அனுபவித்த துன்பம் மற்றும் பட்ட காயங்கள் பற்றிப் பாதிக் கப்பட்டோருடன் கலந்துரையாடத் தவறியுள்ளது எல்.எல். ஆர். சி. இழப்பீட்டுக்கான பங்களிப்பை எந்த அளவுக்கு வழங்கும் என்ற ஆழ்ந்த ஐயத் துக்கு இடமளிக்கிறது. இழப்பீட்டை வழங்கும் திறனை அதன் ஆணை உள்ளடக்கிய போதிலும், அதன் ஆணை எவ்வித இழப்பீட்டை மேவுகிறது என்பது பற்றியும் பாதிக்கப்பட்டோர் தாம் நன்மையடையத் தகுதியுள்ளோர் வாதத்தை மெய்ப் பிப்பதற்குய பொறுப்புப் பற்றியும் ஆணைக் குழு விளக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர் பாக நடவடிக்கை எடுப்பதற்கான எல்.எல்.ஆர். சி.யின் நோக்கத்தை இக்கட்டத்தில் இது பாரிய சந்தேகத்துக்குட்படுத்துகிறதாயுள்ளதும் (ஈ) சாட்சிகளை அச்சுறுத்தல் மற்றும் குறைவான சாட்சிகள் பாதுகாப்பு 333. மேலும், குழுவிடம் இருக்கும் எல்.எல்.

ஆர்.சி.யின் பகிரங்க அமர்வுகளின் எழுத்துப் பிரதிகள் மற்றும் ஏனைய இலக்கியங்களின் அடிப்படையில், சாட்சிகளுக்கு அவர்கள் அளிக் கும் சாட்சியத்தின் பிரயோகம் பற்றி சாட்சியம் அளிக்கு முன் எந்தவிதத் தகவலும் வழங்கப்பட்ட தாகத் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில், பெயர்கள் குறிப்பிடவில்லை என்பதோடு ஏனைய அத்துடன் ஒத்த சந்தர்ப்பங்களில் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஏனைய சந்தர்ப்பங்களில் பெயர்கள் குறிப்பிடப்படா விட்டாலும் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் போன்ற சாட்சியத்தின் உள்ளடக்கத்தைக் கொண்டு அவர்களை இனங்காண டிந்தது.

"ஆணைக்குழுவுக்கு அவர்கள் வழங்கும் தகவலைக் கட்டுப்படுத்தும் விதிகள் பற்றி' சாட்சியம் அளிக்கும் சாட்சிகளுக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற சிறந்த பழக்கத்தை இது மீறுவதாக உள்ளது.

334.
குழுவின் மிக முக்கிய ஆதங்கமான எல்எல்ஆர்சிக்கு முன் சாட்சியமளிக்கும் சாட்சி களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்ற பின்னணிப் பொருத்தத்தில் எல்.எல்.ஆர்.சி.யின் இக்குறைபாட்டினைக் காணக்கூடியதாகவுள்ளது.

சாட்சிகளுக்கான சூழல் அநேகமாக அச்சுறுத்துவ தாகவும் சில வேளைகளில் எதிராகவும் இருப்ப தாக பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குழு வுக்கு வழங்கிய எழுத்து மூலமான பதில்களில், "இராணுவத்தினருக்கு எல்.எல்.ஆர்.சி. அமர்வு களில் எவ்விதப் பாத்திரம் இல்லை' என அரசாங்கம் வாதிட்ட போதிலும், சில சந்தர்ப்பங் களில் அமர்வுகள் நடைபெறும் அறையில் சீருடை தத்த இராணுவ வீரர்கள் வீற்றிருந்து சாட்சிகளையும் கேட்போரையும் புகைப்படம் பிடித்ததை குழு அறிந்துள்ளது. பாதுகாப்புப் படையினன் சட்டவிரோதமான நடத்தையினைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் போது அமர்வுகளில் அல்லது வெளியே இராணுவ அல்லது உளவுத்துறை அதிகாரிகள் இருப்பது பழிவாங்கும் நடவடிக்கையை அஞ்சும் சாட்சிகளை திடுக்கத்துக்குள்ளாக்குவதாயுள்ளது.

சாட்சிகள் சாட்சியமளிக்கும் போது அடிக்கடி அரசாங்க அதிகாரிகள் இருப்பதும் இதுபோன்றே உள்ளது.

335.
"சாட்சியம் அளிக்கையில் எந்தவொரு அச்சுறுத்தல், கட்டாயப்படுத்தல் அல்லது அலைக்கழித்தல் பற்றிய எதுவிதப் புகாரும் கிடைக்கவில்லை' என அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் கூறியபோதிலும், சாட்சிகள் சாட்சியம் அளிப்பதை அதைரியப்படுத்துவதற்கான தெளிவான முயற்சிகள் பற்றி குழு அறிந்தே உள்ளது. ஒரு சம்பவத்தின் போது அத்தகைய அச்சுறுத்தல் பாரதூரமானதென ஆணையாளர்களால் காணப்பட்டு அது பற்றி விசாரிக்குமாறு அவர்கள் காவல்துறையினரைப் பணித்தனர்.

"அச்சுறுத்தல் அல்லது எதிர்கால விளைவுகள்' பற்றி இனங்கண்டுள்ளதாகவும் ஆணைக்குழு லங்கள் அறிவித்துள்ளன. சாட்சியமளிக்க வேண்டாம் என சாட்சிகளை எச்சக்கை செய்தல், மாகாணங்களில் நடைபெறும் அமர்வுகள் பற்றி நேரகாலத்தோடு விபரங்களை வழங்க வேண்டா மென அதிகாரிகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தும் விதத்தில் ஆணைக்குழுவினை வீற்றிருந்து அவதானிக்கும் நபர்கள் பற்றிய வற்றை உள்ளிட்ட அறிக்கைகள் குழுவுக்குக் கிடைத்துள்ளன.

ஒரே சாட்சி, தான் ன்னர் அளித்த சாட்சியத் துடன் மாறுபட்டவற்றைக் கூறும் நிலைமைகளை உருவாக்கும் விதத்தில் சாட்சிகள் கையாளப்பட் டுள்ளது பற்றியும் குழுவுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. ஆணைக்குழுவின் முன்னிலை யில் தமது சாட்சியத்தைத் திரிபுபடுத்திக் கூறு வதற்கு சாட்சிகள் மீது அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை இது குறிக்கிறது. சாட்சிகள் வழங்கும் அவதானமிக்க சாட்சியங்களை குறுகிய மற்றும் நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் போதிய நடைமுறை நடவடிக்கை களையும் குழுவினால் காணமுடியாதிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் பகிரங்கமாக "சாட்சியொருவர் தனியாக எதனையும் சொல்ல விரும்பினால்..(அப்போது) அது பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள் என்பதோடு, உங்கள் அடையாளங் களைப் பொறுத்தவரை முழுமையான இரகசியத் தன்மையை நாம் பேணுவோம்' எனக் கூறிய போதிலும், அத்தகைய உறுதி மொழியைக் காப்பதற்கான நிறுவக அமைப்பையோ எல்.எல்.

ஆர்.சி.யின் ஆயுட்காலத்துக்குப் பின் அத்தகைய உறுதிப்பாட்டை காப்பதற்கான செயல்றை அடிப்படையையோ பற்றி குழு அறியவில்லை.

337.
இவ்வாறாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங் களின் போது என்ன நேர்ந்தது என்ற உண்மை யைக் கண்டறியும் பாரதூரமான விசாரணைச் செயற்பாடொன்றின் போது எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளுக்கான நியாயமாக எதிர்பார்க்கக் கூடிய நிலைமை திருப்திகரமாயில்லை. ஆணைக்குழுவின் முன் எவ்வாறு அவர்கள் தோன்ற வேண்டும் மற்றும் அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது பற்றி குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் களினால் பாதிக்கப்பட்ட சாட்சிகளுக்கு அநேகமாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் சாட்சி யமளிக்கத் தயார் நிலையில் இல்லை என்பதோடு, அவர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதிலிருந்து அவர்கள் போதியளவில் பாதுகாக்கப்படவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச தரங்களை நிறைவுசெய்யவில்லை: (பாகம்) -19

(உ) ஊடகம் மற்றும் சிவில் சமூகம் : பிரவேசம் மற்றும் அலைக்கழித்தல் 338. எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுப்பதன்மூலம் ஒளிவு மறைவற்ற தன்மையை உறுதிப்படுத்துவதில் ஊடகங்கள் மிக முக்கியமானதொரு பாத்திரத்தை வகிக்கின்றன. குறிப்பாக மொரோக்கோ, பேரு மற்றும் தென் ஆப்பிரிக்காவை உள்ளிட்ட ஏனைய நாடுகளில், சம்பந்தப்பட்ட விடயங்கள் மீதான பொது விவாதத்துக்கான பங்களிப்பை வழங்குவதற்காக இது போன்ற ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் பரவலாக தொலைக்காட்சியினூடாகக் காட்டப்படுகின்றன. அசாதாரண சந்தர்ப்பங்களில் ஊடகங்களைத் தடுக்கலாம் என்றிருந்த போதிலும், கருத்துக்கள் மற்றும் தகவல்களைப் பெறவும் அதனைப் பரப்பவும் உள்ள தனியார் சுதந்திரத்தை எல்.எல்.ஆர்.சி.

போன்ற அரசாங்க அமைப்புக்கள் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மட்டுப்படுத்து கிறது. அத்தகைய ஏதும் கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படக் கூடியவை மற்றும் சர்வதேசச் சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ளவாறு அது தேவையானது மற்றும் அளவுக்குட்பட்டது என்பதை நியாயப் படுத்தும் பொறுப்பு அரசினைச் சாரும்.

பத்திரிக்கைச் சுதந்திரத்தில் அப்பட்டமாகத் தலையிடுவதைக் குறிக்கும் விதத்தில் சில ஊடகங்கள் அமர்வுகளில் கலந்து கொள்வதை பாதுகாப்பு அமைச்சு தடுத்துள்ளதாக குழுவுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில் தெரிய வருகிறது. அமர்வுகளின் போது செய்திகளைச் சேகரிக்கும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் பட்டதாக செய்தி அறிக்கைகளும் உள்ளன.

(ஊ) பிரவேசம் மற்றும் செயலின் ஒளிவு மறைவற்ற தன்மை

339.
எல்.எல்.ஆர்.சி. அதன் சகல அமர்வுகளையும் ஒளிவு மறைவற்ற தன்மையுடன் நடத்தத் தவறியுள்ளதாக நம்பகமான அறிக்கைகள் குழுவுக்குக் கிடைத்துள்ளன. உயர் மட்டத்திலும் கூட இக்குறைபாடு உண்மையென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் தமது தகவல் சேகரிப்புக்காக அதிக அளவில் பொதுமக்கள் ஆதரவில் தங்கியிருப்பதோடு, பகிரங்க மற்றும் ஒளிவுமறைவற்ற விதத்தில் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக் களின் நடவடிக்கைகளின் முக்கியமான தொரு அம்சமாகும்.

340.
எல்.எல்.ஆர்.சி.யினைப் பொறுத்த வரை இது ஒரு பகுதியாகவே உள்ளது. 2010 யூன் 18ஆம் திகதிய ஆணைக்குழுவின் அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள முறைமைகளுக்கு அப்பால், சில சமயங்களில் அதன் முக்கிய செயற்பாடுகள் பற்றிய பகிரங்கத் தகவல் இன்மை அதன் செயற்பாட்டின் தன்மையாக இருந்துள்ளது.

பகிரங்க அமர்வுகளின் எழுத்துப் பிரதிகளை வெளியிடுவது அதன் அமர்வுகள் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பகிரங்க அமர்வுகளில் கலந்து கொள்ளும் சாட்சிகளைத் தெவு செய்யும் செயற் பாட்டில் பொதுவான நிச்சயமற்ற தன்மை மற்றும் அதன் அமலாக்கத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அமர்வுக்கானதொரு திகதி நிர்ணயிக்கப்படு முன், "ஆணைக்குழுவின் முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க விரும்புவோர் அனைவரும் முற்கூட்டிய எழுத்து மூலமான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுவதோடு, சாட்சியத்தின் பெறுமதியின் தொடக்க நிலையை அது நிறைவு செய்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆணைக்குழு அதனை ஆராயும்' என குழுவுக்கு அரசாங்கம் அனுப்பியுள்ள எழுத்துலமான பதில்களில் மாத்திரமே இம்முறைமை மேலும் முழுமையாக விவக்கப்பட்டுள்ளது. ஆயினும், தொடக்கநிலைத் தேவைப்படுத்தல்கள் இனங்காணப்படவில்லை என்பதோடு, அத்தகைய தொடக்கநிலையை நிறைவு செய்யாத காரணத்திற்காக நிராகக்கப்பட்ட சாட்சிகளின் எண்ணிக்கையோ சாட்சிய மளிக்க இருந்தவர்களின் விகிதாசாரமோ பற்றிய தகவல் வழங்கப்படவில்லை. எது எப்படியிருப்பினும், இந்த அணுகுறை வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற அமர்வுகளின் போது அனுசரிக்கப்படவில்லை என்பதோடு, பல்வேறு சாட்சிக் குழுக்கள் வெவ்வேறுவிதமாக நடத்தப்பட்டதை அது குறிக்கிறது.

341.
பாதிக்கப்பட்டவர்களின் அமைவிடங்களிலேயே அவர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய நடைபெற்ற மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமர்வு களின் போது கூட, அவர்களின் அமைவிடங்கள், நேரங்கள் மற்றும் முறைமை ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள தாகவே இருந்ததோடு, அத்தகவலை சாட்சியமளிக்கவுள்ளோரும் பொதுமக்களும் பெற்றுக் கொள்வது சிரமமாகவே இருந்தது.

குறிப்பாக, மாகாணங்களில் நடைபெறும் அமர்வுகள் பற்றி பிரதேச மக்களுக்கு அறிவிக்கத் தவறியமை காரணமாக அமர்வுகள் நடைபெறுவதை அதிக மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. எல்.எல்.ஆர்.சி.யின் சார்பில் பொதுமக்களுக்குத் தகவலை வழங்கு வதற்காக மாவட்ட மற்றும் மாகாண அலுவலர்களைப் பிரயோகித்தது.

எல்.எல்.ஆர்.சி.யின் சுயாதீனத் தன்மை பற்றிய தவறான அபிப்பிராயத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது.

(எ) இடைக்கால பரிந்துரைகள் 342. எல்.எல்.ஆர்.சி.யின் அநேக இடைக்கால பரிந்துரைகள் ஏற்கனவே கடந்த காலத்தில் பல்வேறு அமைப்புக் களினால் பரிந்துரைக்கப்பட்டவையாகும் என்பதோடு அரசாங்கம் நாடினால் அவற்றை எவ்விதச் சிரமன்றி அல் செய்திருக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர்த்து, பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகள் நேரடியாக செயற்பட வில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும் விதத்தில், தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது முக்கியமானதொரு பரிந்துரையாகும் என்ற போதிலும், இன்றுவரை அப்பரிந்துரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல்வேறு பொறுப்புக் கூறல் சிக்கல்களைக் கையாளுவதற்கான பரிந்துரைகள் இன்மை மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பிரசுத்தல் பற்றிய அசட்டை குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கு எல்.எல்.ஆர்.சி.
முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. குழுவுக்கான அரசாங்கத்தின் பதிலுக்கு மாற்றமாக, யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும் அது நடந்து கொண்ட விதத்தைத் தெளிவாக்கும் அவதானமிக்க அம்சங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குகிறது என்ற தீர்மானத்துக்கு அது வலுவூட்டுகிறது.

5. எல்.எல்.ஆர்.சி. பற்றிய தீர்மானம்

343.
யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் மற்றும் மோதலுடன் தொடர்புபட்ட ஏனைய சிக்கல்கள் பற்றிய தேசிய கலந்துரையாடலுக்கு நிலைத்தகவுள்ள சிறப்பான தொரு ஆரம்பத்துக்கான சந்தர்ப்பத்தை எல்.எல்.ஆர்.சி. வழங்குகிறது. பொறுப்புக் கூறல் பற்றி இலங்கையில் என்ன நடக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்துக்கான மாற்றங்கள் பற்றிய தமது நோக்கினை பகிரங்கமாகப் பதிவு செய்வதற்கானதொரு தலமாக பல செல்வாக்குமிக்க அரச சார்பற்ற அமைப்புக்களும் சில சமயத் தலைவர்களும் எல்.எல்.ஆர்.சி.மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர். அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் குறிப்பாகப் பாதிக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க முன்வந்தது, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட மற்றும் அதன் விளைவாகத் தாம் அனுபவிக்க நேர்ந்தவை பற்றிக் கூறுவதற்கு அதிகாரபூர்வமான இடவசதி தேவை என்பதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

சில சிரேஷ்ட அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் அத்துடன் இலங்கை பிரமுகர்கள் அவர்களது அணுகுறையை மேம்படுத்துவதற்கு அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி முன்னைய அரசாங்கங்களை விமர்சிப்பதற்கும் எல்.எல்.ஆர்.சி. யினைப் பாவித்துள்ளனர்.

344.
 எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கை நீடிக்கவில்லை என்பதோடு அதன் இறுதி அறிக்கையை இன்னும் அது சமர்ப்பிக்க வில்லை என்பதால் முழுமையானதும் இறுதியானதுமானதொரு மதிப்பீட்டினைச் செய்ய முடியாமலிருக்கிறது. ஆயினும், இச்சந்தர்ப்பத்தில் குழுவினால் சில முக்கிய தீர்மானங்களைக் குறிப்பிடலாம்: (அ) எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் குற்றஞ்சாட்டப் பட்ட பாரிய மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கோ மீறல்களின் போக்குக்களையும் அதற்கான பொறுப்பு ஆகியவற்றைப் புலனாய்வு செய்வதற்கான அமைப்பினையோ கொண்டிருக்கவில்லை, மாறாக, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினைவிட சில்கொட் விசாரணையையொத்த அது தனது பிரஜைகளைப் பாதுகாக்கத் தவறிய கடந்த கால அரசாங்கங்களின் அரசியல் பொறுப்புப் பற்றிய பரவலான கருத்து மீதே கவனத்தைச் செலுத்துகிறது.

(ஆ) ஆணைக்குழுவின் அமைப்பு மற்றும் அதன் சில உறுப்பினர்களின் ஆழ்ந்த அக்கறை முரண்பாடு காரணமாக சுயாதீனம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை போன்ற முக்கிய சர்வதேசத் தரங்களை எல்.எல்.ஆர்.சி. திருப்திப் படுத்த டியாமலிருக்கிறது.

(இ) இன்றுவரையிலான எல்.எல்.ஆர்.சி.

யின் செயற்பாடு மற்றும் முறைமை, யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது என்ன நடந்தது என்று மெய்யாகவே உண்மையைக் கண்டறிவதற்காக செயற் படவில்லை என்பதையும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரதும் பாரிய மீறல்கள் பற்றிய ஒழுங்கான, பாரபட்சமற்ற முறையில் புலனாய்வினை மேற்கொள்ள வில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்து அவர்களாகவே வேறு வழியின்றி அதிக எண்ணிக்கையினர் ன்வந்தார்கள் என்ற போதிலும் மீறல்கள் பற்றிய முழு விபரங்களையும் அவர்களுக்கு நேர்ந்த தீங்குகளையும் இச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக கூற அவர்கள் ஊக்குவிக்கப்பட வில்லை என்பதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற ஏனைய குறிப்பான குழுக்களுக்கு நேர்ந்த தெளிவான தீமை பற்றியும் கவனம் செலுத்தப்படவில்லை.

(ஈ) பாதிக்கப்பட்டோரை அவர்கள் கௌரவம் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய முழு மரியாதை யுடனான அல்லது பாதிக்கப்பட்டோரின் சாட்சியத்தைப் பதியும் போது தோதான முறையில் ஆண் பெண் வேற்றுமை அடிப்படையிலான உணர்வுடனான அணுகுறையினை எல்.எல்.ஆர்.சி.

செய்றைமூலம் மெய்ப்பித்துக் காட்டத் தவறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலுமான அதன் அமர்வுகளின் போது இதனைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

இழப்பீடு பற்றிய முக்கியமான விடயம் பற்றி அது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அது குறிப்பிடவில்லை.

(உ) நிஜமாகவே தனிப்பட்ட ஆபத்து இருந்த சூழ்நிலைகளிலும் சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பினை எல்.எல்.ஆர்.

சி. உறுதிப்படுத்தவில்லை. சில குறிப்பிட்ட சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர் என்பதற்கான சாட்சியம் உண்டு.(ஊ) எல்.எல்.ஆர்.சி.யின் செயற்பாடுகள் போதியளவு ஒளிவு மறைவற்றதாக இல்லை.345. மொத்தமாக, எல்.எல்.ஆர்.சி.

ஆழ்ந்த குறைபாடுள்ளதாகவும், பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிக்கான சர்வதேச தரங்களை நிறைவு செய்யாத தாகவும் உள்ளதால், பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றுக்கான இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்தின் இணைந்த உறுதிப்பாட்டை நிறைவு செய்ய டியாததாயிருக்கிறது.

(ஈ) இலங்கையின் நீதித் திட்டம் 346. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களுக் கான பொறுப்புக்கூறலை வழங்கும் அடிப்படை வழியாகவும் பாதிக்கப்பட் டோருக்கு பயனுறு பகாரத்தை வழங்கு வதாகவும் நீதித் திட்டம் இருத்தல் வேண்டும். எல்.எல்.ஆர்.சி.யின் விளைவுகள் எதுவாக இருந்த போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதி வழங்கும் முக்கியமானதொரு பாத்திரத்தை இலங்கையின் நீதித் திட்டம் கொண்டிருக்க வேண்டும். இலங்கை குற்றவியல் நீதித் திட்டம் புலனாய்வு செய்வதற்கான அதன் பொறுப்புக்களை, கடந்த காலத்தில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்ட போதெல்லாம் இப்படியானதொரு போக்கு இருந்து வந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி.

அதன் வேலையைப் பூரணப்படுத்தும்வரை தள்ளிப்போடுவது பொருத்தமானதல்ல பின்வரும் பிரிவு யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கையின் நீதி மற்றும் இராணுவ நீதி மன்றங்கள் அமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பின்வரும் பிரிவு ஆராய்கிறது: 1. அவசரகால சட்டகம் மற்றும் சட்ட மீளாய்வின் விலக்கல்கள் 347. சட்ட மீளாய்வில் இருந்து விலக்களிப்பை வழங்குவது இலங்கையின் சட்ட அமைப்பின் முக்கியமானதொரு வரையறை செய்யும் அமைப்பிலடங்கிய அம்சமாகவுள்ளது. தலில், பிரத்தியேக அல்லது உத்தியோகபூர்வ தவறு அல்லது புறக்கணிப்புக்கு முழுமையான விதிவிலக்கை அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அடுத்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவற்றை சட்டம் கூர்ந்தாராய்வதில் இருந்து அவற்றுக்கு விதிவிலக்கு அளித்து, பொதுவான சட்டங்களில் வேறு சந்தர்ப்பங்களில் ஏற்புடைத்தானவற்றைக் கணிசமான அளவில் தள்ளுபடி செய்து அவற்றின் மீது முழுமையான மேலாதிக்கத்தைக் கொண்டவையாக இலங்கையின் அவசரகால ஏற்பாடுகள் உள்ளன.348. திருத்தப்பட்டவாறான, 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஓ) இலங்கையின் அவசரகாலச் சட்டகத்தைத் தாங்கி நிற்கிறதோடு அரசியல் யாப்பு அதற்கு முழுமையான சட்டத்தின் அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது.

தற்போது அலில் இருக்கும் அவசரகால நிலைமை ஆரம்பத்தில் 2005 ஆகஸ்ட் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டதோடு, பாராளுமன்றத்தால் மாதந்தோறும் அனுமதிக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்ந்து அலில் இருந்து வருகிறது.349. அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட பின், "பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கு அல்லது சமூகத்தின் வாழ்வுக்கு அத்தியாவசியப் படும் விநியோகங்களையும் சேவை களையும் தொடர்ந்து பேணுவதற்கு அப்படிச் செய்வது பொருத்தமென்பதால்' பிஎஸ்ஓவும் அவசரகாலச் சட்டங்களைப் பிரகடனப்படுத்துவதை அனுமதிக்கிறது.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விவான மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவசரகால ஒழுங்குவிதிகள் பிரகடனப் படுத்தப்பட்டு அவை காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு இன்று வரை அலில் இருக்கின்றன. இவ்வொழுங்குவிதிகள் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல், ஆட்களை கண்காணித்தல் மற்றும் தேடுதல், போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தல், சொத்துக்களைக் கைப்பற்றல் அல்லது எடுத்தல் மற்றும் கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசுரங்கள், துப்பாக்கிகள் மற்றும் பிரவேசத்துக்கான உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கான பாரிய அதிகாரங்களை வழங்குகின்றன. அவை யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது அதற்கு ன்னர் மற்றும் அதற்குப் பின்னர் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 2010 மே மாதம் வரை அலில் இருந்த அத்திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது தடுக்கப் பட்டுள்ள ஆட்கள் தொடர்பில் இன்று வரை அலில் இருக்கும் 2005ஆம் ஆண்டின் ஒழுங்குவிதிகளின் ஒரு பகுதி, பாதுகாப்புச் செயலாளன் உத்தரவின் பேல், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு வருடத்துக்கு மற்றும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்படியான தடுத்து வைத்தலுக்கு அனுமதியளிக்கிறது.350. அவசரகால ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாக, திருத்தப்பட்டு பின்னர் 1982 இல் நிரந்தரச் சட்டகமான 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் ஒப்பீட்டளவிலான அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சட்டம் கடும் தண்டனைகளை (பாகம் ஐ) கொண்ட குற்றங்கள் வரிசையினை விளக்குவதோடு, சில பிரசுரங்களைத் தடை செய்வதற்கான (பாகம் ஙஐஐ) அதிகாரங்களையும் கொண்டுள்ளது, கைது செய்தல், தேடுதல், உட்பிரவேசித்தல் மற்றும் கைப்பற்றுதல் (பாகம் ஐஐ) ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்டிராத அதிகாரங்களையும் குறிப்பிடுகிறது. நிருவாகத்தினால் கட்டளையிடப்பட்டவாறாக ன்று மாத இடைக்காலத்துக்குட்பட்டவாறு 18 மாதங்கள் வரையிலான பாதுகாப்புக்காகத் தடுத்து வைத்தலையும் அது கொண்டுள்ளது. மற்றும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அல்லது தொடர்புபட்டதாக ஒருவரை நம்புவதற்கு அல்லது சந்தேகப்படுவதற்கு காரணம் இருந்தால், போக்குவரத்து அல்லது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டளையை இடுவதற்கான ஏற்பாட்டினையும் அது கொண்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அதற்கு ன்னர் மற்றும் அதன் பின்னர் பாரிய விளைவுகளைக் கொண்ட பிரிவு சட்டம் செறிவாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபன் சக்தியை சிக்கலாக்கும் பல வடிவமைப்பு குறைபாடுகள் இலங்கை சட்டத்தில் காணப்படுகின்றன: (பாகம்)-20351. அதனை அல் செய்வதில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்லது புறக்கணிக்கப்பட்டவை தொடர்பாக சட்டத்தின்மூலம் பகாரம் தேடுவது பரவலாகத் தடுக்கப்பட்டுள்ளதானது அவசரகாலச் சட்டகத்தின் குறிப்பானதொரு அம்சமாகும்.

அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில், நீதி மன்ற மீளாய்வுக்கு முழுமையான தடையொன்றை அரசியல் யாப்பு வழங்குகிறது. சட்ட தியான ஆராய்வை தடுக்கும் ன்று தெளிவான மற்றும் விவான பிரிவுகளை பிஎஸ்ஓ குறிப்பிடுகிறது.

"மனப்பூர்வமான உள்நோக்கத்துடன்' மேற்கொள்ளப்பட்ட செயல்களுக்கும் பயங்கர வாத தடைச்சட்டத்தின் (பிஏ) சட்டத்தின் கீழ் இது போன்ற சட்ட மீளாய்வுக்கான தடையுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளனால் விடுக்கப்படும் தடுத்து வைத்தல் மற்றும் தடைவிதித்தல் கட்டளைகள் சட்டப்படி இறுதியானவை எனக் கணிக்கப்பட்டு அவை எந்தவொரு சட்ட மீளாய்விலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளன. பிஎஸ்ஓ வில் அடங்கியுள்ள தடுத்தல் மற்றும் தண்டனையிலிருந்து விலக்களிப்புப் பற்றிய ஏற்பாடு அதன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடைத்தாகும் என்பதோடு, அவசரகால ஒழுங்குவிதிகளிலும் அதே அணுகுறை மீளக்குறிப்பிடப்பட்டுள்ளது.352. 2010 மே மாதம் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்களின்மூலம் இத்தடைப் படுத்தும் எந்தவொரு பிரிவும் அகற்றப்படவில்�ல் பாரதூரமான விளைவுகளை அவை கொண்டிருந்த போதிலும், மாற்றமின்றி அவை அப்படியே இருக்கின்றன.

இவ்வேற்பாடுகளின் திரண்ட விளைவுகள் காரணமாக அவசரகால சட்டகத்தின் அமலாக்கத்தின் போது நடந்தேறிய செயற்பாடுகள் அல்லது தவறுகள் பற்றி, குறிப்பாக சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் தமது உரிமைகளைக் கோரும் திறன் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.2. சிவில் நீதிமன்றங்களில் குற்றவியல் அதிகார வரம்பு (அ) சட்ட மா அதிபர்: குற்றங்களைப் புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தொடரல் 353. இலங்கையில் குற்றச் செயல்களின் புலனாய்வு மற்றும் வழக்குத் தொடரல் மீது சட்ட மா அதிபருக்கு மிகவும் பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, காவல்துறையினர் மற்றும் நீதவான்கள் மேற்கொள்ளும் புலனாய்வுகள் சட்ட மா அதிபன் கட்டுப்பாடு மற்றும் பணிப்புக்கு உட்படுகின்றன. அதேபோன்று, பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் குற்றப் பத்திகை தாக்கல் செய்வதா இல்லையா அத்துடன் குற்றங்களை நெறிப்படுத்திக் குற்றப் பத்திகை தயாத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வழக்குத் தாக்கல் செய்தல் ஆகிய அத்தனையும் சட்ட மா அதிபன் ஆதிக்கத்தின் கீழே உள்ளன.

இவ்வாறாக சட்ட மா அதிபர் குற்றவியல் நீதி அமைப்பில் மையத்தைக் கொண்டிருப்பதோடு, அதில் அவர் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார். பொறுப்புக்கூறலைப் பயனுறு விதத்தில் மேற்கொள்வதற்கு சட்ட மா அதிபர் திறமையுடனும் சுயாதீனமாகவும் அத்துடன் சட்ட மா அதிபர் செயற்படுவதற்கு அவரை அனுமதிக்கும் சட்டத்தின் சட்டகமொன்றையும் குற்றவியல் சட்ட திட்டம் தேவைப்படுத்துகிறது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள் தொடர்பான விடயங்களுக்கு இது ஏற்புடைத்தாகும்.354. நாட்டின் வரலாற்றில் குறிப்பான சந்தர்ப்பங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மை பற்றி சவால் விடுக்கப்பட்டுள்ளது. அது அண்மைக் காலங்களில் மேலும் நலிவடைந்துள்ளதால், யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றி அரசாங்கத்தின் அல்லது இராணுவத்தின் சிரேக்ஷ்ட அதிகாரிகள் பற்றி அத்திணைக்களம் புலான்யவுகளை மேற்கொள்வது தொடர்பில் இது ஒரு பிரச்சினையாகவுள்ளது. 2010 தேர்தல் களைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கசெற் அறிவித்தல் ஒன்று சட்ட மா அதிபர் திணைக்களத்தையும், புதுச் சட்டங்களின் வரைவுக்கான பொறுப்பைக் கொண்ட சட்ட வரைவாளர் திணைக்களத்தையும் ன்பு அவை இருந்த நீதி அமைச்சிடம் இருந்து அகற்றியது.

புதிய "பட்டியலிடப்படாத' திணைக்களங்கள் என இத்திணைக்களங்கள் அரசியல்யாப்பின் 44(2)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் இப்போது வருவதோடு. அவை நிறுவக ரீதியில் ஜனாதிபதிச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இப்போது தெரிய வருகிறது.355. இலங்கையின் கடந்த கால புலனாய்வுகள் மற்றும் வழக்காடல் பெதும் தேர்ந்தெடுத்க்கப்பட்டவையாகவும் சட்டத்தை அல்படுத்துவது தொடர்பில் அதிகாரத் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டிருந்ததாகவே அன்றி நியாயமாகவும் சசமமாகவும் நீதியைப் பெறுவதற்கானவையாக இருக்கவில்லை.

தடுப்புக் காவலில் நேரும் மரணங்களுக்கு காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற சட்ட மா அதிபன் தீர்மானம் நீதியை மறுப்பதாக அமையும் கொடுங்கோன்மையானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு தீர்மானம் ஒன்றை எடுக்கும் அளவுக்கு இருக்கிறது. அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய புலனாய்வுகள், அவை பூரணப் படுத்தப்பட்டிருந்தால், அவற்றுக்கு அசாதாரணமான நீண்ட காலம் சென்றுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை விடுக்கும் பாதிக்கப்பட்டோரை கிரமமாக அலைக்கழித்து வந்துள்ளனர். குற்றவியல் விசாரணைகளும் குற்றப்பத்திகை தாக்கல் செய்வதும், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்ற அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அலைக்கழிக்கவும் அச்சுறுத்தவும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வுகளை ஆரம்பித்து அவற்றைப் மேற்பார்வை செய்து மற்றும் வழக்காடல் தொடர்பான சட்ட மா அதிபன் அதிகாரங்களை கண்காணிப்பதற்கு நீதித் துறைக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றங்கள் இச்செயற்பாட்டை பிரயோகிக்க தயக்கம் காட்டியுள்ளன. வழக்காடலில் விடாமுயற்சி இல்லாதது பற்றி நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவிக்கும ஒரு சில அபூர்வ சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன.(ஆ) நீதித் சட்டகத்தின் குறைபாடுகள் 356. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நேர்ந்ததாக நம்பகமாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள முக்கிய நடைமுறை அம்சங்களை மேவும் பல குற்றங்கள் இலங்கை குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்றிருக்கக் கூடிய பல மீறல்களை புலனாய்வு செய்து வழக்குத் தொடருவதற்கான சட்ட மா அதிபன் சக்தியை சிக்கலாக்கும் பல வடிவமைப்புக் குறைபாடுகள் இலங்கைச் சட்டத்தில் காணப்படுகின்றன.(டி) உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கணிக்கப்படும் தரப்பினர் நடத்தைக்கு ற்றிலும் மாறாக உள்நாட்டு ஆயுதந்தாங்கிய மோதலின் போதான போர்க்குற்றங்கள், (டிடி) ஒரு குற்றத்தைப் புயுமாறு கட்டளையிடுவது தொடர்பான இராணுவக் கட்டளைத் தளபதிகளின் அல்லது சிவிலியன் உயர் அதிகாரிகளின் பொறுப்புப் பற்றிய தெளிவான ஏற்பாடுகள், மற்றும் (டிடிடி) பதவியில் தாழ்ந்தவர்கள் ஈடுபடும் குற்றங்களைத் தடுப்பது அல்லது அவற்றுக்கான தண்டனை வழங்குவது தொடர்பான இராணுவக் கட்டளைத் தளபதிகள் அல்லது சிவிலியன் மேற்பார்வையாளர்களின் பொறுப்பு வழக்குமரபுப்படி கட்டளை பீட அல்லது மேற்பார்வைப் பொறுப்பு, போன்றவற்றுக்கான தெளிவான ஏற்பாடுகளை இலங்கை சட்டம் வழங்கவில்லை.357. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை உள்ளிட்ட இலங்கையில் காணாமற் போன அதிக எண்ணிக்கையினரைக் குறிப்பாகக் கருத்திற் கொண்டு, வலுக்கட்டாயமாகக் காணாமற் போதலை குற்றமெனக் குறிப்பிடாதது மேலுமொரு வடிவமைப்புக் குறைபாடாகும்.

கடந்த காலங்களில், இத்தகைய குற்றங்களுக்கு சாதாரண குற்றவியல் ஏற்பாடுகளை நாட வேண்டிய தேவையை இந்நிலை ஏற்படுத்தியது என்பதோடு, பொதுவான சட்டத்தின் கீழான குற்றமொன்றுக்கு வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதிய சாட்சியங்களால் நிறுவப்பட்டதொன்றாக அதனை எடுத்துக் காட்டுவது சிரமமாகிறது. கிடைக்கக் கூடிய சாட்சியஙகளின்மூலம் வலுக்கட்டாயமான காணாமற்போதல் ஒன்றுக்கு நிறுவகப் பொறுப்பு தெளிவாக இருந்து தனி நபர் பொறுப்பினை நிரூபிப்பது கஷ்டமாக இருந்த போதிலும், அரச பொறுப்பினை கண்டுபிடிப்பதற்கான தெளிவான சட்டப் பொறித்தொகுதியொன்றையும் காணக் கூடியதாக இல்லை.358. மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்காக பயனுறு பகாரம் வழங்குவதற்கான திறனை இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் பலவீனம் சிக்கலாக்குகிறது. தலில், ஆயுதப் படையினருக்கு மட்டுப்படாமல் சட்டத்தை அலாக்கும் கவர்கள் அனைத்திலும் பரந்திருக்கும், பாரிய அளவிலான சாட்சியங்களை அச்சுறுத்தும் நிலையிலும் கூட பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. தமக்கு எதிராகக் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் சித்திரவதை தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தம் பதவிகளில் தொடர்ந்து இருந்து, அவ்வாறாக வழக்கு நடைபெறும் வரை சாட்சிகளை அச்சுறுத்தவும் சில வேளைகளில் கொலை செய்யவும் தம் அதிகாரத்தையும் செல்வாக்கை யும் பிரயோகிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, அநேகமாக எல்.எல்... உடன் தொடர்பு உண்டென்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும், சர்வதேசச் சட்டத்துக்கு ரணான பயங்கரவாத தடைச்சட் டம் (பிஏ) சட்டம், குற்ற ஒப்புதல் ஒன்று பலாத்காரமாக பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்துகிறதால், அதிகாரிகள் தவறான வழியில் கேள்விகளைக் கேட்டு விசாரணை செய்யும் சாத்தியக்கூற்றினை அது அதிகக்கிறது.(இ) நீதிமன்றங்கள் 359. குறிப்பாக ஆயுதந்தாங்கிய மோதலின் சூழ்நிலைப் பொருத்தத்தில் மேற்கொள்ளப் பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாரதூரமான சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்கள் தொடர்பாக அண்மையில் இலங்கையின் குற்றவியல் நீதிமன்றங்கள் மேற்கொண்ட பூகோளதியிலான அணுகுறையை பற்றிய பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய தரவுகள் மட்டுப்பட்டதாகவேயுள்ளன. அதன் விளைவாக, மேலும் விவான உருவமைப்பை ஊகித்துக் கொள்ளக் கூடிய விதத்தில், யுத்தத்தின் கடைசிக் கட்டங்கள் பற்றிய அதன் பகுப்பாய்வுக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரு பாரிய மரபு வழி சார்ந்த ஆதங்கங்களையும் குழு மதிப்பீடு செய்கிறது. இது சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமான காணாமற்போதல்கள் தொடர்பான குற்றங்கள் பற்றிய இலங்கை நீதிமன்றங்களின் செயற்பாட்டைக் குறிப்பதாகவுள்ளன.

சித்திரவதை, காணாமல் போதல் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பாரபட்சமின்றி புலனாய்வு செய்யவில்லை: (பாகம்)-21

360. இலங்கையில் வழக்குக்கு ந்திய மற்றும் வழக்கு நடைமுறை ஆகியவற்றை உள்ளிட்ட நீதியின் செயற்பாட்டின் சகல கட்டங்களிலும் தாமதமேற்படுவது இயல்பா னதாகவே உள்ளதோடு, மனித உரிமைகள் மீறல் வழக்குகளுக்கு அவை தனித்தன்மை வாய்ந்தனவல்ல.சுமார் 2 வருடங்களுக்கு மேல் நீடிக்கக் கூடிய புலனாய்வுகள், மற்றும் புகார் செய்பவர்களுக்கு எதிரான அச்சுறுத் தல்கள் அத்துடன் சித்திரவதை பற்றிய குற் றச்சாட்டுக்கள், குற்றவியல் நீதித் திட்டத் தின் நிஜமான மற்றும் கருதப்படும் நியாயத் தைப் பெதும் பாதித்துள்ளன.நியாயமான தொரு காலப்பகுதிக்குள் வழக்கை நடத்து வதற்கான தெளிவானதொரு உரிமை இல ங்கையின் சட்டத்தில் இல்லையென்ப தோடு, பொருத்தமற்ற கால தாமதம் பற்றி அர சியலமைப்பிலோ அல்லது குற்றவியல் நீதிச் சட்டங்களிலோ தெளிவான நடவடி க்கை மேற்கொள்ளப்படவில்லை. முறைசார் ந்த நடைமுறை விதிகளுக்குப் புறம்பாகச் செயற்படுவதும் பொதுவானதொரு அம்ச மாக தென்படுகிறது. கடத்தல், சட்டவிரோத மாகத் தடுத்து வைத்தல், அல்லது சித்திர வ�த குற்றங்கள் மீது அதிகாரிகளுக்கு எதி ராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் அதி கமானவை திருப்திகரமான சாட்சியமில் லாமை மற்றும் சாட்சிகள் கிடைக்காமை கார ணங்களாக தீர்ப்பின்றி டிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இலங்கையில் புரியப் பட்ட பாரிய குற்றங்களுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட விகிதாசாரம் மிகக் குறைவான 4 சத வீதமே என 2004 ஆண் டின் அறிக்கையொன்று இனங்கண்டுள்ள தோடு இத்துறையில் ஒரு ன்னேற்றத்தை யும் குழு காணவில்லை. குற்றவாளி என அபூர்வமாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளிலும் இழப்பீடு வழங்குவதில் நீதி மன்றங்கள் தயக்கம் காட்டியுள்ளன.361.அரச அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு மற்றும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவாக்கும் விதத்தில் நடத்தப்படுவது அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது பற்றிய அறிக்கைகள் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் உள்ளன. (உடனடியாகக் கொலைத் தண்டனையை நிறைவேற்றுதலுடன்) காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஏற்படும் மரணத்துக்கான இரண்டு முக்கிய காரணிகளுள் சித்திரவதையும் ஒன்று எனக் காணப்பட்டுள்ளதோடு, தடுப்புக் காவலில் நேரும் அதிகமான மரணங்கள் தனியொரு அதிகாயின் வரம்பு கடந்த செயலுக்கு அப்பால் அதிகாரிகள் அன்றாடம் தாம் ஈடுபடும் செயற்பாடு காரணமாகவே நிகழ்கிறது என்பதோடு அது விசாரணை செய்யும் போது நேரும் ஒரு விடயம் எனச் சாதாரணமாக கருதப்படுகிறது. சட்டத்தை அல்படுத்தும் அதிகாரிகளினால் நிகழும் குற்றஞ்சாட்டப்பட்ட பரவலான சித்திரவதை, மோசமாக நடத்துதல் மற்றும் காணாமற் போதல்கள் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக, மற்றும் பாரபட்சமின்றிப் புலனாய்வு செய்யவில்லை. சித்திரவதை பற்றிய விடயங்கள் தொடர்பாகப் பதவி நிலையிலான பயனுறு புலனாய்வுப் பொறித்தொகுதி இல்லாதது குறிப்பானதொரு சிக்கலாகவுள்ளதோடு அது சர்வதேச தரங்களையும் நிறைவு செய்யவில்லை.362. சித்திரவதையைத் தண்டனைக்குய குற்றம் என வகைப்படுத்தும் 1994 ஆம் ஆண்டின் கெட் சட்டம் அமலாக்கப்பட்டதும் மிகப் பாரிய குற்றங்கள் தொடர்பில் அவை எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கான உதாரணத்தை எடுத்துக் கொண்டால், சட்ட மாஅதிபர் 34 குற்றப் பத்திகைகளைத் தாக்கல் செய்துள்ளதோடு, இது வரை 3 குற்றவாளியெனத் தீர்ப்பும் 8 விடுதலை செய்தல்களும் நடைபெற்றுள்ளன.

பொலிஸ் பட்சகர் பதவி நிலைக்கு மேல் எந்த அதிகாரிக்கு எதிராகவும் சித்திரவதை தொடர்பான வழக்கினை சட்ட மா அதிபர் தொடரவில்லை.வலுக்கட்டாயமான காணாமாற்போதல்கள் (கடத்தல் மற்றும் பலவந்தமாக எடுத்துச் செல்லல் போன்ற குறைந்த பாரதூரமான குற்றங்களின் கீழ் பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்ட) விடயங்களில் குற்றவாளியெனக் காணும் விகிதாசாரம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைக் கிடைக்கக் கூடிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. புகானைத் தொகுப்பதில் நேர்ந்த தாமதங்கள் மற்றும் / அல்லது பிழையாகக் குற்றப் பத்திகையைத் தாக்கல் செய்தல் போன்ற துறை நுட்ப வரையறைகளை போன்று தென்படும் நோக்கங்களுக்காக நீதிமன்றங்கள் இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்ய விளைகின்றன. பிந்திய விடயத்தில், சட்ட மா அதிபருக்கும் மேல் நீதி மன்றத்துக்கும் அத்தகைய குற்றப்பத்திகைகளைத் திருத்துவதற்கான அதிகாரம் இருந்த போதிலும் பல வழக்குகளில் அவ்வதிகாரம் அதிகாரபூர்வமாகப் பாவிக்கப்படவில்லை.

குற்றவாளியெனக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் தண்டனை விதித்தல் சம்பந்தப்பட்ட விடயத்தின் பாரதூரமான தன்மையை நோக்குமிடத்து மிகவும் கடுமையற்றதாகவே மேற்கொள்ளப்படு கிறது.(ஈ)யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது நிகழ்ந்த மீறல்கள் தொடர்பான குறிப்பான குற்றவியல் நடவடிக்கைகள் 363. எல்...ஈ உறுப்பினர்களுக் கெதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அது குற்றச்சாட்டுக்களை நெறிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக எழுத்து மூலமான பதில்கள் மற்றும் வாய்லமான வாக்குலங்கள் ஊடாகக் குழுவுக்கான பதில்களில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.: கடந்த காலத்துக்குச் சயான பதில் வழங்குவது) தற்போது தடுப்புக்காவலில் உள்ள எல்...ஈ உறுப்பினர்களுக்கு எதிராக, உறுதியானதொரு குற்றச்சாட்டை விடுப்பதற்கான சாட்சியங்கள் இருப்பின், குற்றவியல் சிவில் குற்ற வழக்குத் தொடுக்கப்படும். 2008 ஆகஸ்ட் மாதம் தல் இச்செயற்பாடு நடைபெற்று வருகிறது என்பதோடு, பாரிய குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கணிசமான எண்ணிக்கையிலான தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கெதிராக பிஏ இன் ஏற்பாடுகளின் பிரகாரம் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகள், குற்றவியல் சட்டக்கோவை மற்றும் ஏனைய குற்றவியல் சட்டங்களின் கீழ் நீதி மன்றங்களில் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அத்தகைய சகல விடயங்களிலும் குறைவான தடுப்புத் தண்டனை விதிக்கும் கொள்கைகளே அனுசரிக்கப்பட்டுள்ளதோடு, தடுத்து வைப்பது அல்லாத தண்டனைகளை வழங்கும் பொறித்தொகுதிகள் மீது அவை தாராளமாகத் தங்கியுள்ளன.364. "கணிசமான எண்ணிக்கை' என்பது, அவை யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் அல்லது வேறு காலப்பகுதிகளுடன் சம்பந்தப்பட்டனவா மற்றும் எவ்வளவு தூரத்துக்குக் குற்றங்கள் பொதுவான சட்டங்களின் படி சாதாரண குற்றங்கள் அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டதியானதா என ஆழமாகக் கேள்விக்குள்ளாகிய அவசரகாலச் சட்ட ஏற்பாடுகளின் கீழா, என்பன பற்றிய தகவல் குழுவிடம் இல்லை. மேலும், எல்லா விடயங்களிலும் "குறைந்த பட்ச தடுப்புத் தண்டனை' என்பதைக் கடைப்பிடிப்பது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் படி பாரிய மீறல்கள் என வகைப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு எதிராகப் பதில் அளிப்பதற்குத் தவறுவதாகிவிடக்கூடும்.கடந்த கால நடவடிக்கைகளுக்கு மற்றும் எல்...ஈ படைகளின் மீறல் பழக்கங்களுக்கு தெளிவான பொறுப்புள்ள சில முன்னாள் சிரேஷ்ட எல்...ஈ தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றவியல் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதோடு, மாறாக அதன் அரசியல் கட்டமைப்பு மற்றும் வியூ ங்களில் அவர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கான குறிப்பிட்டதொரு விலக்களிப்பு தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவசாந்தி, எல்...ஈ இன் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட பெண் என்பதோடு 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்களில் ஒரு குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

மெனிக் பாமில் 2009 ஆண்டு மே மாதம் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து குற்றம் சுமத்தப்படாமல் அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.365. சட்ட மா அதிபன் அலுவலகத்தில் தனியானதொரு அலகு இருப்பதாகவும் எல்.எல்.ஆர்.சி. அறிவிக்கும் குற்றம் சுமத்தப்படக் கூடிய விடயங்களைப் புலனாய்வு செய்வதற்கு அது வடிமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இச்சட்டகத்தின் கீழ் மற்றும் எல்...ஈ சம்பந்தப்பட்ட அதன் அணுகுறைக்கு ற்றிலும் மாறுபட்டதாக, எந்தவொரு அரசாங்க அலுவலருக்கும் எதிரான புலனாய்வுகளை ஆரம்பிக்கு முன், காலவரையற்ற எல்.எல்.ஆர்.சி. யின் செயற்பாட்டை அரசாங்கம் பிற்போடுவதாகத் தெகிறது.

"(இராணுவத்தினருக்கு எதிரான) பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக' அரசாங்கம் குறிப்பிட்டுள்ள அதே வேளையில், இவ்வழக்குகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பானவையா என்பதை அது குறிக்கவில்லை 2000 ஆம் ஆண்டில் பொதுமக்களைக் கடத்திச் சென்று கொலைசெய்த குற்றத்துக்காக நான்கு இராணுவத்தினருக்கு எதிரான "மிருசுவில்' முழுமையான நீதிபதிகள் குழாம் ஒன்றின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கை மாத்திரம் அவ்வறிக்கை தொடர்பாக அது எடுத்துக் காட்டுகிறது.யுத்தத்தின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினருக்கெதிரான குறிப்பிட்ட எந்தவொரு வழக்கு பற்றியும் குழு அறியவில்லை. இவ்வாறாக, இத்தருணத்தில், யுத்தம் டிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரசின் சிவிலியன் மற்றும் இராணுவத்தினர் புரிந்த குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை குற்றவியல் நிதிச் சட்டம் வழங்கவில்லை என்பதோடு, எல்...ஈ இன் நடவடிக்கைள் தொடர்பாக முறைசார்ந்த விதத்திலான பொறுப்புக்கூறல் அரைகுறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும் உள்ளது.இராணுவ நீதிமன்ற அமைப்பின் குற்றவியல் நீதி மீதான அதிகார வரம்பு 366. இராணுவத்தினர் புயும் குற்றங்கள் தொடர்பில், இராணுவ மற்றும் சிவிலியன் நீதி ஒன்றுபாட்டினை இலங்கை அனுமதிக்கிறது. இச்சகலதுமடங்கிய கோட்பாடு 1949 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க (எஸ் 77) இராணுவச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதோடு அது இராணுவத்தினரை உட்படுத்தி இராணுவக் குற்றங்கள் வரிசையினை வழங்கும் இராணுவ நீதி அமைப்பொன்றை ஏற்படுத்துகிறது. இராணுவ நீதி அமைப்பு இராணுவத்தினர் ஈடுபடும் சகல சிவில் குற்றங்கள் மற்றும் இராணுவக் குற்றங்கள் அனைத்தும் மீதும் ஆதிக்கம் கொண்டுள்ளது. சிவில் சட்டத்தைப் போன்றே, இராணுவச் சட்டம் போர்க்குற்றங்கள் அல்லது மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் அல்லது சட்டத்தின் படி இராணுவத்தினருக்காக கட்டளைப் பொறுப்பு ஆகியவை பற்றிய பொறுப்பினை குறிப்பிடவில்லை.367. இராணுவ வீரர்கள் புரிந்த மனித உரிமைகள் மீறல்களான அவர்களது நடத்தை மீது இராணுவ சட்டவாதிக்கத்தை சர்வதேச சட்டம் தடுக்காத போதிலும், அத்தகைய விடயங்கள் இராணுவ நீதித் அமைப்பினூடாகப் பயனுறு விதத்தில் மேற்கொள்ளப்படாது மற்றும் தண்டனை விலக்களிப்பில் போய் முடியக் கூடும் என்பதால் சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் அத்தகைய விடயங்கள் மீது சிவிலியன் ஆதிக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டி அதற்கானதொரு வலுவான விருப்பத்தைக் குறிக்கிறது.368. "இராணுவ, கடற்படை மற்றும் வான்படைச் சட்டங்களின் கீழ் மீறல்களில் சந்தேகிக்கப்படும் ஆயுதப் படை உறுப்பினர்களை இராணுவ நீதிமன்றம் அல்லது சிவிலியன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம். பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என்பதாக குழுவுக்கு அரசாங்கம் சமர்ப்பித்த எழுத்து மூலமான வாக்குலத்தில் குறிப்பிட்டுள்ளது. பல வழக்குகள் என்பது இராணுவ நீதியின் ஆதிக்கம் தொடர்பானவையா அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டம் சம்பந்தப்பட்டவையா என்பது தெளிவற்று இருக்கிறது.யுத்தம் டிந்த பின் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள் தொடர்பாக இராணுவத்தினரைப் பொறுப்புக்கூறுவதற்கு மேற்கொள்ளப்படும் உண்மையானதொரு யற்சி எனக் கருத டியாது. மேலும், மிக உயர் மட்டங்களில் கட்டளையிடப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டதற்கான உருமாதி பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக தற்போது பதவியிலிருக்கும் அல்லது முன்னாள் உயர் மட்ட இராணுவ (அல்லது சிவிலியன்) அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக தெரியவில்லை.369. இலங்கையின் இராணுவ நீதி அமைப்பு, அதனால் இங்காணப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவோ அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் எழுந்த ஏனைய மீறல்கள் தொடர்பாகவோ பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியொன்றை செயற்படுத்துகிறது என்பதற்கான எந்த அடையாளத்தையும் குழுவினால் காண முடியவில்லை.4. பாதிக்கப்பட்டோர் நீதி மன்றம் செல்வதற்கான வசதி 370. இலங்கையில் பாதிக்கப்பட்டோர், கொள்கையளவில், சர்வதேச சட்டத்தின் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலுக்குப் பங்களிக்கும் வகையில் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆயினும், செயல் முறையில்.

அரசாங்கத்தின் வெளிப்படையான மீறல்களைத் தடுப்பதில் நீதித்துறையின் தலையீடு தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்பதற்கு இலங்கையின் அரசியல மைப்பின் வரலாறு சாட்சி பகர்கிறது. நீதி மன்ற மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட பரவலான அவசரகால அதிகாரங்களின் விளைவாக சட்டத்தின் நல்லாட்சி நலிவடைதல் மற்றும் அரசாங்க அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைக்கும் அரசியல் மனவுறுதி அற்ற நிலையிலான தட்டிக்கேட்க ஆளில்லை என்றதொரு கலாசாரம் எல்லாமாகச் சேர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை கிரமமாகப் புறக்கணிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளன.371.அண்மைய வருடங்களில், இலங்கை நீதித்துறையின் தலைமையில் இருக்கும் உயர் நீதி மன்றம், தன் னைப்பினைக் கொண்ட பிரதம நீதியரசர் ஒருவருடன், அரசின் அதிகாரத்தை வலியுறுத்தி சர்வதேசக் கடப்பாடுகளை ஒதுக்கி வைக்கும் விதத்தில் சகலவற்றையும் மேவும் தன்னிறைமை என்றதொரு நோக்கத்தைக் கொண்டதாக அணுகுறையின் கீழ் அதிக அளவில் அரசியலில் சிக்க வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு உயர் நீதி மன்றத்தின் தீர்மானங்கள் பல ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழான இலங்கையின் கடப்பாடுகளை மீறுவதாகவும், ன்னைய சர்வதேச சட்டத் தரங்களை அனுசத்து நடப்பதை விட்டும் அது விலகிப் போகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.நீதியரசர்களை நீக்கும் செயற்பாட்டுக்குப் பொறுப்பான, பிரதம நீதியரசர் தலைமை தாங்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் சர்வதேசச் சட்டத்துக்கு ரணாகச் செயற்படுவதாகக் காணப்பட்டுள்ளது.

இறுதியாக, அண்மையில் சட்டமாக்கப்பட்ட 18ஆவது திருத்தம் பாராளுமன்றக் குழுவொன்றுடன் குறைந்த அளவிலான கலந்துரையாடலொன்றைத் தொடர்ந்து நேரடியாக நியமனங்களைச் செய்யும் பரந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியிருப்பதால், சிரேஷ்ட நீதித் துறையினன் சுயாதீனம் மேலும் நலிவடைந்துள்ளது.(அ)அடிப்படை உரிமைகள் மனுக்கள் மற்றும் ஏனைய பகிரங்க சட்ட நடவடிக்கை கள் 372. அரசியலமைப்பின் உறுப்புரைகள் 17 மற்றும் 126 ஒன்றாக, நிறைவேற்றுச் செயற்பாடு காரணமாக அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க டியும் என்பதற்கான ஏற்பாட்டினைக் கொண்டுள்ளன. ஆயினும், இப்பகாரத்தின் பயனுறு தன்மை மட்டுப்பட்டதாயுள்ளது.

தலில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய அட்டவணை முழுமையானதாக இல்லை என்பதோடு அவற்றில் உள்ள உரிமைகள் சர்வதேச நீதியுடன் ஒத்துப்போகாத விதத்தில் அரசியலமைப்பினால் வரையறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

இராண்டாவதாக, அத்தகைய மனுக்கள் கடுமையான நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிவதாயிருக்கின்றன மீறலின் சுபாவம் எதுவாக இருந்த போதிலும் அது ஒருவர் விடயத்தில் எவ்வளவு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் நடைபெற்று ஒரு மாதத்தினுள் மனுதாரர்கள் அத்தகைய மனுவை உயர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.ன்றாவதாக, தனது சொந்த உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதாக அல்லது அவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஊடாகஅடிப்படை உரிமைகளுக்கான பகாரத்தை வேண்டி நிற்பதை விடுத்து ஏதும் ஒரு காரணத்துக்காக நேரடித் தரப்புக்கு டியாமல் அல்லது அத்தரப்பு செய்யாது என்ற நிலையில் நண்பரொருவர் அல்லது பொது நலன் வழக்குத் தொடரலை அது தடுக்கிறது.373. இப்பகாரத்தின் கடந்த கால வழக்கத்தை நோக்குமிடத்து, 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கிடையிலான உயர் நீதி மன்றத்தின் சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்தப்பட்டது தொடர்பான அடிப்படை உரிமைகள் தீர்ப்புக்கள் வேதனையளிக்கும் விதத்தில் ன்னுக்குப் பின் ரணானவையாக இருக்கின்றன என்பதை அண்மைய ஆய்வொன்று எடுத்துக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்டவர் சார்பான உறுதியான தீர்மானங்கள், உயர் தொகையிலான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் தெளிவாக காவல்துறையின் துக்ஷ்பிரயோகத்தைக் கண்டிப்பது போன்றவை வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.பாதிக்கப்பட்ட ஒருவர் அடிப்படை மனுவொன்றை முன் வைத்ததுடன், மனுதாரர் அதிக அளவில் விதிகளுக்குக் கட்டுப்படாத மற்றும் ன்னறிந்து கூறுவதற்கு டியாத சட்டச் செயற்பாடொன்றை எதிர் நோக்க வேண்டியேற்படுகிறது.அத்தகைய மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் சட்ட வளங்கள் அத்துடன் அத்தகைய மனுக்கள் விசாக்கப்படும் இடமான கொழும்புக்கான பிரவேசம் ஆகியவை காரணமாக இப்படியாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான மிகச் சீரற்ற ஒரு நிலையையும் ஆய்வு கண்டது.374. மனுதாரர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்ட போதிலும், அது பயனுறு குற்றவியல் புலனாய்வு மற்றும் வழக்குத்தாக்கல் செய்தலுக்கு வழிகோலுவதாகக் கொள்ள டியாது.

மேலும், துஷ்பிரயோகமாக நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகள் வெற்றி யான போதிலும், அதனைத் தொடர்ந்து பயனுறு குற்றவியல் புலனாய்வு மற்றும் நீதி மன்றச் செயற்பாடு ஏற்பட்டதாகவும் இல்லை. மேலும், துஷ்பிரயோகமாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய அடிப்படை உரிமைகள் வழக்குகள் வெற்றி பெற்ற போதிலும், நஷ்டஈடு அரசாங்கத்துக்கு எதிராக அல்லது தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழங்கப்பட்டதா, இழப்பீட்டின் தொகை மற்றும் தீர்ப்பில் செலவுகளை உள்ளடக்குவது போன்ற தெளிவுபடுத்தப்படாத மற்றும் விதிகளுக்கு உட்படாததாகத் தோன்றும் மாறுபாடுகளைக் காணக் கூடியதாகவுள்ளது.375. இருந்தபோதிலும், "பல அடிப்படை உரிமைகள் மனுக்கள், ஆட்கொணர் மனுக்கள் மற்றும் அழைப்பாணை மனுக்கள் ஆயுதப் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன' என அரசாங்கம் குழுவுக்கான அதன் எழுத்து மூலமான பதிலில் தெவித்துள்ளது. இவ்வடிப்படை உரிமைகள் அல்லது ஏனைய மனுக்கள் ஏதும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றியவையா என்பது தெளிவாக இல்�ல் குழு அதன் மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பான தனிப்பட்ட விவரம் எதனையும் வழங்கவில்லை. இப்போது சமர்ப்பிக்கப்படும் ஏதும் அடிப்படை உரிமைகள் மனுக்கள் பொதுவாகக் காலம் கடந்தவை என ஒதுக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் நடைபெற்ற ஒரு மாதத்தினுள் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை விதி காரணமாக அவை முழுமையாகச் செயலற்றவையாகி விடுகின்றன.(ஆ)தனியார் சிவில் வழக்கு 376. அரசாங்கத்தின் நடத்தை பற்றி, "மீறல்கள் இருப்பின் சிவிலியன் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட சிவில் வழக்குகளைத் தொடரலாம்' என அதன் எழுத்து மூலமான பதில்களில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள போதிலும், அது பற்றிய உதாரணம் எதனையும் அது வழங்கவில்�ல. குழுவும் அப்படியான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் காணவில்லை. எல்...ஈ உறுப்பினர்களுக்கு எதிரான பொது மக்கள் இழப்பீடுகள் தொடர்பாக, "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களினால் பாதிக்கப்பட்ட எவரும் குற்றஞ்சாட்டப்பட்ட எல்...ஈ இன் மீறல்களுக்கான இழப்பீட்டைக் கோரவில்லை' என அரசாங்கத்தின் எழுத்துலமான பதில்கள் கூறுகின்றன.உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தெயாது நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்: (பாகம்) - 22

(இ) ஆட்கொணர்வு மனு மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பகாரத்தைப் பெறல் 377. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தடுத்து வைப்பதற்கான சட்ட அனுமதியை யும் மற்றும் விடுதலைக்கான நிலைமை களைப் பெற்றுக் கொள்ளவும், நீதியின் போதிய அடிப்படை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் கொள்கையளவில் வழக்கமான வழியாக ஆட்கொணர்வு மனுவின் ஆதிக்கம் உள்ள போதிலும், தடுத்து வைத்தல் தொடர்பாக அதன்மூலம் நடவடிக்கை எடுப்பது மட்டுப்படுத்தப் பட்டதாகவே உள்ளது. இலங்கையில், "சட்டத்துக்கு விரோதமாக அல்லாது ஒழுங்கற்ற முறையில் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ தடுத்து வைக்கப்பட்டுள்ள' எந்த ஒரு நபரையும் பௌதீக உடலுடன் நீதி மன்றத்தின் முன் ஆஜர் படுத்தவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மேன்றையீட்டு நீதிமன்றத்துக்கு ஆட்கொணர்வு மனு மீதான ஆதிக்கத்தை அரசியலமைப்பும் வழங்கியுள்ளது.

378. அண்மைய ஆண்டுகளில், மனுதாரர்களுக்கு நிதி மற்றும் போக்கு வரத்துச் சிரமங்களை ஏற்படுத்துவதான பிரதிவாதிகள் நீதி மன்றத்தை மாற்றுமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுப்பது கடத்தியவர்களின் பெயர்களின் எழுத்தில் வித்தியாசம், அல்லது காவல்துறை தலைவர் அல்லது இராணுவத்தினர் குற்றச் சாட்டுக்களை வெறுமனே நிராகப்பதன் அடிப்படையில் மனுக்களை நிராகரித்தல் ஆகியவை உள்ளிட்ட நீண்ட கால தாமதம் மற்றும் வேறு பல காரணிகள் தொடர் காரணமாக அரசியலமைப்பினூடான ஆட்கொணர்வு மனு வழங்கும் பகாரம் செயல்றை பெறுமதியை இழந்துள்ளது.

சாட்சிகளை அச்சுறுத்தல், நீதித் துறை மீது பொதுமக்களுக்கு உண்டானதான நம்பிக்கை குறைவு, ஒரு செயலில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது பற்றிய அச்சம் ஆகியவை உள்ளிட்ட சூழல் சார்ந்த காரணிகளும் வெற்றிகரமான வழக்காட லுக்குப் பாதமாக உள்ளன. 1994 தல் 2002 வரை மேன்றையீட்டு நீதிமன்றம் வழங்கிய 844 தீர்ப்பபுக்களின் ஆய்வொன்றின் படி, 79 சதவீதமான ஆட்கொணர்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பாக 1980 ஆம் வருடங்கள் தல் 1990ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலம் வரை வலுக்கட்டாயமாகக் காணாமல் போனவர்கள் தொடர்பாக இவ்வழக்குகள் இருந்தன.

379. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களிலும் அதன் பின்னரும் தடுத்து வைக்கப்பட்ட பல்வேறு வகையினர் எந்த நீதியின் அடிப்படையில் அப்படித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பாரிய நிச்சயமற்ற நிலைமை நிலவுகிறது.

விசாரணையின்றி பாரிய எண்ணிக்கை யிலான இடம்பெயர்ந்தோரை புறத் தொடர்பு அற்ற காம்களில் அடைத்து வைப்பதற் கான உய சட்ட அடிப்படை தெளிவற்ற தாகவே உள்ள அதே வேளையில், சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் தொடர்பாக அவசரகால ஒழுங்குவிதிகள், பிஏ சட்டம் மற்றும் சாதாரண குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரு வகையைச் சேர்ந்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் செயல்றையில் மற்றும் தேவையான சட்ட பிரதிநிதித்து வத்தையும் ஆட்கொணர் மனுவின் அதிகாரத்தைப் பிரயோகித்துப் பெறலாம் என்பதுவும் மிகக் கஷ்டமாகவே உள்ளது.

தடுப்புக் காவல் பற்றிய நீதி மன்ற மீளாய்வு "முறைசார்ந்த மனுவாக இருக்க வேண்டிய தில்லை, ஆனால் தடுப்புக் காவலில் உள்ளவர் வழங்கும் கடிதம் ஒன்றின்மூலம் அச்செயற்பாடு மேற்கொள்ளப்படலாம்' என அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் உறுதியாகக் கூறினாலும், அவ்வாறு நடைபெற்ற சந்தர்ப்பங்களை அது குறிப்பிடவில்லை. அத்தகைய உரிமை பற்றி சகல தடுத்து வைக்கப்பட்டவர்களும் அறியச் செய்வதற்கான அரசாங்கத்தின் யற்சிகள் பற்றி குழு அறிந்திருக்கவில்லை.

380. "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களுக்காக சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்குச் சுலபமான வாய்ப்புண்டு மற்றும் சட்டத்தரணிகளை அமர்த்த டியாதவர்களுக்கு அரசாங்கத் தினால் நிதியளிக்கப்படும் சட்ட உதவியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது' என அரசாங்கத்தின் பதில்கள் மேலும் கூறுகின்றன. அத்தகைய சட்ட உதவி தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லோருக்கும் அல்லது குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதா என்பது தெளிவற்றதாக உள்ள தோடு, "சுலபமாகக் கிடைக்கிறது' என்பது பல்வேறு தடுப்பு காம்களில் புறத் தொடர்பு இன்றித் தடுத்து வைத்திருப்பதுடன் ஒத்துப் போகாமல் உள்ளது. "இராணுவத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பல அடிப்படை உரிமைகள் மனுக்கள், ஆட் கொணர்வு மனுக்கள் மற்றும் அழைப் பாணைப் பத்திர மனுக்கள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன' என அரசாங்கம் உறுதியாகக் கூறிய போதிலும், மோதலுடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சார்பி லேனும் வெற்றிகரமாக ஆட்கொணர்வு மனுவொன்று செயற்படுத்தப்பட்டது பற்றி அது அறிவிக்கவில்லை என்பதோடு அத்தகைய சம்பவமொன்றை குழுவினால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை.381. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் நீதிமன்ற வழக்காடலுக்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்ட போதும், அவசரகால ஒழுங்குவிதிகள் அல்லது பிஏ சட்டத்தின் கீழ் அகற்றப்பட்டுள்ள நீதிமன்ற மீளாய்வு மற்றும் அச்சட்டங்களின் கீழ் வழங்கப்பட் டுள்ள கட்டாயமாகத் தடுத்து வைத்தல் காரணமாக ஆட்கொணர்வு மனுவொன்றை விசாக்கும் நீதிமன்றம் தடுத்து வைத்தி ருப்பதைப் பயனுறு விதத்தில் மீளாய்வு செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக் கும் என்பதையும் குழு குறிப்பிட வேண்டி யுள்ளது.382. இவ்வாறாக, அதற்குக் கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அது சட்டபூர்வ மானதா என்பதைப் பட்சித்துப் பார்ப்பதற் கும் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற் கான உண்மையான நியாயத்தை மதிப்பீடு செய்வதற்கான வினைத்திறன் கொண்ட தொரு பகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பில்லை என குழு தீர்மானித்துள்ளது.(உ) இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 383. 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தானாகவோ அல்லது புகார் ஒன்றை வைத்தோ அடிப்படை உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்கு விவான முறைசார்ந்த அதிகாரங்ககைளக் கொண்டுள்ளது.

உண்மையைக் கண்டறிதல் தொடர்ந்து தோதான அதிகார பீடங்களுக்குப் பரிந்துரை களை வழங்குவது மற்றும் சமாதானப் படுத்தல் அத்துடன் மத்தியஸ்தம் செய்தல் ஆகியவை அதனால் வழங்கப்படக் கூடிய நிவாரணங்களாகும். நடைமுறை பற்றிய தோதான சட்டங்கள் வகுக்கப்படும் வரை, பாரிய உரிமைகள் மீறல்கள் தொடர்பாக நேரடியாக நீதிமன்றங்களை அணுகவோ அத்தகைய விடயங்களை தோதான நீதி மன்றங்களுக்குச் சாட்டவோ அதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.384. இதன் விளைவாக, கடந்த காலங் களில், காவல்துறையினால் மாத்திரமன்றி அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளினாலும் அதன் பரிந்துரைகள் அநேகமாக அப்பட்டமான முறையில் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ற்றிலும் வேறுபட்ட விதத்தில், ஏனைய நாடுகளில் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் இடைக்கால நீதி பற்றிய கேள்விகளை மேம்படுத்தும் விதத்தில் முக்கியமானதொரு பங்களிப்பை வழங்கியுள்ளன.385. 2006 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அரசியலமைப்புச் சபையின் அனுமதி இன்றி அரசியலமைப்பின் தேவைப் படுத்தலை புறக்கணித்து ஆணைக்குழுவுக் கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்த காரணத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சட்டத்துடன் உடன் பாடான தன்மை இல்லாதிருந்தது. 2007 ஆம் ஆண்டில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங் களுக்கான தரங்களின் (பாஸ் கோட்பாடு) விசேட மீளாய்வினைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு "ஏ' நிலையில் இருந்து "பி' நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டது. 2006 ஜூலை மாதம் சுமார் 2000 காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழு கைவிட்டது அது எடுத்துக் கொண்ட விடயங்களில் ஒன்றாகும் என ஐ.சி.சி.என்.எச்.ஆர்.ஐ. குறிப்பிட்டது.

இலங்கையில் அவசரகால நிலைமை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தேசிய மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று "அதன் ஆணையை நிறைவேற்றும் போது மிகக் கூடிய விழிப்புடனும் சுயாதீனத்துடனும் செயற்படும்' என எதிர்பார்ப்பதாக அது தெவித்தது. 386. ன்னைய ஆணைக்குழு உறுப்பினர் களின் உத்தியோகக் காலம் டிவடைந்ததும், இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழுவுக்கு 2009 ஏப்ரலில் புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க வில்லை. அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம், குறுகிய கலந்துரையாடலுக்குப் பின் ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதைத் தொடர்ந்து, 2011 பெப்ரவ மாதம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான புதிய தலைவர் ஒருவரையும் மேலும் நான்கு ஆணையாளர்களையும் நியமித்தார்.387. 2009 ஏப்பிரலில் அது காலாவதி யாவதற்கு ன்னர் யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான மீறல்கள் சம்பந்தப் பட்ட விடயங்கள் எதனையும் ன்னைய ஆணைக்குழு புலனாய்வு செய்ததா என்பதை குழு அறியவில்லை. உதாரணமாக, குழு அறிந்த வரை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஓமந்தை அல்லது வேறு ஏதும் காம்களில் அல்லது ஏனைய தடுப்புக்காவல் நிலையங்களில் பிரசன்னமாயிருக்கவில்லை. ஆயினும், கொள்கையளவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள தொடர்பில் தானாகவோ அல்லது புகார் ஒன்றினைத் தொடர்ந்தோ ஆராய்வதற்கான ஆணையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும். புதிதாக அமைக்கப்பட்ட ஆணைக்குழு அவ்வாறு செய்யுமா என்பதோடு, அது அப்படிச் செய்தால், அதன் ன்னைய வரலாறு மற்றும் அனுபவத்தை வைத்து அது சுயாதீனம் மற்றும் வினைத்திற முன் தொடர்பில் சர்வதேச தரங்களை திருப்திப்படுத்துகிறது என்பதாகுமா என்பதைக் காத்திருந்தே பார்க்க வேண்டும்.388. குழுவுக்கு வழங்கப்பட்ட "எல்.எல்.

ஆர்.சி.யின் இடைக்கால பரிந்துரைகளின் அமலாக்கம் பற்றிய ன்னேற்ற அறிக்கை' யில் அரசாங்கம் பின்வருமாறு வாதிடுகிறது: காணாமற் போனவர்கள் தொடர்பாக எல்.எல்.ஆர்.சி. சேகத்த சாட்சியங்கள் தொடர்பாக, காணாமற் போனதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அநேகமானவர்கள் கடைசியாக எல்...ஈ. அணிகளுடன் இருப்பதாகக் காணப்பட்டனர். எனவே, ஒன்றில் அவர்கள் எல்...ஈ. போராளிகள் என யுத்த களத்தில் கொல்லப்பட்டிருப் பார்கள் அல்லது பாதுகாப்புப் படையினடம் சரணடைய யற்சி எடுக்கும் போது எல்...ஈ. இனால் சுடப்பட்டிருப்பார்கள்.389. இவ்வறிக்கை எந்தவிதத்திலும் மேலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு காணாமற் போனவர்களில் சிலருக்குத் தான் பொறுப்பாக இருக்கக் கூடும் என்ற சாத்தியக்கூற்றினை மறுப்ப தாகவும் அது தென்படுகிறது. "காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களை தீர்ப்பதை நோக்காகக் கொண்ட கருத்திட்ட மொன்றின் ஒன்றிணைந்த பகுதியாக' ஆட்களின், சொத்துக்களின் மற்றும் கைத் தொழில்களின் புனருத்தாபன அதிகார சபையின் தரவுத் திரட்டொன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பேணுவ தாக அரசாங்கம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

அது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்குக் கைமாற்றப்படும் என அது உறுதிப்படுத்தியுள்ளது. இக்கருத்திட்டத்தின் நிலைச் சக்தியைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றிருந்த போதிலும், காணாமற் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை ன்னெடுத்துச் செல்வதற்கு புதிதாக மீளமைக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு திறன் உண்டா என்பதில் குழுவுக்கு ஆழ்ந்த ஐயப்பாடு உண்டு. தாம் "சமூகத்துக்குச் சேவை செய்வதற்காக சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்' என ஆணைக்குழு வின் தலைவர் கூறியிருப்பதற்கேற்ப அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் மீது (ஆளுமை) செலுத்தும் சட்டத் துக்கான திருத்தம் இன்றி பயனுறு விதத்தில் செயற்பட டியாது என்பதால் அவர்கள் இது பற்றி அரசாங்கத்துக்கு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு ஏகமனதாக இணங்கியுள்ளனர்' என்பதையும் குழு கவனத்துக்கு எடுத்துள்ளது.390. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் லச் சட்டம், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலனைக் கண்காணித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பசோதனை செய்வதற்கான அதிகாரத்தை அதற்கு வழங்குகிறது.

உண்மையிலேயே. தடுத்து வைத்தல் மற்றும் தடுத்து வைத்துள்ள இடம் பற்றி 48 மணித்தியாலங்களுக்குள் ஆணைக்குழு வுக்கு அறிவிக்க வேண்டும் என்பதையும் அதிகா ஒருவர் வேண்டுமென்றே அப்படி அறிவிக்கத் தவறும் பட்சத்தில் அதனைக் குற்றமாகக் காண்பதையும், அத்தகைய தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் புகுந்து அவற்றைப் பசோதனை செய்வதை யும் அச்சட்டம் தேவைப்படுத்துகிறது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டவர் எவரைப் பற்றியும் இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதா என்பது தெளிவற்றதாக உள்ளது. இது தொடர்பாக புதிய ஆணைக்குழு அதன் ஆணையை உறுதியாக செயற்படுத்த வேண்டும். இப்படி அறிவிக்க வேண்டிய தேவை கிரமமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் அப்படிச் செய்வது விசேடமாக முக்கியமானதொரு அரசியல் மனவுறுதியின் சமிக்ஞையாக இருக்கும். தடுத்து வைத்தல் பற்றி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கத் தவறியமைக்காக எச்சந்தர்ப்பத்திலும் எவரும் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி குழு அறியவில்லை.

(ஊ) மரணத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடு 391. இலங்கையில் நடந்தேறிய யுத்தத்தின் இறுதி மாதங்களைத் தொடர்ந்து, மற்றும் அதற்குப் பின்னரும் அவர்கள் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி பலர் அறியாதிருப்பதோடு, அப்படி நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசு, காணி உரிமைகள் மற்றும் மறுமணம் போன்றவற்றை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் சொந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை மரண உறுதிப்படுத்தல் இன்றித் தீர்ப்பது மிகக் கஷ்டமான காயமாகும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த அல்லது காணாமற் போன நிலைச்சக்தியினைக் கொண்டதொரு சந்தர்ப்பத்தை சமாளிப்பதில் 1954ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் போதியதாக இல்லை.

392. 2010 டிசம்பர் மாதம், 2010 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மரணப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், மரண அத்தாட்சிப் பத்திரங்களின் விநியோகத்தை எளிதாக்குவதற்காக இயற்றப்பட்டது.

"பயங்கரவாத அல்லது நாசகார அல்லது சிவில் கொந்தளிப்பு விளைவாக காணாமற் போனதாக அறிவிக்கப்படும் இறந்தவர்களின் பதிவுக்கான' ஏற்பாட்டை, ஏனையவற்றுக் குப் புறம்பாக, இச்சட்டம் வழங்குகிறது. எது எவ்வாறிருப்பினும், கடந்த ன்று வருடங் களாக அலில் இருக்கும் இச்சட்டம், அத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் காட்டக்கூடியவாறாக ஒருவர் காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டு குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு அவரைப் பற்றிய எதுவித தகவலும் இல்லாத நிலையில் பதிவாளர் நாயகம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட பிறப்பு மற்றும் மரணப் பதிவாளருக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்கு அனுமதி அளிக்கிறது.

393. "சிவில் கொந்தளிப்பு' என்ற சட்டத் தின் கருத்து யுத்தத்தின் கடைசிக் கட்டங் களையும் உள்ளடக்குகிறதா அல்லது அர சாங்கத்தின் கையில் இருக்கும் போது காணா மற் போயிருக்கக் கூடியவர்களையும் அது உள்ளடக்குகிறதா என்பது தெளிவற்றதாக வுள்ளது. அது அவ்வாறே என குழு கருது கிறது என்பதோடு அப்படி உள்ளடக்காது என்பதான விளக்கம் தெளிவாகவே ஏற்றுக் கொள்ள டியாததொன்றாகும். பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் இப்புதிய பொறிய மைப்பை அரசாங்கம் எவ்வளவு தூரம் பகிரங்கப்படுத்தியுள்ளது மற்றும் செயல் முறையில் அதன் பிரயோகம் பற்றியும் குழுவுக்குத் தெளிவற்றதாகவே உள்ளது.

394. வடக்கிலும் கிழக்கிலும் எல்.எல்.ஆர்.

சி. முன்னிலையில் சாட்சியம் அளிக்க முன் வந்த பாதிக்கப்பட்ட கணிசமான எண்ணிக் கையினர் அவர்கள் சொந்தங்கள் காணாமற் போனதாக கூறினர். ஆயினும், குழுவுக்கான அதன் எழுத்து மூலமான அறிக்கையில் அரசாங்கம்: "எல்.எல்.ஆர்.சி. யின் அறிக்கை யும் பரிந்துரைகளும் வெளியாகும் வரை, இத்தருணத்தில், ங்2010 சட்டத்தின்சி ஏற்பாடு களைச் செயற்படுத்தும் நிலையில் தாம் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

எல்.எல்.ஆர்.சி.யின் அறிக்கை பகிரங்கப் படுத்தப்படுமா என்ற உத்தரவாதம் கூட இல்லாத நிலையில், எல்.எல். ஆர். சி. அதன் அமர்வுகளை டித்துக் கொள்ளும் வரை மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற உரிமையுள்ளவர்கள் காத்து நிற்க வேண்டி யது தேவையற்றதும் பொருத்தமற்றதும் என்பது குழுவின் கருத்தாகும். 395. உறவினர் ஒருவன் வேண்டுகோளுக் கேற்ப மரண அத்தாட்சிப் பத்திரத்தை துரிதமாக விநியோகிப்பதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், ஏனைய நாடுகளின் அனுபவத்தை இங்கு வலியுறுத்தி, மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவது மரணத்தைச் சூழவுள்ள சந்தர்ப்பங்களை தித்துக் கூறவோ அல்லது மறைக்கவோ உபயோகப்படுத்தலாகாது என்பதை குழு வலியுறுத்துகிறது. நிருவாகச் செயற்பாடொன்றைத் தொடர்ந்து மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவது சர்வதேச தரங்களை நிறைவு செய்யும் விதத்தில் ஒருவன் மரணம் பற்றிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உண்மையான முறையில் புலனாய்வு செய்வதற்குப் பரிகாரமாகாது சொந்தக்காரர் ஒருவர் மரண அத்தாட்சிப் பத்திரமொன்றைப் பெற்றுள்ளார் என்பது எதிர்காலத்தில் மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதான சட்ட ரீதியிலான தடையாக அமையக் கூடாது என்பதும் முக்கியமாகும்.

எ. தீர்மானங்கள் 396. சர்வதேசச் சட்டங்கள் மற்றும் அதன் உள்நாட்டுச் சட்டங்கள், இவ்வறிக்கையில் விவக்கப்பட்டவை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்து தேவையானவிடத்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையைத் தேவைப் படுத்துகின்றன. இராணுவ தியாக கிளர்ச்சி யொன்று தோற்கடிக்கப்பட்ட வேறு சந்தர்ப் பங்கள் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அனுபவம், இலங்கை போன்ற சூழ்நிலைப் பொருத்தத்தில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு தொடர்பாக பொறுப்புக்கூறலை அடைவதற்காக எவ்வாறு இடைக்கால நீதிப் பொறித்தொகுதிகள் வடிவமைக்கப்படலாம் என்பதற்கான முக்கியமான ஒப்பீட்டள விலான வழிகாட்டல்களை வழங்குகின்றன.

397. நீதியை மீண்டும் நிலைநாட்டும் அதன் மனவுருவை இலங்கை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளது. தன் பிரஜைகளை "பயங்கரவாதத்தில்' இருந்து காப்பாற்றத் தவறியமைக்காகக் கடந்த கால அரசாங்கங் களின் அரசியல் பொறுப்பினை ஆராய்வதற்கும் உயிரோடிருக்கும் சில எல்...ஈ.

உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதுமூலம் அல்லது சிறியதொரு எண்ணிக்கை யிலான விடயங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுமூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் எல்.எல்.ஆர்.சி. யினை அது பிரயோகிக்கிறது என்பதோடு அவ்மனவுருவின் பிரதிபலன் தீர்க்கமற்றதாக இருப்பதோடு, பொறுப்புக்கூறல் விடயத்தை அணுகுவதற்கான அரைவாசி நடவடிக்கை யாகவும் அமைந்துள்ளது. இவ்வறிக்கையில் விபக்கப்பட்டுள்ள, அவை நிரூபிக்கப் பட்டால், சர்வதேச சட்டத்தின் பாரிய மீறல்களாக அமையக்கூடிய, நம்பகமான குற்றச்சாட்டுக்கள் அல்லது வேறு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பசோதிப்பதற்காக எதுவும் கருதப்பட வில்லை. அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மரணத்துக்குப் பங்களிப்பைச் செய்திருக்கக் கூடிய அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்லது நிருவாக செயற்பாடுகள் பற்றிய உண்மையானதொரு புலனாய்வு அல்லது யுத்தத்தின் பின்னணிக்கான காரண காயங்கள் பற்றியதொரு ஆழமான பரிசீலனையையும் இம்மாதி கருதவில்லை.

398. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது புரியப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பாக மற்றும் நியாயமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்காக இலங்கையின் உள்நாட்டு பொறித் தொகுதிகள் இதுகாலவரை பயனுறு விதத்தில் செயற்படவில்லை. குறிப்பாக: (அ) எல்.எல்.ஆர்.சி. மனவுருவிலும் அதன் நடைமுறையிலும் ஆழமான குறைபாட்டைக் கொண்டதாகவுள்ளது. அது உறுதியற்ற பொறுப்புக்கூறல் கருத்தின் மேல் உருவாக் கப்பட்டிருப்பதால் அதன் மனவுரு குறை பாடுள்ளதாகவுள்ளது. சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற தன்மை, பாதிக்கப்பட்ட வர்களை நடாத்தும் விதம், சாட்சிகளுக்கான பாதுகாப்பு அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவற்றுக்கான சர்வதேச தரங்களை அது நிறைவு செய்யாததால் அது நடைமுறையிலும் குறைபாடுள்ளதாகவே யுள்ளது. மொத்தமாக, பயனுறு பொறுப்புக் கூறல் பொறித்தொகுதியொன்றுக்கான சர்வதேச தரங்களை அது நிறைவு செய்ய வில்லை என்பதால் பொறுப்புக்கூறல் செயற்பாடு பற்றிய இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்தின் கூட்டு உறுதிப்பாட்டை அது நிறைவு செய்யாது.

மற்றும் அதனால் நிறைவு செய்ய முடியாமலுமிருக்கிறது.தமிழ் இராணுவத் தலைமைப்படைகளை கலைத்து அவர்களுக்கெதிராக வழக்குத் தொடர வேண்டும் (பாகம்)- 23ஆ. உரிமைகள் மீறல்கள்குறிப்பாக அரச ஊழியர்களால் மேற் கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவை தொடர்பாக நேர்மையான, உடனடி மற்றும் பக்கசார்பற்ற நீதியை வழங்குவதற்கான அதன் திறனை இலங்கையின் குற்றவியல் நீதித் திட்டம் அண்மை ஆண்டுகளில் வெகுவாக இழந்துள்ளது. அத்தகைய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடர்வதை மேற்கொள்வதற்கான அரசியல் மனவுறுதி தெளிவாகவே இல்லாது காணப்படுவதோடு, தலைமை வழக்கறிஞராகிய சட்ட மா அதிபன் சுயாதீனத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது.

பரந்த அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தோன்றுவதற்கு நீதித் துறையும் வழக்காடல் அதிகாரிகளும் காட்டும் தயக்கம் தண்டனை விலக்களிப்புக் கலாசாரமொன்றை தோற்றுவித்துள்ளது. இன்று வரை யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை குற்றவியல் நீதித் திட்டம் வழங்கவில்லை.

(இ) சட்டத்தின் கீழ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பானவை உள்ளிட்ட முக்கியமான புலனாய்வு அதிகாரங்கள் உண்டு. பாஸ் கோட்பாடுகளுக்கு இணங்கியொழுகாமை தொடர்பில் ன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அந்தஸ்து குறைக்கப்பட்டதை மற்றும் அதன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான திறன்களை நோக்குமிடத்து, குறிப்பாக காணாமற் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை ன்னெடுத்துச் செல்வதற்கான அண்மையில் மீளமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் திறன் பற்றி குழுவுக்குப் பாரிய சந்தேகம் உள்ளது. அதன் சுயாதீனத்தையும் செயற்றிறனையும் எடுத்துக் காட்டுவதற்காக அது துரிதமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

(ஈ) தமது குடும்பங்களின் வாழ்வினை மீளக்கட்டியெழுப்ப யற்சித்துக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பாரிய மனிதாபிமானத் தேவைகளை மரண அத்தாட்சிப்பத்திரங்கள் நிறைவேற்றலாம் என்ற போதிலும், யுத்தத்தின் பின்னர் மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குவது மெதுவாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. அத்தகைய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறும் நடைமுறையை சுலபமாக்குவதற்காக அண்மையில் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன.

எதிர்காலத்தில் உறவினர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதில் அல்லது அத்தகைய மரணங்களைப் புலனாய்வு செய்வதற்கான அரசின் தனியான பொறுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாத விதத்தில் அத்தகைய அத்தாட்சிப் பத்திரங்களை உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவசரமாக மற்றும் அதிகாரிகளின் தீர்மானங்கள் இன்றிவழங்குவதற்கான ஒரு திட்டம் தேவைப்படுகிறது.

399. இந்நான்கு காரணிகளும் இலங்கையில் பொறுப்புக்கூறலுக்குக் குறுக்கே இருக்கும் முக்கியமான தடைகள் என்பது குழுவின் கருத்தாகும். அடுத்த அத்தியாயத்தில், பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடங்கலாகவிருக்கும் பரந்த அமைப்புக் காரணிகளை குழு ஆராயும்.

ஙஐ. பொறுப்புக்கூறலுக்கான மேலும் தடைகள்400. பயம் மௌனம் பொறுப்புக்கூறலின் எதிகளாகும்.

மீறல்கள் தற்காலத்திலும் தொடர்ந்து இருந்தால் கடந்த கால மற்றும் மேலும் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றி ஒரு தேசம் நடவடிக்கை எடுப்பது மிகக் கடினமாகவிருக்கும். பொறுப்புக்கூறலை அடைவதற்கானதொரு செயற்பாட்டுக்கு சுயாதீன நிறுவனங்களுக்கு என்ன நேர்ந்தது மற்றும் யுத்தத்துக்கு இட்டுச் சென்ற மற்றும் அதனை ஊக்குவித்த ஆதாரங்கள் என்ன என்பது பற்றிய திறந்த கருத்துப்பமாறலுக்கான ஒரு சூழலும் அவசியமாகும். ஆழ்ந்த வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிரஜைகளிடையே மோதலுக்குப் பின் திறந்ததொரு கருத்துப் பமாறலை மேற்கொள்வது எங்கும் இலேசானதாக இருந்ததில்லை. ஆனால், அதுவே தேவைப்படுகிறது. தீர்க்கப்படாமல் விடப்பட்டால், பொறுப்புக்கூறலை தொடர்ந்து தடைப்படுத்துவது மாத்திரமல்லாமல், மீளிணக்கப்பாடு மற்றும் நிலைத்தகவுள்ள சமாதானம் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பங்களை அழித்து விடவும் கூடிய பல சமகாலத்திய பிரச்சினைகள் இலங்கையில் காணப்படுவதை குழு கவலையுடன் அவதானிக்கிறது. இத்தகைய சில ஆதாரங்களை இப்பிரிவு சுருக்கமாக விளக்குகிறது.

--தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும்..
(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க     http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.

No comments: