பார்த்தது: டிஸ்கவரி சேனல் (தமிழில்)
மெல்லத் திறந்தது கதவு படத்தில் 'தேடும் கண் பார்வை' பாடல் முடிவடையும் நேரத்தில் மோகன் அமலாவின் முகத்தைப் பார்ப்பதற்குள் அமலா புதை மணல் சேற்றில் மூழ்கிவிடுவாள் (போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போலவே அவள் முகம் சகதிக்குள் சென்று மறையும்). சிறுவயதில் இந்தக் காட்சியைக் கண்டு பதைபதைத்திருக்கிறேன். சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் 'Survivor Man' என்றொரு தொடரில் (வேண்டுமென்றே) கொடுமையான சூழல்களில் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைக்கும் மனிதர் சகாரா பாலைவனத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.
நடு வழியில் ஒரு புதை குழியில் சிக்கிக் கொண்டார். அமலா போல் கத்தி கதறி மோகனைக் கூப்பிடாமல் சிரித்தவாறே கேமராவைப் பார்த்து நமக்குச் சொல்கிறார். புதைகுழியில் இறங்கியவுடன் நாம் செய்வது உடனே பதறி சுற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடுவோம். அது தேவையில்லை. புதைமணலானது நீரை விட, சாதாரண மணலை விட அடர்த்தி மிகுந்தது. எனவே நாம் அதில் மூழ்க முடியாது. தவறுதலாக நாம் அதில் கால் வைக்கும் போது நமது எடையினால் நமது கால் உள்ளே குறிப்பிட்ட அளவு போய்விடுகிறது. மணல் காலை நன்கு பிடித்துக் கொள்கிறது. காலை மேலும் கீழும் நாம் இன்னும் ஆட்ட இன்னும் கீழே கீழே இழுக்கப்படுவோம்.
புதை குழியில் விழுந்துவிட்டால், பக்கத்தில் ஏதும் பிடிமானம் கிடைக்கவில்லையென்றால், முன்புறம் லேசாகக் குனியவேண்டும். அப்படியே ஒரு காலை சகதியினுள்ளிருந்து மேலே சகதிக்கு வெளியே கொண்டு வந்து நீட்ட வேண்டும். இப்போது நமது உடல் கிடைமட்டமாக வரும். நமது உடலை சகதியின் மேல் படுக்க வைத்து மற்றொரு காலையும் முழுதுமாக பாதம் வரை சகதிக்கு வெளியே கொண்டு வரவேண்டும். அவ்வளவு தான். இப்போது நீச்சலடிக்கும் பொசிஷன். பிறகென்ன. நீந்துவது போல சகதியில் நீந்தி அப்படியே உறுதியான கறைப் பகுதியை பிடிக்க வேண்டியது தான். நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகமா ? எனக்கும் தெரியாது. புதைமணலில் விழுந்து தான் பார்க்கவேண்டும்.

No comments:
Post a Comment
Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.