Thursday, April 9, 2009

அகிம்சை மரணிக்கும்போது ...

'தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்' கலைஞர் தலைமையில் இன்று இலங்கைத்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற, குண்டு வீச்சுகளிலிருந்து காப்பாற்ற, வதை முகாம்களிலிருந்து மீட்க 'மாபெரும்' பேரணி!!!

'தந்தி கொடுத்தார் கலைஞர்.. ' , 'தந்தி கொடு்க்கிறார் கலைஞர்', 'தந்தி கொடுப்பார் கலைஞர்'. தந்தி கொடுக்க என்ன செலவாகும் ? அதிக பட்சம் ஐந்து ரூபாய் ? ஆனால் பதவியை விட்டால்... பல்லாயிரம் கோடிகளில் லாபம் போகும்... பிள்ளைகளின் எதிர்காலம் போகும்... கடற்கரையில் 'உறங்க' இடம் இல்லாமல் போகும்.. இதில் காமெடி என்னவென்றால் இவருடைய தியாகங்களின் பட்டியலில் 'தந்தியடித்ததையும்' இவர் சேர்ப்பதுதான்.
புரட்சித் தலைவியோ இன்னும் அபாரம். 'போரென்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம்' என்று 'வசனம்' பேசியவர் திடீரென்று 'டயட் உண்ணாவிரத' நாடகம் நடத்துகிறார்.

இது தான் இன்றைய அஹிம்சை போராட்டங்களின் கேலிக்கூத்து.

அஹிம்சை வழியில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் முதல் மாரிமுத்து வரை எல்லாம் முட்டாள்களாகிப்போனார்கள்.
உலகமெங்கும் மூன்று மாதங்களாக ஊர்வலம் போய் போராடிய தமிழ் மக்கள் அனைவரும் சாதித்தது என்ன ?
ஹில்லாரி கிளிண்டன் ராஜபக்சேவுக்கு 'கடிதம்' எழுதுகிறார்... வேண்டுகோள் விடுக்கிறார்...

அஹிம்சை என்பது இன்றைய கால கட்டத்தில் ஏமாற்றுவதற்கான ஒரு எளிய முகமூடியாய் பயன்படுத்த முடிவதன் காரணம் என்ன?
உண்மையில் அஹிம்சைப் போராட்டம் ஒர் எல்லைக்குட்பட்டது.

ஜீவ மரணப் போராட்டத்தில் கண்டிப்பாக அஹிம்சை இருக்கமுடியாது. 'திலீபன்' என்ற 24 வயதுப் போராளி ஒருவனின் அஹிம்சை மரணம் உலகுக்கு உணர்த்தியது இதுதான்... 'பேரரசுகளுக்கு' சாமானியனின் அஹிம்சைப் போராட்டம் 'யானைக்கு கொசுக்கடி ' போலத்தான். ரொம்ப சாதாரணமானது.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே... செல்வத்தைத் தேய்க்கும் படை'.
'செல்வச்செருக்கு' மட்டுமல்ல தேயப்போவது..

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.