Saturday, July 1, 2017

தூக்கமின்மை, மன அழுத்தம் தீர இயற்கை மருந்து

மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் யாருடனும் சரியாகப் பேசமாட்டார்கள். உம்மென்றே இருப்பார்கள். சோகமாகவோ அல்லது கோபத்துடனோ காணப்படுவார்கள். நிகழ்வுகள் எதிலும் சகஜமாக பங்கெடுத்துக் கொள்ளமாட்டார்கள். எதையோ பறிகொடுத்த மாதிரியே இருப்பார்கள்.

இதைச் சரிசெய்ய துளசி, புதினா, பன்னீர் ஆகியவற்றை அரைத்து சம அளவு கலந்து எடுத்து வடிகட்டி தினமும் காலை, மாலை இருவேளையோ அல்லது மூன்று வேளையோ உணவுக்கு முன்பு குடித்து வர மன அழுத்தம் படிப்படியாகக் குறையும்.

பொருட்கள்:
துளசி இலைச் சாறு 50 மிலி.
புதினா இலைச் சாறு 50 மிலி
பன்னீர்                 20 கிராம்.

புதினா, துளசி இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்தும் சாறு எடுக்கலாம்.

இந்தச் சாற்றை கெட்டியாக தண்ணீர் விடாமல் அரைத்து அந்த விழுதை கண்களை மூடி கண்கள் மேல் வைத்து அரை மணிநேரம் அமைதியாகப் படுத்திருந்தால் அல்லது இரவு உறங்கும் போது கண்களின் மேல் வைத்து தூங்கினால் கண்களைச் சுற்றி உருவாகும் கருவளையம் சரியாகும்.

குடிப்பழக்கம் போக்கும் இயற்கை உணவு

குடிப்பழக்கம் உள்ளவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவர்களுக்கு குடிக்கும் எண்ணம் அதிகமாகிக் கொண்டே செல்லும். அவர்களின் கல்லீரல் ரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின் அளவை சுத்தப்படுத்தியபடியே இருப்பதால் பழுதாகி இருக்கும்.

அப்பழக்கம் உள்ளவர்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சாற்றை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்து வருவதன் மூலம் படிப்படியாக அதன் அளவைக் குறைத்துப் பின் முழுவதுமாக நிறுத்தச் செய்துவிடலாம்.

பாகற்  பழச்சாறு   2 டீஸ்பூன்
பாகற் கொடி இலைச்சாறு 2 டீஸ்பூன்
நெல்லிப்பொடி      2 டீஸ்பூன்
நன்னாரிப் பொடி    2 டீஸ்பூன்
பசுமோர்            50 மிலி

பாகற்பழம் என்பது பாகற்காய் பழமாகக் கனிந்ததை அரைத்து எடுத்த சாறு. பாகற்கொடியின் இலையை அரைத்து எடுத்த சாறும் வேண்டும். நெல்லிப் பொடியும் நன்னாரிப் பொடியும் இதனுடன் அரைத்து எடுத்து அவற்றை பசுமோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்து வரவேண்டும்.

குடிப்பழக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து குணமாக ஆறுமாதங்களோ அல்லது ஒரு வருடங்களோ ஆகலாம்.