Sunday, January 29, 2012

முத்துக்குமார்... செங்கொடி.. நாளை?

இவன் தான் முத்துக்குமார்...
  
சனவரி 29, 2009 அன்று காலையில் சென்னை பாஸ்போர்ட் ஆபிஸின் முன்னால் முள்ளிவாய்க்காலில் செத்துக்கொண்டிருந்த ஈழத்தமிழருக்காக
தன்னையே இப்படி எரித்துக்கொண்டு...
 இப்படி கரிக்கட்டையாய் ஆனான்... அவனுக்குப் பின் 14 பேர் அவன் வழியில்...
 முத்துக்குமாரைப் பின்பற்றிய 27 வயதேயான இந்தப் பெண் செங்கொடியும்...
 28 ஆகஸ்ட் 2011 ல் ராஜீவ் கொலையாளிகள் என்று தூக்குத்தண்டனை என்று 20 வருடங்களாக நீதி மறுக்கப்படும் மூன்று பேருக்காக இப்படி...
 தன்னையே எரித்துக் கொண்டாள்...
தமிழனின், ஈழத் தமிழனின் உடல்கள் இப்படி தீயிலும், தூக்கிலும், போரிலும், வல்லுறவிலும், வீடின்றி, வாழ்வின்றி அழிந்து போகையில்...

இதோ இவர்கள் எல்லாம் சொகுசாய்த்தான் வாழ்கிறார்கள்...

 மன்மோகன் சிங்... ராஜபக்க்ஷே...
அன்னை சோனியா...
சிவசங்கர் மேனன்.. கருணாநிதி.. 
 எம்.கே.நாராயணன்...
 நிரூபமா ராவ்...
  
ஈழத்தில் படுகொலையே நடக்கவில்லை என்று மறுத்த ஐ.நா.வின் செயலாளர் பான்-கி-மூனின் செயலாளர் விஜய் நம்பியார்...
இன்றைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா... அப்துல் கலாம்...இப்படி நிறையப் பேர் பட்டியலில் சேர்கிறார்கள்.

இதில் சிவசங்கர மேனன், நிருபமா ராவ், விஜய் நம்பியார், எம்.கே.நாராயணன் இவர்கள் எல்லோரும் மலையாளிகளாய் இருப்பது ரொம்ப தற்செயலானது தான்...