மாதர் சங்கங்களுக்கு ஒரு நற்செய்தி.. நமது IPL கிரிக்கெட் மேட்சுகள் ஆரம்பித்துவிட்டன. அதே போல ஒரு புட்பால் போட்டியும் வருகிறது. அதற்கு ஒரு விளம்பரம் எல்லா டி.வி.க்களிலும் பிரமாதப் படுத்துகின்றன. அப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஆடிப் போனேன்.
இரண்டு இளவயசுப் விடலைப் பசங்க எதையோ கூப்பனைத் தொட அது அவர்களை எங்கெங்கோ கொண்டு செல்லும். முதலில் அவர்கள் தலை வெளியே தெரியும் இடம் ஒரு காடு. இரண்டு பக்கமும் இரண்டு சிங்கங்கள். சிங்கங்கள் வாயைப் பிளக்க அவர்கள் உடனே குனிந்து எழ அடுத்து அவர்கள் எழும் இடம் காட்டு வாசிகள் மனித சூப் தாயாரிக்க தூக்கிச் செல்லும் பானை. அதற்குள் அவர்கள் இருப்பார்கள். திரும்ப அவர்கள் குனிந்து எழ இப்போது இருக்குமிடம் பீச். அவர்களின் தலையருகே ஒரு பெண் குப்புற அரை நிர்வாணமாக ஒரு நாற்காலியில் படுத்திருப்பாள். இவர்களின் தலை திடீரென் முளைத்ததைப் பார்த்ததும் அப்பெண் பதறி எழ ஜாக்கெட் அணியாத அவள் வெற்று மார்பு சில செகண்டுகள் தெரிய அந்தப் பெண் அதை துண்டைக் கொண்டு மறைப்பாள். இது ஒரு லாங்க் ஷாட்டாக காண்பிக்கப்படும். உடனே அந்த இளைஞர்கள் மீண்டும் குனிந்து நிமிர அவர்கள் தலை தெரிவது ஒரு புட்பால் கிரவுண்டில். புட்பாலை உதைக்க ஓடிவரும் வீரர் அவர்களின் தலை புட்பால் பக்கத்தில் தெரிவதைப் பார்த்து அவர்களை தூக்கி விடுவார். FIFA World Cup.
மாதர் சங்கங்களோ, இல்லை பெண்ணியவாதிகளோ யாராச்சும் இதை நிப்பாட்டனும்னு நினெச்சீங்கன்னா எதுனாச்சும் செய்யுங்க. இல்லை பெண்ணின் மார்பை கவர்ச்சிப் பொருளாப் பார்க்கிற ஆம்பளைங்களுக்கு இது ஒரு சவுக்கடின்னு நினைச்சீங்கன்னா உட்டுடுங்க. ஆண்கள் இதைத் தவறுன்னு சொல்லி போராட நிச்சயம் வரமாட்டாங்க.
பொட்டி போடுறதைப் போட்டுட்டேன். மத்தபடி உங்க இஷ்டம்.
04-ஏப்ரல்-2010.
யாரோ கவனிக்கிற விதத்தில கவனிச்சதுல அந்த அரைநிர்வாண கிளிப்பிங் அந்த அட்வர்டைஸ்மெண்டில் இப்போது இல்லை. நன்று.