Tuesday, December 23, 2014

சீவசுத்தமும் போஸ்ட் மார்டனிஸமும். :குளச்சல் மு. யூசுப்


பின்நவீனத்துவத் தை உயர்த்திப் பிடித்த, பொதுவுடைமை அமைப்பு சார்ந்த ஒரு இலக்கிய பிரிவின் கருத்தரங்கில் 12 ஆண்டுகளுக்கு முன் (குளச்சல் மு. யூசுப்)வாசித்த ஒரு கட்டுரை.
-------------------------------

பின்நவீனத்துவம் , பின்னைக் காலனியம், கீழைத்தேசியவாதம ் போன்ற பல் வேறு மாற்று சிந்தனை மரபுகள் இன்று, பின்தங்கிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பு சிந்தனைகளாக - அதாவது நமக்காக - மேலைநாட்டு அரசியல் ஆலோசகர்களின் பல் கலைக்கழக வராந்தாக்களில் உருவாகி இன்று, கீழைத்தேசப் பல்கலைக் கழகங்களின் தேனீர் விடுதிகளில் அபூர்வமாக விவாதிக்கப்பட்ட ு வருகின்றன.

மாற்று சிந்தனைகள், வெகுஜன நன்மைகளைக் கவனத்தில் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்சார்புடைய தாக, நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதாக, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளுடன் இணைத்துப் பார்த்து, விலக்கியும் சேர்த்தும் விவாதிக்கப்படு வதுதான் சரியான விவாத முறையிலாக இருக்க முடியும். ஆனால், இந்தியச் சூழலில் குறிப்பாக, தமிழ்ச்சூழலில் இவை முன்வைக்கப்படுக ிற முறையியல் அபத்தங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கின்றன.

அதிலொன்று குடி கலாசாரம் பற்றிய பின்நவீனத்துவப் பார்வை. குடியைப்பற்றி பின் நவீனத்துவம் தனக்கான ஒரு பார்வையைக்கொண் டிருக்கிறது. மேற்கத்திய மரபு; தட்ப வெட்ப நிலைகள்; அவர்களது பொருளாதார சூழல்களில் இந்தப் பார்வையில் ஒருவேளை தவறெதுவும் இல்லாமலிருக்கலா ம். ஆனால், தமிழ்நாட்டில், ஒரு தொழிலாளி அவனது மிகக் குறைந்த வருமானத்தில் பேட்டரிபோன்ற பல்வேறு விஷப்பொருட்கள் கலந்த மதுவை மண்டையைப் பிளக்கும் இந்த வெப்பமண்டல வெயிலில் குடிப்பான் என்றால், அவனது குடும்பம் நிச்சயமாக பின் நவீனத்துவம் வலியுறுத்தும் ‘சிதைவு’க்குள்ள ாகிவிடும்.

பின்நவீனத்துவ அறிவுஜீவிகள்? தொடர்ந்து முன்வைக்கும் ஒரு கருத்து: உலகில் இன்று அனைத்து வகையான கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டன. அவர்களது மொழியில் சொல்வதானால் ‘நீர்த்துப்போய விட்டன.’ ஆகவே, உலகோரே இனி மனிதனின் மோட்ச பிராப்திக்கென எஞ்சியிருப்பது பின்நவீனத்துவம் ஒன்றேதான்.

பின்நவீனத்துவம் , பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து எந்த விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறது என்று ஒரு எளிமையான, அதேசமயம் மிக முக்கியமான கேள்வியொன்றை நீங்கள் கேட்டால், “ஆலோசனை சொல்வது மாற்று மரபுகளின் வேலை கிடையாது. மட்டுமல்ல, நீங்கள் குறிப்பிடும் எளிமை, முக்கியம் என்பதெல்லாம் வெகுசனச் சொல்லாடல்கள். எது எளிமை, எது முக்கியமென்பதை உங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் ஒற்றை எளிமை; ஒற்றை முக்கிய மெனும் சிதைவுகளை மறுக்கும் சொல்லாடல்களை பின் நவீனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. "எனும் பதிலில் உங்களுடைய கேள்வி, நீங்கள் கேட்க நினைத்த பல கேள்விகளுடன் முடங்கிப்போய் விடலாம்.

உண்மையிலேயே தெரிந்துகொள்ளு ம் ஆர்வம் மிகுந்து இவர்களிடம் பேசுவது கதைக்கு உதவாது என்று முடிவு செய்து தமிழில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் தரவுகளைத் திரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் மாயாவாதத்திற்கு , புராணீக மரபு களுக்கு, குத்தகை முதலாளிகளுக்கு, சர்வதேசத் தரகர்களுக்கு, அரசு மற்றும் அதிகார இயந்திரங்களுக்கு ஆயில் போடுகிற வேலையை இந்த நவீனத்துவ தர்க்க சாஸ்திரிகள் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அவ்வளவு சுலபமாகக் காணலாம் என்று சொல்லி விடவும் இயலாது. முதலில் பின்நவீன வாசிப்புக்குட்ப டுத்த வேண்டும். பிறகு, நிர் - நிர்மாணம் (ஞிமீ நீஷீஸீstக்ஷீuநீ tவீஷீஸீ) செய்து பார்க்க வேண்டும். இதுவொரு நீண்ட பிராசஸ்.

‘ஈராக்கில் அமெரிக்கா அத்துமீறியது என்பது ஊடகங்கள் கட்டமைத்த புனைவு. இதில் எதுவுமே உண்மையில்லை.’ - இது ஒரு மாற்று சிந்தனை - இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நீதிபோதனை: ‘பாவம் அமெரிக்கா’ என்பதுதான்.

காரண காரியங்களை, யதார்த்த சிந்தனைகளை மாயாவாதம் மறுக்கிறது. பின் நவீனத்துவம் மறுக்கவொன்றுமில்லை. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வளவுதான். மக்கள் ஒன்றிணைவாக இருப்பதை அரசுகளும் மதவாதமும் நிறுவன விருப்பங்களும் ஒரு போதுமே அனுமதித்ததில்லை . கூடவே, இப்போது தமிழக பின்நவீனத்துவமும் கை கோர்த்துள்ளது. ஒற்றுமை, ஒன்றிணைவுகள் எல்லாம் ஜனநாயமற்றவை; ஒவ்வொரு மனிதனும் முதலில் அவனுக்குள்ளாவது ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டட்டும் என்று பின் நவீனத்துவம் மார்தட்டுகிறது. ‘அவனே அனைத்தும்; அகம்பிரம்மாஸ்மி ’ என்று சீவசுத்தி வாதம் அடக்கவொடுக்கமாகச் சொல்லிக்கொள்கிறது. மக்கள் தெளிவுடனிருப்பதை எந்தவொரு நிறுவனமும் அனுமதித்ததாக வரலாறே கிடையாது. ஆனால், சீவசுத்தமும் பின் நவீனத்துவமும் மனிதனின் இருப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

தமிழ்ச் சூழலில், தொழில் அடிப்படையிலும், பொருளாதாரம் சார்ந்தும் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களுக்கு வர்ணம்பூசி, பொருளாதாரப் பிரிவை வர்ணாஸ்ரமப் பிரிவு களாக்கும் முயற்சியை பின்நவீனத்துவம் மேற்கொள்ளுகிறது. முஸ்லிம்களினிடையிலும் மனு, புனர் - நிர்மாணம் ஆகிறான். பொருளாதார முரண் தகர்ந்து போனாலும் வர்ணம் தகர்ந்து விடாமலிருப்பதில பின்நவீனம் கரிசனம் கொண்டிருக்கிறது.

பஞ்சமர்கள் என்று ஐந்தாவது வர்ணம்பூசப்பட்ட தலித்துகளுக்குளளும் பின் நவீனத்துவம் புகுந்து அவர்களை மேலும் கூறுகூறுகளாகக் காட்டும் வேலையைத் தொடர்ந்து மேற் கொள்ளுகிறது. பின்நவீனத்துவம் புகுந்து கூறுகளாக்க முயற்சி செய்யாத ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கவே முடியாதென்பதுதான் இப்போதைய நிலை.

பின்நவீனத்துவம் வெறுமொரு பண்பாடு சார்ந்த கருத்தியல் அணுகுமுறை. இது சிறு அளவில்கூட மக்களைச் சென்றடைய முடியாது என்றெல்லாம் நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாது. பார்த்தீனியம் செடியை வெறும் தாவரமாக மட்டுமே பார்த்த அனுபவங் களும் நமக்கு இருக்கின்றன. அறிவு ஜீவிகளின் சுயபோகம் வழியாகப் பரவுகிற இந்த பின்நவீனத்துவக் கோட்பாடு, தான் வலியுறுத்தும் கருத்துக்களை சமூகத்தின் அடி மட்டத்திலிருந்தே கொண்டு போக வேண்டுமென்று எச்சரித்திருக்கிறது. சோவியத் ரஷியாவில் இதை மேலேயிருந்து கொண்டு போக வேண்டிய தேவை மேலை நாடுகளுக்கிருந் தது. நிர் - நிர்மாணம் நடந்தது. மூன்றாம் உலகநாடுகளில் இதை கீழேயிருந்து கொண்டு வர வேண்டுமாம்.

அதாவது, அமெரிக்கா நிர்வாக இயக்குனராக இருக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் முதலில் பன்முகப்படுத்தப்பட வேண்டும். (காலனிய ஆட்சியின் பிரித்தாளும் கொள்கை, இன்றைய நவீன காலனிய ஆட்சியில் பன்முகத் தன்மையாகப் பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது, ஒடுக்கப்பட்டோர்களது கூட்டுறவு உடைபட வேண்டும்.) தொழிற்சங்கவாதி களின் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். சாதியம், புனருத் தாரணம் செய்யப்படவேண்டு ம். மூடநம்பிக்கைகளைத் தொன்மம் என்று அறிவிக்க வேண்டும். நரமாமிசம் தின்பவர்களை பண்பாட்டுப் போராளிகள் என்று பெருமைப்படுத்த வேண்டும். இப்படியாக, வர்த்தகக் காலனியத்திற்கு இந்திய சமூகம் முழுவசதியையும் செய்துகொடுக்க வேண்டும். இதுவரைக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை பின் நவீனத்துவ கோட்பாடு சார்ந்த விஷயங்களாக நாம் புரிந்துகொள்வதில் தவறெதுவுமில்லை.

பின்நவீனத்துவத்தின் மிக முக்கியச் செயல்பாட்டுக்களமாக இருப்பது - அதா வது இவர்களால் விருப்பம்போல் குளறுபடி செய்ய இயல்கிற ஒரே துறை - இலக்கியம் தான். இதற்காக இவர்களை யாருமே கேள்வி கேட்க முடியாது. எழுதுபவனுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து இவர்களுக்கு அதீதமானப் புரிதல்களிருக்கின்றன. பாவம்! இது மட்டுமல்ல, ஒன்றரை மணிநேரம் கட்டுரை வாசித்தும் எதையுமே சொல்ல முடியாமல் விடும் இவர்களது திறமையும் தமிழ் பின்நவீனம் சார்ந்தது தான். இவர்கள் பெரும் தேடுதல் வேட்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினரும் ஆன்மிகத்தில் களவொழுக்கம் பேணுபவர்களாக இருப்பதால் இதனை அகமன வேட்கை என்றும் சொல்லி விட முடியாது. விதிக்கோட்பாடுகளை இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘பிளே’ என்றுதான் சொல்லவேண்டும். தெரிதாவோ யாரோ அப்படித்தான் சொல்லியிருக் கிறார்களாம்.

குறிப்பாக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை எடுத்துக் கொண்டால் அண்மைக் காலங்களில் இப்பரிசுகள் பெரும்பாலும் பின் நவீனப் படைப்புகளுக்கு அல்லது இந்தக் கூறுகளை அதிகமாகக் கொண்ட படைப்புகளுக்கே கிடைத்து வருகின் றன. இதனுள்ளிருக்கும் பிரதான அரசியல் அம்சம், நோபல் விருதுக்கென தேர்ந்தெடுக்கப்படுகிற பின்நவீன மனிதர்கள் மேற்குலகம் சாராதவர்களாகவும் தமது நாடுகளின் மேற்கத்திய எதிர் மனோபாவங்களை பின் நவீனப் பகடிக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியவாதியும் மனிதர்கள்தானே? அமெரிக்காவின் பச்சை அடையாள அட்டையையும் நோபல் விருதும் என்றால் சும்மாவா?

சரி, ஒரு இலக்கியப் படைப்பில் பின் நவீனத்துவம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால் அறிவியல் முன்னேற்றம் மற்றும் புதிய பொருளாதாரப் பாய்ச்சலின் காரணமாக இளமையின் துவக்கத்திலேயே வெறுமையும் எரிச்சலும் தானுட்பட எல்லாவற்றின் மீதான வெறுப்பும் முளைவிடுகின்றன. காட்சிப் படிமங்கள் எதுவும் மூளைக்குத் தட்டுப்பட மறுக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மூளைக்குத் தொடர்பேற்படுத்தாத பின் நவீன மொழியமைப்பு இவர்களுக்கு ஆறுதல் தருகிறது. இதனை அனுபவித்த பின் நவீனத்துவ படைப்பாளிகள் அப்படியே வெளிப்படுத்தவும் செய்கின்றனர். மூளையை ஸ்பரிசிக்காத மொழியமைப்பு சாத்தியம்தானா என்றால் சாத்தியம்தான்! உதாரணமாக, கூட்டாஞ்சோறு என்பதை ‘சிதைவுகளின் ஒழுங்கமைவுச் சோறு’ என்று சொல்லிப் பாருங்கள். பெரிய அளவிலொன்றும் பொருள் வேறுபாடும் இருக்காது; ஆளைத் தொந்தரவும் செய்யாது.

பின்நவீனம்,பெண்ணியம் குறித்தும் திட்டவட்டமானப் பார்வைகளை வைத்திருக்கிறது. பாலினம் சார்ந்த பலவீனங்கள், மாதாந்திர சிரமங்கள், மறு உற்பத்திபோன்ற அனைத்துமே ஆணாதிக்க மனங்களின் வெளிப்பாடு. விலங்குகளிலும் பால் வேறுபாடு சார்ந்த உருவ வேற்றுமைகள் இருப்பது, உயிரினங்களின் ஆண்-பெண் கர்ப்பகால வேறுபாடு போன்ற அனைத்தையுமே பின்நவீனம் பாலின மனோபாவக் கோளாறாகவே பார்க்கிறது. பின் நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடான உண்மை என்பது ஒன்றல்ல என்பதை இங்கே பொருத்திப் பார்த்து சலித்துக்கொள்வது சரியாக இருக்கும்.
தலித்துகள், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்டோர மற்றும் அடித்தட்டு மக்களின் எளிய நியாயங்களுக்கும, மெக்காலேயின் உற்பத்திக் கூடங்களில் வளர்ந்தவர்கள், அரசு மற்றும் நிறுவனங்களின் புரியாத பதிலுக்குமான இடைவெளிகள் இந்த நிமிடம்வரை குறைவதாகத் தெரியவில்லை.

நன்றி - குளச்சல் மு. யூசுப்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.