Friday, July 15, 2011

உறவுகள்...நட்புகள்..வாழ்க்கை.

மனிதர்கள் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். இறக்கிறார்கள்.
இதில் புத்தியுள்ள மிருகம்
தப்பிப் பிழைக்கிறது.
தாவி ஏறுகிறது.
கப்பலைக் கைப்பற்றுகிறது.

காலால் கழுத்தை மிதிப்பது ?
கொக்கரிக்கும் சிங்களனோ..
ஈனத் தமிழனோ..
சொந்த நண்பனோ..
மேல் வர்க்கமோ..
மேலழுத்தும் ஆங்கில நாடோ..
அடிக்கும் பெண்ணோ..
கொல்லும் ஆணோ..
எல்லாவற்றிலும் பொதுவாய்
எழுந்து நிற்பது
நான். நான் மட்டுமே.

ஆக.. பிழைத்திருப்பது
புத்தியுள்ள மிருகம்..மற்றும்
வினயமுள்ள மிருகம்.
புத்தியுள்ள, வினயமுள்ள மிருகம் காட்டும்
டார்வினின் தீர்க்க தரிசனம்...
பொதுவுடைமைகளைப் பார்த்து
கேலியாய் சிரிக்கிறது.
டார்வினோ அம்மணமாய்
கூனிக் குறுகி...

அறிவு கொண்டு பதில் சொல்லத்
தவிக்கும் பொதுவுடைமை
நானாகி செத்துப் போகிறது.

நானும்... நானாகி...
நாளை செத்துப் போவேன்.
நீயும் நானாகி நாளை
செத்துப் போவாய்.
ஏன் நீங்களும் கூட !

உறவுகள்.. நட்புகள்...வாழ்க்கை..
அன்புள்ள, புத்தியுள்ள..வினயமுள்ள
மிருகங்களுக்கு மட்டுமே.
மிருகங்களின் வாழ்க்கை மிருகத்தனமானது
என்பது உண்மைதான்.

உறவுகள்...நட்புகள்...வாழ்க்கை..
மிருகங்களுக்கு மட்டுமே.
மனிதர்கள் ? யார் அவர்கள் ?